jump to navigation

மாட்ரிக்ஸ்- அப்படி என்ன தான் இருக்கு… January 31, 2009

Posted by anubaviraja in சினிமா, ரசித்தவை.
Tags: , , , ,
10 comments

matrix-tut-2

மறுபடியும் வணக்கம். இந்த  தடவை எனக்கு புரிஞ்ச மாட்ரிக்ஸ் கதைய கண்டிப்பா சொல்லிருறேன்..

அண்டர்சன் அப்படின்னு ஒருத்தன் ப்ரோக்ரமேர் வேலை பார்த்துக்கிட்டு இருக்கான். அவன் தான் நம்ம  ஹீரோ… அவன் வேலைய மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா பிரச்சனையே இல்லையே (நீ மட்டும் எப்படினு கேட்காதிங்க).. அப்படியே சைடுல நியோ அப்படிங்குற  பேர்ல ஹாக்கிங் வேற பண்ணுறான்.. டேய்.. ஹக்கேர் அப்படினா யாருன்னு நீங்க கேட்குறது  எனக்கும் புரியுது… அதாவது  எந்த ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ரமையும் உடைச்சி நடுவீட்டில் நின்று கொண்டு ‘இதோ பார் உன் வீட்டினை உடைத்து விட்டேன் ” அப்படின்னு சொல்லுறது..

கொஞ்சம் நாட்களா அவனோட கம்ப்யூட்டர்ல ” மாட்ரிக்ஸ்னா  இன்னா நைனா ” அப்படின்னு ஒரு மெசேஜ் ஓடிகிட்டே  இருக்கு.. சைலெண்டா போய்கிடுருண்ட அவனோட வாழ்கைல ஒரு சஞ்சலம்… அதாவது “யாரடி  நீ மோகினி”  படத்துல நயன் தாரவ பார்த்ததுமே தனுஷ் ஆவரே அதே மாதரி…

அப்புறம் சில மர்ம போன் கால்கள்… போலீஸ் விசாரணை.. போலீஸ்ல பிடிபடுறது… போலீஸ் கிட்ட இருந்து தப்பிகுறது… இப்படியே கதை போகும்… அப்புறமா நம்ம நூறாவது நாள் சத்யராஜ் மாதிரி  ஒரு மொட்டை தலையன் (பேரு மார்பியஸ்.. )   நம்ப நியோவ காப்பாத்தி அவனோட எடத்துக்கு கூட்டிட்டு வாரன்..

நியோவுக்கு மாட்ரிக்ஸ்னா என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கிற ஆசை… அப்போ மார்பியஸ் நியோவிடம் ஒரு கேள்வி கேட்குறான் . ‘இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால், நீ பழையபடி உன் வாழ்க்கையைத் தொடரலாம். பாதுகாப்பான வாழ்க்கை. ஆனால் சுதந்திரமான வாழ்க்கையா என்று தெரியாது. சிவப்பு மாத்திரையை எடுத்துக்கொண்டால், நீ திரும்பிப் போக முடியாது. ஆனால், மாட்ரிக்ஸ் என்றால் என்ன என்று தெரியும். பாதுகாப்பான வாழ்க்கை இருக்கவே இருக்காது. எதை எடுத்துக்கொள்கிறாய் ‘ (அதாவது பொண்ணு பார்க்க போகும் போது எல்லாருக்கும் இதே மாதிரி ஒரு கேள்வி கேட்பாங்க “பொண்ணு பிடிச்சிருகானு ” அந்த கேள்விக்கும் இதே மாதிரி அர்த்தம் தான்..   )  அந்த கேனை  பய செகப்பு மாத்திரைய எடுத்து முழுங்கிடுறான்… (விதி…. வலியது ..)

அப்போ தான் தெரியுது எல்லாரும் நெனைச்சி கிட்டு இருக்குறது  மாதிரி அது 1998  கிடையாது 2100 ன்னு… (அப்படியே ஒரு பிளாஷ் பாக்.. )

மனுசங்க வேலை பார்குறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு மூளை உள்ள மிஷன் களை கண்டு பிடிச்சி தொலைசிருரங்க  (எந்திரன் படத்துல நம்ம  ரஜினி கண்டு பிடிக்குறது மாதிரி )  …  மூளை உள்ள மிஷன் இவன் பண்ணுற அட்டகாசம் பார்த்துட்டு சும்மா இருக்குமா.. மனுசங்கள எல்லாம் அடிமையாக்க ஆரம்பிச்சது. மனுசங்க  புத்திசாலித்தனம் ஆ யோசிகிறேன்னு  சூரிய வெளிச்சம் இருந்தா தான  மெஷின் எல்லாம் ஓடும்னு சூரியனே தெரியாத மாதரி ஒலகத்தையே மேகங்கள வச்சி மறைச்சுடாங்க..

மனுசனே இவ்வளவு  யோசிச்சா மிஷன் எவ்வளவு  யோசிக்கும்… ஒவ்வொரு மனுசனோட உடம்புக்குள்ளயும் கரண்ட் இருக்குதாம் .. (அதுனால கரண்ட் இல்லாத நேரம் அத எடுத்து பேன்  ஓட வைக்க முடியுமான்னு கேட்காதிங்க) அதுனால மனுசங்கள மல்லாக்க படுக்க போட்டு மிஷன்   எல்லாம் கரண்ட் எடுக்க ஆரம்பிச்சிருச்சி..(இப்போ என்ன செய்விங்க… இப்போ என்ன செய்விங்க..)   சரி அப்படியே மல்லாக்க படுக்க போட்டு வச்சிருந்தா எவ்வளவு நாள் உசிரோட இருப்பானுங்க. அதுனால.. பிரியாணியும் குவாட்டரும் வாங்கி குடுத்து ஒட்டு  வாங்குற அரசியல்வாதி மாதிரி.. அவனோட மூளைக்குள்ள மட்டும் அவன் எதோ ஒரு உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்குறது  மாதரி ஒரு ப்ரோக்ராம் செட் பண்ணி வச்ருதுங்க.. அதாவது  சின்ன பசங்க விளையாடுற வீடியோ கேம் மாதிரி… ஆனா  இதுல நீங்க செத்து போனிங்கன்னா உண்மைலேயே மர்கயா தான்.

இந்த உண்மைய எல்லாம்  நியோ புரிஞ்சுக்கிறான். அப்புறம் அவனுக்கு எல்ல போர் கலைகளையும் கத்து குடுக்குரங்க. கத்துக்குறது  எல்லாம் ரொம்ப ஈஸீங்க .. மாட்ரிக்ஸ் அப்படிங்கறது ஒரு ப்ரோக்ராம் அதுல இருக்குற நீங்க நான் எல்லாம் ஒரு சப் ப்ரோக்ராம் ..  அதுல குங் பூ .. கராத்தே எல்லாம் ஒரு பாங்க்ஷன் அப்படியே உங்க ப்ரோக்ரம்குள்ள கராத்தே பாங்க்ஷன் ரன் பண்ணியாச்சி னா நீங்க கராத்தே கிங்.. (பரீட்சை எழுதுறதுக்கு  இப்படி ஒரு வழி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்ல   )

பயிற்சி .. நடுவுல ட்ரினிட்டி அப்படிங்குற ஒரு பிகரோட காதல் … நியோ வோட   வாழ்கை இப்படியே போய்கிட்டு இருக்கு . மாட்ரிக்ஸ்   ஹக்க் பண்ணுறதுக்கு  ஒரு போன் லைன் வழியா தான் உள்ள போறாங்க வெளிய வராங்க . அப்புறம் ஒரு வழியா கிளைமாக்ஸ் நெருங்கும் போது  மார்பியஸ் மொட்டையன் மாட்ரிக்ஸ் உள்ள வச்சி மிஷன்களோட ஏஜென்ட்  கிட்ட மாட்டிகுரன்

அவன காபாத்துரதுகு நியோவும் ட்ரினிட்டி உம் மாட்ரிக்ஸ் உள்ள  போயி மொட்டையன்  எஸ்கேப் பண்ணி கூட்டிட்டு வரும் போது நியோ சிக்கிகிறான். அப்போ தான் ஒரு விந்தை நடக்குது.. நியோவ துப்பக்கியல சுடுறாங்க ஆனா நியோ வுக்கு ஒரு தெளிவு வந்துருது. மாட்ரிக்ஸ் ஒரு ப்ரோக்ராம் அதுல வச்சி என்னைய சுட்டா நான் சாக மாட்டேன் .. நம்ப ஆரம்பிச்சான் .. அவனுக்கு ஒண்ணுமே ஆகலை …

அதோட பார்ட் ஒன் முடியுது .. பார்ட் 2 – 3 பத்தி ஒரே போஸ்ட ஒரு மாசம் கழிச்சி போடுறேன் இல்லேன்னா நீங்க ஏன் மேல கொலை வெறி அயிருவிங்க (அது அவ்வளவு  மொக்கை)

பார்ட் ஒன்ல சூப்பர் சீன் ஒன்னு இருக்குது ஆரகில்  கிழவியைப் பார்க்கச் செல்லும் நியோ காத்திருக்கும் வேளையில் ஒரு திபேத்தியக் குழந்தையிடம் பேசுகிறான். அந்தச் சிறுவன் ஒரு ஸ்பூனை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு கண்ணால் பார்த்தே வளைக்கிறான். நியோ முயற்சி செய்கிறான். குழந்தை சொல்கிறது, ‘அங்கே ஸ்பூன் இல்லை. அந்த ஸ்பூன் உன் மனத்தில் தான் இருக்கிறது. மனத்தில் இருக்கும் ஸ்பூனை வளை ‘ என்று. (எப்படி எல்லாம் யோசிகிரங்க பா )

இந்த படத்த தமிழ்ல எடுத்த சூர்யா நடிக்கலாம்னு நான் நெனைக்குறேன் நீங்க என்ன நேனைகுரிங்கனு  கமெண்ட் போஸ்ட் பண்ணுங்க …

… 🙂 வர்ட்டா..

மேட்ரிக்ஸ் 1-2-3 யும் MD யோட மெயில் ஐ டி யும் January 27, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
3 comments

matrix_81

மேட்ரிக்ஸ் படம் ரிலீஸ் ஆகி பல வருஷம் ஆகி இருந்தாலும் நான் அந்த படத்த பார்த்தது ஒரு நாலு மாசம் முன்னாடி தான். அது கூட எங்க MD சொல்லி தான்.

MD எப்படி படம் பார்க்க சொல்லுவருனு யோசிக்ரிங்களா ?? … சொன்னாரே ….

ஒரு நாள் sales எப்படி Increase பண்ணனும் அப்படின்னு ஒரு மீட்டிங் நடந்தது , அதுல ஒரு 3000 டாலர் மாச Target fix பண்ணினாரு. அப்புறமா ஒரு கேள்வி கேட்டாரு… “முடியாதுன்னு நினைகிறிங்களா?” . “First Believe in your self …” Matrix படம் மாதிரின்னு சொல்லிட்டு அந்த படத்தோட கதைய லைட்டா சொன்னாரு. அன்னைல இருந்து எப்படியாவது இந்தா படத்த பாத்துடனும் அப்படிங்கற ஒரே குறிகொளோட பல DVD கடை ஏறி எறங்கினேன்… ஹ்ம்ம் நம்ப கெட்ட நேரம் அப்ப பார்த்து அந்த படம் மட்டும் எங்குமே ஸ்டாக் இல்லைனுடங்க…

சரி நம்ம விதின்னு விட்டுட்டேன் .. அடுக்கு பிறகு ஒரு ஒரு வாரம் கழிச்சி என்னோட பிரண்டு ஒருத்தன் வட பழனில இருக்கான். அவனோட மேன்சனுக்கு போயிருந்தேன்…

அப்போ தற்செயலா அவனோட கம்ப்யூட்டர் முன்னாடி மேட்ரிக்ஸ் 1-2-3 சேர்ந்த DVD ஒன்னு இருந்தது… அத பார்த்த உடனே மொழி படத்துல பிரகாஷ் ராஜ் சொல்லுவாரே … “பின்னால மணி அடிச்சது தலைக்கு மேல பல்பு எரிஞ்சது” . அந்த மாதரி ஒரு சந்தோசம்.. அவன் கிட்ட கேட்க கூட இல்லை DVD தூக்கிட்டு ரூம்க்கு வந்து படம் பார்க்க ஆரம்பிச்சது தான் .. முதல் தடவை எனக்கும் புரியல என் ரூம் மெடுக்கும் புரியல…

எனக்கு எங்க MD சொன்னதா வச்சி பாதி மட்டும் புரியுது… சரி இப்படியே போய்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு நேரா கம்ப்யூட்டர் ல போய் உட்கார்ந்தேன், அப்படியே விக்கிபிடியாவ தொறந்து மேட்ரிக்ஸ் 1-2-3 கதைய எல்லாம் நல்ல படிச்சேன் .. அப்புறம் தான் படம் நல்லாவே புரிஞ்சது … அந்த மூணு படத்தையும் ஒரே நாள்ல பார்த்து முடிச்சிட்டேன்…

அப்புறம் தலைப்புக்கும் போஸ்டுக்கும் சம்மந்தமே இல்லைன்னு யோசிகிரிங்களா??

அட இருக்குதுங்க .. எங்க MD யோட ஈமெயில் ID மட்ரிக்ஸ் ன்னு தான் முடியும் ..

இவ்வளவு சொன்னேனே அந்த மேட்ரிக்ஸ் கதைய சொல்லாம இருப்பேனா? ஆனா அட அடுத்த போஸ்ட்ல சொல்றேன் ஓகே வா ?

குடியரசு தின பொழுது… January 26, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை, ரசித்தவை.
add a comment

indexphp

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் … குடியரசு தினம் அப்படின்னு சொன்னதும் நமக்கெல்லாம்  ஞாபகம் வர்றது ஒரு நாள் லிவும், மிட்டாய்  வாங்கி சாப்பிடுறது , சன் டிவில சிறப்பு நிகழ்ச்சி பாக்குறது மட்டும் தான்.

ஆனா எனக்கு சில விசயங்கள் ஞாபகம் வருது …

1.  Rang de Basandi படத்துல வர ஒரு வசனம் “no nation is perfect, we have to make it perfect”

2.  கொடி வரைஞ்சி சட்டைல குத்திக்கிட்டு ஊருக்குள்ள நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நடந்தது ..

3. அப்புறம் இந்தியா குடியரசு ஆகுறதுக்கு பாடு பட்ட தலைவர்கள்….

இந்த குடியரசு தினத்துக்கு 2 ஸ்பெஷல் விஷயம் நடந்தது

முதல் விஷயம் வந்து … நேத்து நைட் பீச் பக்கதுல ஒரு வாக் போனோம் அப்போ குடியரசு தின ஏற்பாடுகள் எல்லாம் நடந்துகிட்டு இருந்தது… இது வரைக்கும் டிவி ல மட்டும் பார்த்துக்கிட்டு இருந்த tanker , Helicopter எல்லாம் பீச்ல  நிக்குது 🙂  (ஆத்தடிய் எத்த தன்டி )

அடுத்தது சென்னை டு தாம்பரம் நீராவி எஞ்சின் …. T.nagar ல கொஞ்சம் shopping பண்ண போயிருந்தேன் ரயில் ஸ்டேஷன் ல தான் நினுச்சி… சும்மா எவ்வளவு புகை … தலை சொன்னது தான் ஞாபகம் வந்திச்சி ” இந்தா ஊர்ல  தான் இதுக்கு பேரு  பஸ் துபாய் ல எல்லாம் இது குப்பை லாரி….” 🙂

ஓகே உங்களை எல்லாம் நெக்ஸ்ட் மீட் பண்றேன் …

%d bloggers like this: