jump to navigation

நான் பார்த்த ஹிந்தி படம் …. April 5, 2009

Posted by anubaviraja in சினிமா.
Tags: , , , , ,
trackback

kabhi_alvida_naa_kehna

போன வாரம் ஞாயிற்று கிழமை ரொம்ப போர் அடிச்சது . சரி பாரிஸ் கார்னர்ல வாங்கிட்டு வந்த எல்லா DVD உம் பார்த்தாச்சே என்ன பண்ணுறதுன்னு தெரியாம உட்கார்ந்துகிட்டு இருந்தேன் . சரி இந்த படம் சும்மா தான இருக்குன்னு எடுத்தேன். படத்தோட பேரு கபி  அல்விதா நா  கேஹனா. என்னோட அண்ணனும் , எங்க ஆபீஸ்ல வேலை பாக்குற ஒருத்தரும் ஏற்கனவே அந்த படத்தோட கதைய லைட்டா சொல்லிருந்தாங்க… தயவு செஞ்சி பாத்துறாதடான்னு வேற   சொல்லிருந்தாங்க.

ஆனா  போனவாரம் சர்கார், அப்புறம் சர்கார் ராஜ் பார்த்ததுல இருந்து அபிசேக் பச்ச்சனோட பெரிய  பேன் ஆயிட்டேனா , சரி பார்துரலாமேனு  உக்கார்ந்தேன்.

படத்துல ஆரம்பத்துல அபிசேக் பச்சனுக்கும் ராணி முகர்ஜிக்கும் கல்யாணம் நடக்குது ..
அபிஷேக்கோட அப்பாவா அமிதாப் வர்றாரு. அப்புறம் ஷாருக் கான் ஒரு புட்பால் playeraa வராரு. அவரோட மனைவி ப்ரீத்தி ஜிந்தா. சரி பேமலி சப்ஜெக்ட் தான்னு நம்பி உட்கார்ந்துட்டேன் . ஐயோ .. இவரு பொண்டாட்டிய அவரு காதலிக்கிறது .. அவரு பொண்டாட்டிய இவரு காதலிக்கிறது .. வாரே வா என்ன ஒரு குடும்ப காவியம் .

அதுல அமிதாப் வேற ப்ளே பாய் 😦 . சர்கார்ல நான் பார்த்த அமிதாப்பே வேற.. ரைட் விடுங்க. ஷாருக்கோட அம்மா கூட அவருக்கு வேற லவ் … போதும்டா சாமி .. இப்பிடி ஒரு படத்த இனி வாழ்கையிலேயே பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு கிளைமாக்ஸ் பர்துருவோமேன்னு உட்கார்ந்தேன் . அதுல ஒரு சீன், அபிசேக் அவரோட பொண்டாட்டி ராணி முகர்ஜிய கொஞ்சுராறு.. அத பார்த்துட்டு ஷாருக் டென்சன் ஆகுறாரு  பாருங்க அப்போ தான் எனக்கும் டென்ஷன் ஆச்சி.

இத தான் எங்க தலை அன்னிக்கே சொன்னாரு . “ஊரா டா இது , இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருகேங்க்றான் ,   அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருகேங்க்றான் ,  ….”
அது மாதிரி ஆயிரிச்சி . கடைசில ஷாருக்கானும் ராணி முகர்ஜியும் ஒன்னு சேருறாங்க பாருங்க …. ஷப்பா…  அப்ப தாங்க எனக்கு கண்ண கட்டுச்சி…

ரைடு.. இது மாதிரி குடும்ப காவியமெல்லாம் ஹிந்தில தான் எடுக்க முடியும் , தமிழ்ல எடுத்தா … நெனைச்சி பார்கவே பயமா இருக்குங்க …

Advertisements

Comments»

1. Sathees Kannan - April 6, 2009

ந‌ம்ம‌ இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் கே.பால‌ச்ச‌ந்த‌ர் ப‌ட‌ங்க‌ளை நீங்க‌ பாத்த‌தே இல்லையா…

2. anubaviraja - April 6, 2009

பார்த்திருக்கேன் பாஸ்.. ஆனா இது கொஞ்சம் ஓவர் …

3. Mathes - May 28, 2009

ஹய்யோ… ரொம்ப romantical subjectஅ இருக்கும் போல இருக்கு…

4. anubaviraja - May 30, 2009

ஆமாம் மாதேஷ் … ரொம்ப ரோமன்ஸ் .. நான் அப்பிடியே ஸாக் ஆய்ட்டேன் … :)))

5. zeynab - July 15, 2010

i loooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooove you
i kiiiisss you

6. anubaviraja - August 19, 2010

யாரங்க ??? ராணி முகர்ஜியையா?? ப்ரீத்தியயா??? சொல்லுங்க ….. ;);)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: