2012 கிட்ட நாம எதிர்பார்க்குறது என்னன்னா…. December 31, 2011
Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை.trackback
அப்புறம் மக்கா … நாளைக்கு புத்தாண்டு 2012 பிறக்க போது .. நம்ம இந்த வருசத்துகிட்ட இருந்து எதிர் பார்க்குறது என்னா அப்படின்னா …

- இந்த தானே புயல் மாதிரி திடீர் திடிர்ன்னு வராம கரெக்டா பருவ காலத்துல மழை..
- வெய்யில் காலத்துல நல்லா சுரிர்ன்னு உரைக்கிற மாதிரி வெய்யில்..
- கட்டே ஆகாத கரண்ட்
- அணு உலை தேவைப்படாத மாற்று எரிசக்தி
- நதிகளை இணைக்கிறத பத்தி குறைந்த பட்சம் பேச்சு வார்த்தை
- டாம் 999 க்கு ஒரு தீர்வு
- இதுக்கு மேலயும் கூடாத பெட்ரோல் விலை
- கொலவெறி மாதிரி இன்னும் நெறைய கருத்தாழம் மிக்க பாடல்கள்
- கொஞ்சமாவது பலம் வாய்ந்த லோக்பால் மசோதா
- கொஞ்சமாவது செயல்படுற பிரதமர்
- கூடிய சீக்கிரம் சச்சினுக்கு நூறாவது செஞ்சுரி (அவரை பார்த்தா உங்களுக்கு பாவமா இல்ல ?
) - திகார் ஜெயில் முழுசும் நம்ம அருமை ஊழல்வாதிகள்
- தயவுசெஞ்சி சென்னைக்கு மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள்
- மூணு மாசத்துக்கு ஒரு பவர் ஸ்டார் படம்
- வருசத்துக்கு ஒரு தலைவர் டி. ஆர் படம்! (அதுக்கு மேல நாடு தாங்காது பாஸ்
)
இது மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தா சரி…
உங்க எல்லாதுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .. மறுபடியும் அடுத்த வருஷம் சந்திப்போம்
வர்ட்டா …
Advertisement

Comments»
No comments yet — be the first.