கடுப்பு கவிதை எழுதி Facebookல் வெறுப்பேற்றும் கலை.. July 26, 2011
Posted by anubaviraja in எதுலயும் சேராது, நகைச்சுவை, நடந்தவை.Tags: கடுப்பு, கவிதை, தத்துவம், மொக்கை, வெறுப்பு, Facebook
trackback
Disclaimer: மக்களே இந்த பதிவ படிச்சிட்டு உங்களுக்கு எதாவது ஆச்சின்னா கம்பெனி காரணம் இல்ல அப்படின்னு சத்தியம் பண்ணிட்டு மேல படிங்க … அட .. மேலன்னா மேல பார்த்து தெய்வ திருமகள் விக்ரம் மாதிரி படிக்காதிங்க … மேற்கொண்டு படிங்கன்னு அர்த்தம்
அன்றொரு நாள் … சொந்த ஊருல இருந்து மதுரைக்கு பஸ்ல வந்துகிட்டு இருந்தேன் … அது ஒரு அரசு பேருந்து … பஸ் பாக்குறதுக்கு கொஞ்சம் பந்தாவா இருக்கே சீக்கிரமா போயிறலாம் அப்படின்னு நம்பி போய் எறியாச்சி… டிரைவர் ஸ்டார்ட் பண்ண அழகு இருக்கே … அடடே … நாப்பதுக்கு மேல போகவே மாட்டேன்கறார் .. இதுல அவருக்கு இடையில இருவது நிமிஷம் உணவு இடைவேளை வேற … (சாலையோர உணவகத்துல எல்லாம் இவங்களுக்கு ப்ரீயா சாப்பாடு போட்டு சிகரட் பக்கெட் வேற குடுக்குறாங்க பாருங்க .. ) செம கடுப்பயிட்டேன் ..
இப்போ தான் நாம கையில Android போன் இருக்குதே… சரி யாம் பேட்டர கடுப்பு பெருக இவ்வயகம் … அப்படின்னு கடுப்பு கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேன் … Facebookல தான்
முதல்ல எச்சரிக்கை மணி அடிச்சிட்டு தான் ஆரம்பிச்சேன் ..

முதல் கவிதை?!?! அந்த பஸ் பத்தி தான் …

அப்புறம் ரோடு பத்தி … கடைசில கருத்து கூட இருக்கு

Next, மக்கள் படுற கஷ்டத்த பத்தியும் நம்ம கவிதை எழுதுற ஸ்டைல் பத்தியும் ஒண்ணு…

அடுத்தது – அதுவும் கொஞ்சம் கொடுரம் தான் …

கடையசியா இது இருக்குறதுல கொஞ்சம் கம்மியா மொக்கை போட்ட கவிதை
இதெல்லாம் படிச்சி பார்த்துட்டு கடுப்பாகி எங்க போறீங்க ?? நீங்களும் facebook ல அப்டேட் பண்ண போறிங்களா?? ஆள விடுங்க சாமி …

simply super
எனக்கெனவோ வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி இருக்கு
யோவ்… FBல காண்டு கிளப்புனது போதாதுன்னு இங்க வேறயா!! ஏன் பாஸ் இப்படி.. வலிக்கு:(
ஹா ஹா .. நம்ம யோசிச்ச ஒரு விசயத்த உலகத்துக்கு எல்லாம் சொல்ல வேண்டாம் ??
[...] ஓடிகிட்டு இருக்கு… எல்லாம் நமக்கு Facebook மூலமா கெடைக்கிற அப்டேட் [...]