சிவா மனசுல சக்தி – சந்தானத்துக்கு ஆஸ்கார்…. July 19, 2009
Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை.Tags: ஆஸ்கார், சந்தனம், சினிமா, சிவா மனசுல சக்தி, தமிழ், விமர்சனம்
trackback

நீங்க இன்னும் யூத் தானா?? கண்டுபிடிக்கிறதுக்கு ஒரே வழி – ஒரே கேள்வி – உங்களுக்கு சிவா மனசுல சக்தி புடிச்சிருக்கா ?? ஆமாம் அப்படின்னா நீங்க யூத் இல்லினா நீங்க ஓல்ட் பார்ட்டி . நான் எப்டின்னு கேக்குறிங்களா ? எனக்கு தான் படம் ரொம்ப பிடிச்சிருக்கே
ஒன்னும் புது கதை எல்லாம் இல்லைங்க , ஆரம்பத்துல ஹீரோ ஜீவா ஹீரோயின் கிட்ட மிலிடரி ஆபிசேர் அப்படின்னு டுபாகூர் விடுறாரு , அதே மாதிரி அந்த பொண்ணும் நான் air hostess அப்படின்னு புளுகுது , கடைசில ஜீவா கூரியர் பையன், அந்த பொண்ணு ரேடியோ ஜாக்கி அப்படின்ன்னு தெரிஞ்சதும் மோதல் – காதல் – ஒண்னு சேரல் அப்படின்னு வழக்கமான தமிழ் சினிமா கதை தான். ஆனா அத சொன்ன விதம்
ரொம்ப ஜாலியான ஒரு கதை களம் எடுத்துட்டு டைரக்டர் சும்மா புகுந்து விளையாடிருக்குறார். படம் முழுக்க நகைச்சுவை பரவி கெடக்குது . என்ன பொருத்தவரைக்கும் இந்த்த படத்தோட உண்மையான ரெண்டு ஹீரோ ஒண்னு யுவன் – எல்லாமே அருமையான பாடல்கள். அப்புறம் நம்மாளு சந்தனம். கவுண்டர் ஸ்டைல் காமெடி இவருக்கு நல்லா கை குடுக்குது.
சில ஹைலைட் காமெடி :
- முதல் தடவை பாருக்கு போகும் போது, மிச்சம் இருக்குற சைடு டிஷ் எல்லாம் carry பெக்ல எடுத்து போட்டுட்டு , மினி பீர் வச்சிக்கிட்டு உட்கார்ந்டுருக்குற சத்யன பார்த்து டென்ஷன் ஆகும் போது ….
- சக்திய தேடி ஏர்லைன்ஸ் ஆபீஸ் போய் ஷகீலாவ பார்த்து ஜீவா அசிங்கப்பட்டு நிக்கும் போது விழுந்து (நெஜமாவே ) விழுந்து சிரிக்கும் போது….
- சத்யம் தியேட்டர் வாசல்ல – ப்ளாக் டிக்கெட் விக்கும் ஜீவாவ கலாய்க்கும் போது
- கும்பல் of குர்காஸ் அப்படின்னு பல்பு வாங்கிட்டு நிக்கும் போது ….
- தியேட்டர் குள்ள போய் ஸ்க்ரீன் கிழிச்சி தூக்குல தொங்குன்னு ஜீவாவ செதைக்கும் போது…
- ஒவ்வொரு தடவையும் “ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு felling “ அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசும் போது…
- ஒவொரு தடவையும் தன்னோட புது மொபைல் போன ஜீவா உடைக்கும் போதும் அழுமுஞ்சி ரியாக்சன் காட்டும் போது …
- கடைசில பார்ல இப்போ அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு அப்டிங்க்ரியா ?? இல்லை அப்ப்டிங்க்ரியா ?? அப்படின்னு கேட்டு அதுக்கு ஜீவா சொல்லுற ” தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ” அப்படி சொல்லுறதுக்கு ரியாக்சன் குடுக்கும் போது …
பாஸ் கலக்கிடிங்க கீப் இட் up!!
நான் மட்டும் ஆஸ்க்கார் கமிட்டில இருந்தா இந்த வருசம் அவார்ட் சந்தனத்துக்கு தான்
நீங்க ஏதோ புதுசா சொல்லியிருக்கீங்கன்னு நினைச்சேன்.
இந்த காமெடிக்காகவா. SMS ல நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா சந்தானத்தோட பெரும்பாலான காமெடிகளை ‘கவுண்டர்’ ஏற்கெனவே பண்ணிட்டார். சந்தானம் இந்த காலத்தில புழக்கத்தில உள்ள வார்த்தைகளை பயன்படுத்துறார்.
சில இடங்களில் நன்றாகத்தான் செய்கிறார்.
ஆமாம் பாஸ் … அது என்னோவோ உண்மை தான் – கவுண்டர் பண்ணாத காமெடியே கெடயாது … இருந்தாலும் இப்போதைக்கு , சந்தானம் நல்லா பண்ணுறாரு , மேலும் சந்தந்துக்கு ஆஸ்கார் அப்படிங்கறது அவரு ஸ்டைல் ல ஒருத்தர அசிங்கபடுதுறது
மத்தபடி இதுல வேற எந்த உள்நோக்கமும் கெடயாது
[...] SMS படம் எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் . இப்போ அதே டீம் கலக்கலா [...]
[...] SMS படம் எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் . இப்போ அதே டீம் கலக்கலா [...]
[...] SMS படத்துல ஜீவாவ அசிங்கபடுத்துறதுல ஆகட்டும் [...]
[...] சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி [...]