jump to navigation

பறக்க சிறகுண்டு.. திறக்க சாவி இல்லை … April 26, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
3 comments

குச்சிகளை அடுக்கி கணக்கு
தீப்பெட்டி மருந்து கலவையிலே வேதியல்
பண்டல்கள் செல்லும் ஊரை பார்த்து புவியல்
அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் வாளி கலவையிலே
இயற்பியல் உண்மையான பள்ளிக்கூடம் எப்படி இருக்கும் அம்மா ??

Advertisements

காட் பாதர் படமும் .. நான் ரசித்த சர்கார் ராஜும் April 26, 2009

Posted by anubaviraja in சினிமா, ரசித்தவை.
Tags: , , , , , , , , , ,
1 comment so far

உலக சினிமாலாம் பார்க்க ஆரம்பிச்சிடோம்ல..   காட் பாதர் பாக்கலைனா எப்பிடி ?? (நம்ப தல அஜித் நடிச்சது இல்லிங்கோ )

DVD வாங்கிட்டு வந்தாச்சி , அதுவும்  காட் பாதர் 1-2-3 எல்லாம் சேர்த்து ஒரே DVDல

1970ல வெளி வந்த  படம் . முழுக்க முழுக்க நிழல் உலக தாதாகளை பத்தின கதை.  இத பார்த்து தான் நாயகன்  படம் எடுத்ததா சொல்லுவாங்க (வீர தளபதி ரித்திஷ் நடிச்சது இல்லைங்க ஒலக நாயகன் கமல் நடிச்சது 😉 ) மிகவும் மெதுவாக ஆனா பரபரப்புக்கு குறைவில்லாம சிறப்பா படத்த எடுத்திருப்பாங்க.

எல்லாம் மாபியா கும்பலுக்குள்ள நடக்குற பிரச்சனையயும் அவங்க செயல் படுற விடத்தையும் அழகா படம் பிடிச்சிருப்பாரு .  மர்லன் பிராண்டோ தான் காட் பாதர்.. அவருக்கு மூணு  பசங்க ஒரு பொண்ணு .. அந்த  நகரத்தையே ஆட்டி வைக்கிற நிழல் உலக நாயகன் 🙂 அவரு  தான் . மூத்த பையன் கோபக்காரன் , ரெண்டாவது பையன் கொஞ்சம் டியுப் லைட் மூணாவது பையனுக்கு, இந்த மாதிரி அடி தடி சண்டை எல்லாம் பிடிக்காது . அவன் காலேஜ் முடிச்சிட்டு ராணுவத்துல சேரணும்னு ஆசை படுறான் .

விதி வலியது இல்லியா , அப்பாவ யாரோ சுட்டுடுறாங்க , அவரு குத்துயிரும் , கொலயுயிருமா ஆஸ்பத்திரியில கெடக்காரு. மூத்த பையனுக்கு டென்சன் … ஒன்னும் செய்ய தெரியல .. சோ மூணாவது பையன் ( அல் பக்னோ ) பொறுப்பெடுத்து எதிரிகள போட்டு தள்ளிட்டு எஸ்கேப் ஆயிடுறாரு.

கடைசியில அண்ணன்காரனையும் வேற சில எனிமீஸ் அட்டக் பண்ணி கொன்னுடறாங்க . அல் பக்னோ புல் பொறுப்பெடுத்து எப்பிடி விக்ரமன் படத்துல ஒரு பட்டுலையே குடும்பம் முன்னேறுதோ அதே மாதிரி  ஒரு அஞ்சு நிமிச சர்ச் சீன்ல அண்ணன் மரணத்துக்கு காரணமானவங்க எல்லாரையும் அவரோட ஆளுங்கள வச்சி போட்டு தள்ளுறாரு .  அவரு அவரோட தங்கச்சி பையன தத்தெடுத்து முடிக்கும் போது,  All Enemies finished 🙂 . அந்த சீன் பிரம்மாதமா எடுத்துருபாங்க. அதே மாதிரி தமிழ்ல தலை நகரம் படத்துல எடுக்க முயற்சி பண்ணிருப்பாங்க (அதாங்க நம்ம தலை நாய் சேகர் வேசத்துல பின்னுவாரே அதே படம் தான் 🙂 )

காட் பாதர் மர்லன் ப்ரண்டோவோட நடிப்ப அப்பிடியே உள்வாங்கி நடிச்சிருப்பாரு நம்ப நாயகன் கமல். படத்துல ஒரு சூப்பர் சீன் என்னனா ஒரு ஹாலிவுட்  தயாரிப்பாளர் நம்ம  காட் பாதர் சொல்லுற ஆளுக்கு சான்ஸ் குடுக்க மாட்டேன்னு சொல்லி இன்சல்ட் பண்ணிருவாரு , அன்னிக்கு நைட் அவரோட படுக்கையில  ( அட கற்பனைய அலைய விடாதிங்க  பா 😉 ) அவரு செல்லமா வளர்த்த காஸ்ட்லி குதிரையோட தலை இருக்கும்  (மொரட்டுத்தனமா யோசிசிருக்கங்கள்ள ..)

அதுக்கப்புறம் ஹிந்தில காட் பாதர் படத்த   பேஸ் பண்ணி ராம்கோபால் வர்மா எடுத்த அமிதாப் & அபிசேக் கலக்குன சர்கார் & சர்கார் ராஜ் படம் பாத்தேன் . சும்மா சொல்ல கூடாதுங்க அது அப்பிடியே காட்பாதேரோட இந்திய பதிப்பு.

அந்த ரெண்டு படத்த பத்தியும் நேயர் விருப்பமான  மட்ரிக்ஸ் 2&3 பத்தியும் அடுத்து சில போஸ்ட் 😉

டே நாராயணா … இந்த கொசு தொல்லை …. April 26, 2009

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: ,
1 comment so far

இப்போலாம் மொக்கை SMS அனுப்புறதுக்கு எவ்வளவு யோசிக்கிறாங்க  பார்த்திங்களா .

போன வாரம் எனக்கு வந்த ரெண்டு  SMS  :

ஒரு ஒருல .. ஒருத்தன் டீ கடையில டீ ஆர்டர் பண்ணிட்டு   நின்னுகிட்டு இருந்தான்
அப்போ அவனுக்கு ஒரு போன் வந்தது , அவனோட மனைவி செத்துட்டதா ..
இருந்தாலும் அங்கேயே நின்னுகிட்டு இருந்தான்
திரும்ப ஒரு போன் .. அப்பா செத்துட்டதா…
இருந்தாலும் கிளம்பலியே …
இன்னொரு  போன் கூட வந்தது அவன வேலைய விட்டு தூக்கிட்டதா ..
அப்பவும் கெளம்பலையே…

இந்த கதயோட நீதி :

தம்பி டீ இன்னும் வரல ….

இன்னும் ஒரு SMS கூட வந்தது ..

வழக்கமான காக்கா  நரி .. பாட்டி வடை சுட்ட்டிங் கதை தான் ..

ஆனா பினிசிங்க்ள   கதயோட நீதி :

வடை போச்சே …

இப்பிடி எல்லாம் பிக்காளி தனமாயோசிக்கிறத  விட்டுட்டு பிள்ளகுட்டிகள போய் படிக்க வைங்க டா … 🙂

நான் ஒரு புத்தகப் புழுவா ??? April 19, 2009

Posted by anubaviraja in தமிழ், பிடித்தவை, புத்தகம்.
Tags: , , , , , , , , ,
4 comments

எல்லாருக்கும் வணக்கம். தலைப்ப பாத்தோனே  டரியல்   ஆக கூடாது. என்னக்கு படிக்கிரதுனா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே புத்தகங்கள் தான் என்னோட உயிர் நண்பர்கள் . அதுக்காக தெருவுல  போய் விளையாடுறதே இல்லியான்னு கேட்காதிங்க . பாதி நேரம் புத்தகம் .. மீதி நேரம் “வெயிலோடு வெளயாடி ….”  தான்.

சின்ன வயசுல வெள்ளிகிழமைக்கு ஏங்கி இருந்து சிறுவர் மலர் படிச்சதும் , லக்கி லுக் , மாயாவி, லயன் காமிக்ஸ் , ராணி முத்து காமிக்ஸ் படிச்சதும். கொஞ்சிம் நாள் கழிச்சி எங்க அண்ணன் (பெரியப்பா பையன் ) கலெக்சன்ல இருந்து ஈழத்தமிழர்கள் , புலிகள்    பத்தின புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன் . அப்புறம் அப்பிடியே எல்லா வார இதழ்களும் , மாத பத்திரிகைகளும் பழக்கம் ஆச்சி.

எனக்கு இன்னும் ஒரு வசதி என்னன்னா எங்க மளிகை கடைக்கு வர்ற பழைய புக் எல்லாம் படிக்கச் ஆரம்பிச்சேன். அதனால பைசா செலவு இல்லாம நெறைய புக்ஸ் நாவல் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன் .

ராஜேஷ் குமாரோட விவேக் , சுஜாதாவோட கணேஷ் வசந்த் , சுபா வோட பரத்-சுசிலா, பட்டுகோட்டை பிரபாகரோட கதைகள், பாலகுமாரனோட நாவல்கள், இந்திரா சௌந்தராஜனோட அமானுஷ்யம் இப்பிடி ஒருத்தர் விடாம படிக்க ஆரம்பிச்சேன்

கொஞ்ச நாள்ல எனக்கு ரமணி சந்திரன் நாவல் படிக்கிற வாய்ப்பு கெடைச்சது . அப்புறம் நான் அவங்களோட பேன் ஆயிட்டேன். இது வரைக்கும் அவங்களூட எல்லா நாவலும் படிச்சிருப்பேன்னு நெனைக்குறேன். அவங்க கதை ஒரு  feel good factor . அநேகமா எல்லாருமே தலை சொன்ன மாதிரி “ரொம்ப நல்லவன்களா இருப்பாங்க” .. பினிசிங்கும் நல்லாவே இருக்கும் ( நம்ம வாழ்க்கையே  சோகமா  தான் போய்கிட்டு இருக்கு கதை முடிவாச்சும்  நல்லா சந்தோசமா முடியட்டுமே 🙂 ). எல்லாருக்கும் அவங்க ஹீரோயின் கேரக்டர் தான் ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு ஹீரோ தான் ரொம்ப பிடிக்கும் 🙂 . ஒன்னு அவங்க ரொம்ப நல்லவனா இருப்பாங்க இல்லினா கிளைமாக்ஸ்ல திருந்தி நல்லவன்யிருவாங்க.

அப்புறம் எங்க ஊர் கிளை நூலகத்துல உறுப்பினர் ஆனதும் வாழ்க்கையே மாறிடுச்சி. சிறுகதை இலக்கியம் … அயல் நாடு கதைகள் … என்னுடைய வாசிப்பு உலகம் பெரிசா மாறிச்சி. தினம் ஒரு புத்தகம் படிச்சிட்டு மத்திடுவேன் .

அப்புறம் MBA செமினார் கிளாஸ் போகும் போது ப்ரொபசர் சொல்லி DALE Carnegie, Shiv kera, அப்புறம் நெறைய self improvement books எல்லாம்  படிக்க ஆரம்பிச்சேன்.

ஆனா இங்க சென்னை வந்து ஒரு ஒன்றரை வருஷம் ஆகிபோச்சி. புத்தகம் படிக்கிற பழக்கம் ரொம்ப கொறைஞ்சி போச்சி 😦 .  ஆனா நெறைய தமிழ் ப்ளாக் , அப்புறம் இன்டேர்நெட்ட மேஞ்சி  அந்த கொறைய தீத்துகிறேன்

ஒய்யார கொண்டையாம் .. தாழம்பூவாம்….. April 19, 2009

Posted by anubaviraja in கவிதை, கிரிக்கெட், தமிழ்.
2 comments

சென்னை அணியின் தாய் நகரம் டர்பனாம்
இந்திய பிரிமியர் லிக் நடப்பது தென்னாப்ரிக்காவிலாம்
பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் தானே
இந்த கிரிகெட் வியாபாரிகள் மட்டும் என்ன விதிவிலக்கா

ஒய்யார  கொண்டையாம் .. தாழம்பூவாம்…..

தென்னை மரத்தில் கொட்டிய தேள் …. April 19, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
1 comment so far

நியூயார்க்கில் வங்கி திவால்
திருப்பூரில் வேலை காலி
ஒருவாய் சோறில்லாமல் போனதற்கு
காரணம் – தாராளமயமாக்கலாம்…

தென்னை மரத்தில் கொட்டிய தேள் ….

—————————–

தங்கை திருமண கடன்
ஊரில் உள்ள வீட்டின் லோன்
நேரங்கெட்ட வேளையில் வந்து
என் வேலையை பறித்த பொருளாதார வீழ்ச்சி

பாம்பாகும் ஏணிகள்….

நரகம் செல்லும் பாதையெங்கும் பூ… April 16, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
1 comment so far

எட்டு மணிக்கு திறக்க வேண்டிய மருத்துவமனை மூடியிருக்க
ஒன்பது மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக்கில்
களை கட்டிய கூட்டம்

நரகம் செல்லும் பாதையெங்கும் பூ…

அடுத்த ஹிந்தி படம்… April 15, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
2 comments

என்னடா இவன் ஹிந்தி பட விமர்சனமா எழுதி தள்ளுரானே , பெரிய ஹிந்தி பண்டிட் போலன்னு நேனைசிகாதிங்க… ஸ்கூல் படிக்கிற காலத்தில ஹிந்தி எக்சாம் ப்ராத்மிக் மட்டும் தான் முப்பத்தஞ்சி மார்க் வாங்கி பாஸ் , ரெண்டாவது பரிட்சைக்கு படிக்க போய்ட்டு பாதிலேயே எஸ்கேப் ஆனவங்க தான் நாங்கல்லாம் 🙂

இந்த வாரம் கையில சிக்கின DVD தோஸ்தானா. திரும்பவும் அபிசேக் படம் … ஒரு மாதிரி ஏடாகூடமான சப்ஜெக்ட் , இந்த பில்டப் எல்லாம் இருந்தாலும் சரி பர்துரலாமேன்னு உட்கார்ந்தாச்சி. ஆனா உண்மையிலேயே ரெண்டு டாப் ஹீரோக்கள் இந்தா மாதிரி ஒரு கதைல நடிக்கிறதுக்கு … அதுக்காகவே அபிசேக்கையும் ஜான் அப்ரகாமையும் பாராட்டனும்.

இங்க சென்னைல எப்பிடி பச்சிலருக்கு வீடு குடுக்க மாட்டிகிரான்களோ அதே மாதிரி அமெரிக்காவில போடோகிராபரா இருக்கிற ஜானுக்கும் நர்ஸா 😉 இருக்குற அபிசேக்குகும் வீடு கெடைக்க மாட்டிக்கிது . சந்தர்ப்ப சூழ்நிலையால ரெண்டு பேரும் gay couple அப்படின்னு சொல்லி வீட்ட வாடகைக்கு எடுதுடுறாங்க . அப்புறம் பார்த்தா அதே வீட்டுல பிரியங்கா சோப்ரா தங்கிருக்காங்க. அப்புறம் என்ன வழக்கம் போல முக்கோண காதல் கதை தான் 🙂

தலை அபிசேக் இந்தா படத்துலயும் நடிப்பு பிச்சி உதறிட்டாரு. அதுலயும் ஒபெனிங் சீன் நீ எதுக்கு போயும் போயும் ஒரு நர்ஸ் வேலைக்கு சேந்தன்ணு வெள்ளைகார பெருசு ஒருத்தரு கேட்பாரு .. அப்போ பார்த்து ஒரு பாரின் லேடி போடி வாஷ் பண்ண கூப்பிடுவாங்க பாருங்க ..இது சும்மா சாம்பிள் தான் படம் புல்லா இது மாதிரி தான் …

கடைசில காத்திருந்தவங்க பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டு போன மாதிரி வேற யாரோ ஒருத்தரு ப்ரியங்காவ கட்டிகுராறு (அதுவும் ரெண்டாந்தாரமா 😦 ) ரைட் அத விடுங்க படம் முழுசும் ஒரே A தனம் . அபிசெகோட அம்மா ஜானுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வச்சி மருமகளா எத்துகுறது எல்லாம் ரொம்ப சாதாரண சீன் 🙂

ஆனா காமெடி படம்ங்ரதால ரசிக்க முடிஞ்சது . எனக்கு படம் முடிஞ்சதும் ஒன்னே ஒன்னு தான் தோணிச்சி . ஒரு வேளை ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சி இந்த படத்த தமிழ்ல எடுத்தா S.J. சூர்யாவும் சிம்புவும் நடிக்கலாம் 😉

அண்ணல் சிரிக்கிறார்…. April 15, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment

தனிக்குவளையில் தேநீர் அருந்தி

அந்த தொழிலாளி நீட்டிய

ரூபாய் நோட்டில்- தீண்டாமையின் ஜென்ம விரோதி

 

அண்ணல் சிரிக்கிறார்….

 

——————————————————–

 

நட்சத்திர ஹோட்டல்லிலே வெறித் தாக்குதல்

இந்து கட்சி தலைவரை காப்பற்றி உயிர் விட்ட

ராணுவ வீரன் கழுத்தில் தர்காவின் தாயத்து

 

கொட்டும் தேளும் ..கரை சேர்க்கும் துறவியும் ….

சிறகு முளைக்காத விமானங்கள்…. April 7, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
2 comments

பேருந்து கட்டணத்தில் ஒரு ருபாய் தான் அதிகம்,
வானூர்தி கட்டணத்தில் ஆயிரம் ருபாய் சலுகை- மேடையில் மந்திரி முழங்க
அண்ணாந்து பார்க்கிறேன் தலைக்கு மேலே விமானம்

சிறகு முளைக்காத விமானங்கள்….

——————————

ஐந்தாயிரம் மாத சம்பளம்
பத்தாயிரத்திற்கு கைப்பேசி
பழைய சோறு சாப்பிட்டு விட்டு பல் குத்துவான்னேன்?

சூடு போட்டு கொண்ட பூனைகள்….

%d bloggers like this: