jump to navigation

2012 கிட்ட நாம எதிர்பார்க்குறது என்னன்னா…. December 31, 2011

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை.
add a comment

அப்புறம் மக்கா … நாளைக்கு புத்தாண்டு 2012 பிறக்க போது .. நம்ம இந்த வருசத்துகிட்ட இருந்து எதிர் பார்க்குறது என்னா அப்படின்னா …

  • இந்த தானே புயல் மாதிரி திடீர் திடிர்ன்னு வராம கரெக்டா பருவ காலத்துல மழை..
  • வெய்யில் காலத்துல நல்லா சுரிர்ன்னு உரைக்கிற மாதிரி வெய்யில்..
  • கட்டே ஆகாத கரண்ட்
  • அணு உலை தேவைப்படாத மாற்று எரிசக்தி
  • நதிகளை இணைக்கிறத பத்தி குறைந்த பட்சம் பேச்சு வார்த்தை
  • டாம் 999 க்கு ஒரு தீர்வு
  • இதுக்கு மேலயும் கூடாத பெட்ரோல் விலை :(
  • கொலவெறி மாதிரி இன்னும் நெறைய கருத்தாழம் மிக்க பாடல்கள் ;)
  • கொஞ்சமாவது பலம் வாய்ந்த லோக்பால் மசோதா
  • கொஞ்சமாவது செயல்படுற பிரதமர்
  • கூடிய சீக்கிரம் சச்சினுக்கு நூறாவது செஞ்சுரி (அவரை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்ல ? :(   )
  • திகார் ஜெயில் முழுசும் நம்ம அருமை ஊழல்வாதிகள்
  • தயவுசெஞ்சி சென்னைக்கு மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள்
  • மூணு மாசத்துக்கு ஒரு பவர் ஸ்டார் படம்
  • வருசத்துக்கு ஒரு தலைவர் டி. ஆர் படம்! (அதுக்கு மேல நாடு தாங்காது பாஸ் ;) )

இது மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தா சரி…

உங்க எல்லாதுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .. மறுபடியும் அடுத்த வருஷம் சந்திப்போம் ;) வர்ட்டா …

பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை December 27, 2011

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , ,
4 comments

நம்ம பவர் ஸ்டார் இருக்கார் இல்லையா?? .. என்னது ?? அவர உங்களுக்கு தெரியாதா?? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க??

நித்தியா மேனனுக்கே மிரட்டல் விட்டவரு அய்யா நம்ம பவர் ஸ்டாரு … (நல்லா படிக்கணும் பாஸ் !! நித்யா மேனன் .. நித்யானந்தா கெடயாது ;) )

அவரை பத்தி ட்விட்டர்ல பேசுறாங்க.. Facebookல பேசுறாங்க.. ஒவ்வொரு நாளும் டிவில பெட்டி எடுக்குறாங்க .. ஆளே வராத லத்திகா படத்த 250 நாள் கடந்து வெற்றிகரமா ஓட வச்சிகிட்டு இருக்குறவர் தான்யா எங்க பவர் ஸ்டார் தேங்கா சீனிவாசன் … ச்சே ச்சே .. டங் ஸ்லிப் ஆயிருச்சி … டாக்டரு சீனிவாசன் ….

(more…)

ட்விட்டரில் ஒரு ராமாயணம் December 26, 2011

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
add a comment

வர வர இந்த ட்விட்டர்ல இருக்குறவங்க அலும்பு தாங்க முடியல …. ஏதேதுக்கோ Hash Tag வச்சி… இப்போ 140 கேரக்டர்ல  ராமாயணம் கதை சொல்.. அப்படின்னு #140inramayan அப்படின்னு ஒன்ன ஓட்டி… ஷப்பா… இருந்தாலும் நெறைய ரசிக்க கூடிய Tweets இருக்க தான் செஞ்சது .. கொஞ்சத்த இங்க நம்ம பார்க்கலாம்

(more…)

FlashMob – பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது December 21, 2011

Posted by anubaviraja in சென்னை, செய்திகள், நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
add a comment

கொலவெறி வெற்றிக்கு அப்புறமா இப்போ YouTube தான் ரொம்ப பாப்புலரா ஓடிகிட்டு இருக்கு..  கொஞ்ச நாளா trending topic ல FlashMob, FlashMob… அப்படின்னு ஒன்னு ஓடிகிட்டு இருக்கு… எல்லாம் நமக்கு Facebook மூலமா கெடைக்கிற அப்டேட் தான்..

நான் கூட FlashMob அப்படின்னா Flashல செஞ்ச அனிமேஷன் அப்படின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்… அப்புறம் தான் அதுக்கு அர்த்தம் பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது அப்படின்னு நம்ம Wikipedia அண்ணாத்த சொன்னாரு . உலகத்துல பல இடங்கள்ல நடந்துகிட்டு இருக்குற FlashMob இப்போ நம்ம நாட்டுலயும் வந்துறிச்சாம் பாசு… FlashMob அப்படிங்கறது பப்ளிசிட்டி, விளம்பரம் இது போன்ற விசயங்களுக்காக செய்றது..

 

(more…)

Y This கொலவெறி #Kolaveri – ஒரு பின்நவீனத்துவ பார்வை November 25, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
4 comments

அன்பார்ந்த மக்களுக்கு … இப்போ எங்க பார்த்தாலும் ஒரே கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உளமார்ந்த கடுப்புடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் ..

அது ஒன்னும் இல்லங்க .. நம்ம தலிவரோட பொண்ணு டைரக்ட் பண்ணி, அவரோட மருமகன் ஹீரோவா நடிக்க, ஒலக நாயகன் கமலோட கலை வாரிசு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிச்சி 3 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க ..

அந்த படத்தோட ஒரு பாட்டு இன்டர்நெட்ல லீக் ஆயிருச்சி.. சரி மத்தவங்களா இருந்தா லபோதிபோன்னு புலம்பி எல்லா எடத்துலயும் காபிரைட் பிரச்சனைய கெளப்பி பாட்ட தூக்கிருப்பாங்க .. இவங்க கொஞ்சம் வித்யாசமா யோசிச்சி அதையே ஒரு வீடியோவா எடுத்து ஒரு சிங்கிள் ஆல்பமா ரிலீஸ் பண்ணி ஒரு பரபரப்ப உருவாக்கிட்டாங்க.. (ஒரு விளம்பரம் … ;) ) இதோ அந்த வீடியோ … உங்களுக்காக

(more…)

இந்த டீ கடையில டீ கிடைக்காது.. November 19, 2011

Posted by anubaviraja in சென்னை, பிடித்தவை, ரசித்தவை.
2 comments

நம்ம தமிழ் மக்களோட கற்பனை சக்திக்கு ஒரு அளவே கடயாது இருந்தாலும் நம்ம மக்கள் இங்கிலீஷ் காரன் கண்டுபிடிச்சா மட்டும் அது அவங்களுக்கு ரொம்ப ஒசத்தி ;)

இந்த சிட்டி பசங்களும் பொண்ணுகளும் போடுற t Shirt ல என்னென்னவோ எழுதி இருக்கும் … சில வார்த்தைகள் எல்லாம் ஒன்னும் புரியாது :)

(more…)

ok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… November 17, 2011

Posted by anubaviraja in சினிமா, தமிழ், பிடித்தவை.
Tags: , , , , , , , , ,
add a comment

கொஞ்சம் நாளா ஒரே சீரியஸ் படமா வந்து கிட்டு இருக்கு பாஸ் … அக்சன், அதிரடி, மறுஜென்மம், மரபணு, ஆப்கான் தீவிரவாதி ;) … இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி ??

அதான் நம்ம தலைவர் சந்தானம் … அதிரடி ரணகளமா … ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல களம் இறங்கிட்டார் :)

ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி கூட்டணியோட களம் இறங்குரதால ஹாட்ரிக் அடிப்பங்கன்னு நம்பலாம் :)

ட்ரைலர் சூப்பர் …

அதுல பாருங்க சந்தானம் பேரு தான் முதல்ல வருது.. ஹீரோ உதயநிதி ஸ்டாலினாம் ;)

இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு சொல்லுமாறு .. தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் :) :)

இதனால் பொது ஜனங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா…. November 16, 2011

Posted by anubaviraja in நடந்தவை.
4 comments

அன்பார்ந்த பெரியோர்களே… தாய்மார்களே… நண்பர்களே.. மற்றும் பொது ஜனங்களே .. எல்லாருக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லிக்க ஆசைபடுறேன்.. இன்று முதல் … இந்த ப்ளாக்க்கு மூடு விழா… அதாவது இனிமே நான் இந்த ப்ளாக் ல எழுத போறது இல்ல… (யாருடா அங்க கை தட்டுறது… ) என்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப மகிழ்ச்சி போல தெரியுது…

அவ்ளோ சீக்கிரம் அதெல்லாம் நடக்க விட்ருவோமா என்ன ??? அதாவது .. இந்த எடத்துல எழுத மாட்டேன்னு தான சொன்னேன் … அட்ரெஸ் மாறி வேற இடத்துக்கு போயாச்சி…

இப்போ நான் எந்த எடத்துல கடை போட்டிருக்கேன் அப்படின்னா … டபிள்யு… .. டபிள்யு … டாட் … tmraja டாட் காம்… www.tmraja.com

கொஞ்சம் காசு செலவு பண்ணி இந்த பேருல வெப்சைட் விலைக்கு வாங்கி… ஏதோ இணைய உலகத்துல நாமளும் நடக்க ஆரம்பிச்சிட்டோம் :)

இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படின்னு கேப்டன் பிரபாகரன் படத்துல நம்ம கேப்டன் சொன்ன மாதிரி … நீங்க என்ன சொல்றிங்க அப்படிங்கறத பொறுத்து தான் என்னோட அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் – சொல்லிட்டேன் ஆமா !!!! ;)

நீங்க எல்லாரும் என்ன நினைக்ரிங்க அப்படின்னு கீழ இருக்குற டப்பால சொல்லிட்டு போய்டிங்க அப்படின்னா வசதியா இருக்கும் :) நான் இங்கயே இருக்குறதா – இல்லாட்டி கடைய காலி பண்ணிட்டு ஊர பாக்க போயட்றதா அப்படின்னு :) :)

செவ்வாய் தோறும்.. மோரியுடன் – ஒரு வாழ்க்கை பாடம்… October 2, 2011

Posted by anubaviraja in பிடித்தவை, புத்தகம், ரசித்தவை.
Tags: , , , , ,
5 comments

நான் அதிகமா படிப்பேன் அப்படின்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. ஆனா ஆங்கில நாவல்களை பொறுத்த வரைக்கும் நான் எந்த ஒரு புத்தகத்தையும் தொட்டு கூட பார்த்தது கெடயாது.. திடீர்ன்னு ஒருநாள் ஒரு நண்பர்  … ஒரு புத்தகத்த பத்தி உங்க ப்ளாக்ல  எழுத முடியுமா அப்படின்னு கேட்டார்.. என்னடா இது நாம என்ன அவ்ளோ பெரிய அப்படக்கர் பதிவரா ? அப்படின்னு சந்தேகம் வந்தது.. சரி இருந்தாலும் நம்மளையும் மதிச்சி  கேட்டாங்களே… அப்படின்னு சரி குடுங்க கண்டிப்பா எழுதுறேன் அப்படின்னு சொல்லி வாங்கி பார்த்தேன்…

தலைப்பே ரொம்ப வித்யாசமா இருந்தது .. “Tuesdays with Morrie – an old man, a young man, and life’s greatest lesson”

(more…)

தமிழ் நாடே பத்தி எரியும் .. தலைவர் போஸ்டர் மேல கை வச்சிட்டிங்கல்ல?? August 1, 2011

Posted by anubaviraja in Uncategorized.
7 comments

இது வரைக்கும் எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு காரியம் … பெட்ரோல், டீசல், விலை உயர்வ கண்டிச்சி போராட்டம் அறிவிச்ச ஒரே கட்சி … அது நம்ம லதிமுக தான் ….

(more…)

Follow

Get every new post delivered to your Inbox.