jump to navigation

வைப்பற்றங்கரையிலிருந்து கூவம் நதியோரம் வரை…. March 1, 2009

Posted by anubaviraja in சினிமா, நடந்தவை.
Tags: , , , , , ,
trackback

எல்லோர்க்கும் வணக்கம். ஒரு கதை சொல்லலாம்னு இருக்குறேன் ( அட கதைனதுமே எந்திரிச்சி போகப்டாது ). இது ஒரு வாழ்க்கை STD ( STD னா வரலாறு தான? ) .

என்னோட வாழ்கைய பத்தி உங்க கிட்ட பகிர்ந்துக்க ஆசை படுறேன். சாத்தூர் .. சிவகாசி பக்கத்துல கிராமம்னும் சொல்ல முடியாம நகரம்னும் சொல்லமுடியாத ஒரு டவுன். வெயில் படத்துல வரது எங்க ஊரோட சுற்று வட்டாரம் தான். தீப்பெட்டி, பட்டாசு, இது ரெண்டு மட்டும் தான் எங்க ஊரோட பிழைப்புக்கான வழி.

15 வயசு வரைக்கும் என்னோட வாழ்க்கை மிக மிக ஆனந்தமா போய்கிட்டு இருந்திச்சி. நாடக மேடைகள் ,கவிதை போட்டிகள், பட்டிமன்றம் , கட்டுரை எழுதுவது அப்படின்னு ஒரு மெட்ரிகுலேசன் ஸ்கூல் பையன் செய்ய கூடாத வேலைல எல்லாம் ஆர்வமா இருந்தேன்.

Appavum_nanum

ஒன்பதாம் வகுப்பு முடிச்ச உடனே ரிசல்டும் கூடவே வந்தது கிளாசிலேயே 3rd ரேங்க் வாங்கி இருந்தேன். முதல் சோகம் ஆரம்பித்தது. அப்பாவுக்கு மளிகை கடைல 5 லட்ச ருபாய் நஷ்டம். மற்ற ஆட்களை கல்லாவில நம்பி விட்டுட்டு போனதுனால…

ரெண்டாவது சோகம்.. படிப்ப நிப்பாட்டிட்டு கடைக்கு வேலைக்கு போனேன். ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா தான் இருந்திச்சி. அப்புறம் சரி இது ஒரு சவால் அப்படின்னு நெனைச்துகப்புரம் வாழ்க்கை அமைதியா போய்கிட்டு இருந்தது.

invstills310306_08

எங்க அப்பா வியாபாரத்தில ரொம்ப திறமைசாலி. பேச ஆரம்பிச்சாங்க னா நீங்க அந்த பொருளை வாங்காம போக மாட்டிங்க. பட் ரொம்ப கோபம் ஜாஸ்தி. “எம் மகன்” படத்துல வர நாசர் கேரக்டர். அந்த படம் என்னோட லைப்… அந்த டைரேக்டருக்கு என்னோட கதை எப்படி தெரியும்னு தெரியல . ( பரத் பல காட்சிகள்ல அவமான படுறது , அம்மா கரெக்டர் நாசருக்கு பயபடுறது , இளைய தாய் மாமா வந்து கொஞ்ச நாள் கடைய பார்த்துகிட்டது, அப்பாவுக்கு பிடிக்காத மாமா விட்டுக்கு நானும் அம்மாவும் ஒளிஞ்சு ஒளிஞ்சு போயிடு வந்தது … எல்லாம் என்னோட வாழ்க்கை ) என்ன… கோபிகா கேரக்டர் மட்டும் ஏன் லைபில இல்லை ??? 🙂

Padi raja

எனக்கு படிக்கிரதுனா ரொம்ப பிடிக்கும் அதுனால எப்டியாவது படிச்சே ஆகனும்னு யோசிச்சேன். அப்போ தான் கிடைச்சது ப்ரைவேடா 10 th அப்புறம் +2 எளுதலம்ங்க்ற ஐடியா. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். கடையில கூட்டம் இல்லாத நேரம் படிப்பு தான் 🙂
அப்புறம் நைட் கூட 11 மணிக்கு பிறகு கடை பூட்டிட்டு வந்து படிக்குறது.

10 th அப்புறம் +2 ஓரளவு நல்ல மார்க் எடுத்தே பாஸ் பண்ணிட்டேன். கடையும் நல்ல படியா போக ஆரம்பிச்சது. கடன் எல்லாம் அடைய ஆரம்பிச்சது. சரி அப்படியே BBA மதுரை காமராஜ் university ல தபால் மூலமா படிக்க ஆரம்பிச்சேன். அதயும் முடிச்சி MBA வும் முடிச்சிட்டேன், எங்க கடையும் நல்ல படியா வந்துருச்சி.

invstills310306_02

10 வருஷ மளிகை கடை அனுபவம் Distance education ல கிடைச்ச MBA டிகிரி , இதோட சென்னைக்கு ட்ரைன் ஏறி வந்தேன். வேலை கிடைக்கலைனா மளிகை கடை வச்சி பிழைச்சிக்கலாம் இல்லையா ? 🙂

என்னோட பெரியம்மா பையன் (He is My god or God father ) நம்பிக்கை ஏற்படுத்தி என்னை சென்னையில வாழ வைத்தான்.

அதனால (நீதி சொல்லுற நேரம் வந்துரிச்சி 😉 ) முடியாதுன்னு நெனைச்சிருந்தா நான் இன்னிக்கும் மளிகை கடையில பொட்டலம் மடிச்சு கிட்டு இருந்திருப்பேன்.

அதுனால ஒபாமா சொன்ன மாதிரி “yes we can” அப்டின்னு நெனைப்போம். கலாம் சொன்ன மாதிரி கனவு காண்போம்.

(காமெடியா தான் ஆரம்பிச்சேன் ஆனா முடியல 🙂 )

நான் பெரிசா எதுவும் சாதிக்கலை . என்னோட வாழ்கைல துன்பம் வந்த பொழுதெல்லாம் “I Just stayed Positive” . மற்றதெல்லாம் தானா நடந்தது. இந்த ஒரு விசயத்த என்னோட நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்க நெனச்சேன் அது நாலா தான் போஸ்ட் பண்ணினேன்.

ஆனா என்னோட அப்பாவ ஒரு பெரிய வில்லனா காட்டி இருந்துச்சின்னா , அது உண்மை கிடையாது. அவரு ஒரு நேர்மையான, இரக்கமுள்ள, 3 தடவை பிச்னஸ்ல தோற்று நாலாவது தடவை ஜெயிச்ச ஒரு முன்கோபகார ஆசாமி. “Many good things that I have, I have learn from him”. ( என்ன, குடுத்த வாக்கையும் குடுத்த கடனையும் திருப்பி வாங்குற பழக்கம் இல்லாததுனால 3 தடவை பிச்னஸ்ல லாஸ் 🙂 )

Advertisements

Comments»

1. Mathes - April 20, 2009

Hey, raja…

Is tat is ur real story??

Or just for FUN???

anubaviraja - April 20, 2009

நம்புங்க மாதேஷ் … இது தான் என்னோட உண்மையான கதை ….

2. r - November 15, 2010

ha ha
really nice
I laughed at it

anubaviraja - November 15, 2010

வணக்கம் மேடம் .. இதுல சிரிக்கிற மாதிரி என்ன தெரிரிஈஈகிறது ??

3. Madhu - May 26, 2011

The account of an indomitable spirit,
That chose not to become a victim of destiny.
With a remarkable determination to beat all odds,
And its final triumph over trauma.

A life history that is poignant and yet so inspiring,
Kudos to you Raja!

anubaviraja - May 26, 2011

Hope you finally had some time to read this 🙂 Thanks for your comment too!!

4. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: