jump to navigation

ஒரு கவிதை போட்டி..சில கோணங்களில் காதல்… March 13, 2009

Posted by anubaviraja in தமிழ், பிடித்தவை.
trackback

ஒரு கவிதை போட்டி நடந்துசிங்க.. நானும் கலந்துகிட்டேன் . தலைப்பு “காதல்” .. அட நமக்கு சம்மந்தம் இல்லாம இருக்கேன்னு விடாம சில கவிதைகள் எழுதினேன் . எப்படி இருக்குன்னு   சொல்லுங்க . நானே சொந்தமா எழுதுனதுங்க .. மண்டபத்துல யாரோ எழுதினது இல்லை 🙂

காதல் ரசிப்பதில்லை…

காதலர்களை கண்டாலே பிடிப்பதில்லை…

எனக்கு ஒரு காதலி கிடைக்காததால் ….

—————————

பசி எடுப்பதில்லை, தூக்கம் வருவதில்லை,

ஒரு புறம் மட்டும் எப்பொழுதும் வலி,

எனக்கிருப்பது காதலா…. அல்சரா….?

————————-

கவிஞர்களை உன்னைப் பற்றி புலம்பச் செய்தாய், விஞ்ஞானிகளை உன் பின்னே சுற்ற வைத்தாய்,

மாதம் ஒரு முறை மட்டும் உன் முழுமுகம் காட்டி,

என்னையும் ஏன் வாடச் செய்தாய்? – நிலாப் பெண்ணே என்று சொன்னதாலா?

—————————-

“காதலித்துப் பார்” கவிஞன் சொன்னான்

காதல் செய்தேன், தாடையை உடைத்தான்

காதலித்தது அவன் மகளை என்பதால்…

——————————-

என்னை சுடர் மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்!!

அழகிய மங்கையரை கண்டு விட்டால் காதல் வராமல்

“காதல்” , “சுப்ரமணியபுரம்” கிளைமாக்ஸ் ஞாபகம் வருகிறதே!!!

——————————-

பெண்ணே உன்னை ஏன் அழகு செய்கிறாய்??

ஒப்பனையற்ற உன் முகமொன்று போதுமே

காதல் என்ற சொல்லே எனக்கு வெறுத்துப் போக….

———————————

பிற உயிர் வதைக்க பயந்து சைவமனேன்

பின்னெப்படி என்னுயிர் வதைத்து நானும்

காதல் செய்வேன் ??

———————————

பேருந்து நிறுத்தம் பயணியருக்கே!!

கடற்கரை எங்கள் பொழுது போக்கிற்கே!!

காதலர்களிடம் இருந்து மீட்க போராடுவோம்!!

——————————

காதலும் தலிபானும் ஒன்று தானோ ??

வளர்க்கும் வரை நன்றாய் இருந்து

வளர்ந்த பின்னே இதயம் நொறுக்குவதால்…

—————————-

400 ரூபாய் விலையில் காதலிக்கு பீட்சா,

ஒரு ரூபாய் அரிசி வாங்க,

ரேசன் கடை வாசலில் தாய்

———————————

காதலிக்கத் தொடங்கியதும் நிலவையும் முகிலையும் நேசிக்கிறிரே ,

உங்கள் பெற்றோரையும் கொஞ்சம் நேசித்துத் தான் பாருங்களேன் !

முதியோர் இல்லங்களவது காலியாகும் .

——————————–

காதலும் வீரமும் கலந்தது தானே தமிழனின் வாழ்க்கை,

பிறகு ஜனவரி 14 மறந்து பிப்ரவரி 14 மட்டும் ஏன்

இன்றைய தமிழனின் கண்ணில் பட்டுத் தொலைக்கிறது…

Comments»

1. mathes - March 30, 2009

Hello sir..

Those are really nice and the last 1 about jan N feb 14 are really touching..

Can I have ur friendship?!?! my mail id is mathes@studentshangout.com

Plz contact me..

am w8ing for ur friendship…

2. jenthanjensan - October 10, 2010

Hi sir.this is really really good and how old are you

anubaviraja - October 31, 2010

Thanks 🙂 Ada Kalaikku Vayadhu yedhu ;))

3. chitra - December 23, 2011

ungal angel ealam sari than, athukaga ponuingala eaan keavala paduthuringa.

anubaviraja - December 23, 2011

@சித்ரா ஹய்யையோ.. இதெல்லாம் சீரியஸா எடுத்துகாதிங்க.. இது சும்மா satire .. இலங்கை தமிழ்ல சொல்லனும்னா பகடி … எல்லாம் கற்பனையே .. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுத பட்டவை அல்ல .. 🙂

chitra.j - January 4, 2012

ok,friend.yeannidamum sila kirukalgal iruku athai naan eappadi vealipaduthuvathu…. help me!….

anubaviraja - January 4, 2012

கண்டிப்பா – இந்த இணைய உலகத்துல எதுவுமே கஷ்டம் இல்ல… தமிழ்ல டைப் பண்றதுக்கு இது ரொம்ப ஈஸியான வழி இது இதுல நீங்க Inaya ulagam – அப்படின்னு டைப் பண்ணா – இணைய உலகம் அப்படின்னு வரும்…

நீங்களே உங்க சொந்த ப்ளாக் – உங்க G-mail accountல இருந்தே இங்க Register பண்ணலாம் .. இல்லனா என்ன மாதிரி – வோர்ட் பிரஸ் சைட் வேணும்னா இங்க போய் உங்க அக்கௌன்ட் ஆரம்பிக்கலாம்.

http://www.blogger.com/tour_end.g
http://en.support.wordpress.com/getting-started/

மேல இருக்குற சுட்டிகள் உங்களுக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்… வேறேதாவது சந்தேகம்னா கேளுங்க …

இணைய உலகத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙂 🙂

4. chitra.j - January 5, 2012

hai friend… naan oru makku inaya ulagathai pattri eannauku ondrum theariyathu,aannal naan muyarchi panni parthean konjam veallainguthu konjam puriyala.

anubaviraja - January 5, 2012

Friend, இங்க யாருமே எல்லாம் தெரிஞ்சவங்க கெடயாது.. எல்லாம் இங்க வந்து கத்துகிட்டவங்க தான்… கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க… http://www.youtube.com/watch?v=vs5tfoe-dCA இந்த வீடியோ கொஞ்சம் உபயோகமா இருக்கும் அப்படின்னு நெனைக்கிறேன்.. அப்படி இல்லைனா, வேற என்ன பண்ணனும்னு சொல்றேன்..

5. chitra - January 11, 2012

hai friend!… sorry for my late reply,naan own blog create pannitean friend,my blog address tamilachiworld.blogspot.com pls…. i want ur comments…. pls…

chitra - January 11, 2012

muthalil en nantrigal…..

chitra - January 11, 2012

sorry friend my address:tamizhachiworld.blogspot.com,

anubaviraja - January 11, 2012

நல்ல முயற்சி .. இன்னும் நெறைய எழுதுங்க.. எழுத எழுத தான் உங்களோட படைப்புகள் மேன்படும்.. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂

6. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] ஒரு கவிதை போட்டி..சில கோணங்களில் காதல…- என்னோட குட்டி கவிதை தொகுப்பு … […]


Leave a reply to anubaviraja Cancel reply