jump to navigation

நான் ஒரு புத்தகப் புழுவா ??? April 19, 2009

Posted by anubaviraja in தமிழ், பிடித்தவை, புத்தகம்.
Tags: , , , , , , , , ,
trackback

எல்லாருக்கும் வணக்கம். தலைப்ப பாத்தோனே  டரியல்   ஆக கூடாது. என்னக்கு படிக்கிரதுனா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே புத்தகங்கள் தான் என்னோட உயிர் நண்பர்கள் . அதுக்காக தெருவுல  போய் விளையாடுறதே இல்லியான்னு கேட்காதிங்க . பாதி நேரம் புத்தகம் .. மீதி நேரம் “வெயிலோடு வெளயாடி ….”  தான்.

சின்ன வயசுல வெள்ளிகிழமைக்கு ஏங்கி இருந்து சிறுவர் மலர் படிச்சதும் , லக்கி லுக் , மாயாவி, லயன் காமிக்ஸ் , ராணி முத்து காமிக்ஸ் படிச்சதும். கொஞ்சிம் நாள் கழிச்சி எங்க அண்ணன் (பெரியப்பா பையன் ) கலெக்சன்ல இருந்து ஈழத்தமிழர்கள் , புலிகள்    பத்தின புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன் . அப்புறம் அப்பிடியே எல்லா வார இதழ்களும் , மாத பத்திரிகைகளும் பழக்கம் ஆச்சி.

எனக்கு இன்னும் ஒரு வசதி என்னன்னா எங்க மளிகை கடைக்கு வர்ற பழைய புக் எல்லாம் படிக்கச் ஆரம்பிச்சேன். அதனால பைசா செலவு இல்லாம நெறைய புக்ஸ் நாவல் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன் .

ராஜேஷ் குமாரோட விவேக் , சுஜாதாவோட கணேஷ் வசந்த் , சுபா வோட பரத்-சுசிலா, பட்டுகோட்டை பிரபாகரோட கதைகள், பாலகுமாரனோட நாவல்கள், இந்திரா சௌந்தராஜனோட அமானுஷ்யம் இப்பிடி ஒருத்தர் விடாம படிக்க ஆரம்பிச்சேன்

கொஞ்ச நாள்ல எனக்கு ரமணி சந்திரன் நாவல் படிக்கிற வாய்ப்பு கெடைச்சது . அப்புறம் நான் அவங்களோட பேன் ஆயிட்டேன். இது வரைக்கும் அவங்களூட எல்லா நாவலும் படிச்சிருப்பேன்னு நெனைக்குறேன். அவங்க கதை ஒரு  feel good factor . அநேகமா எல்லாருமே தலை சொன்ன மாதிரி “ரொம்ப நல்லவன்களா இருப்பாங்க” .. பினிசிங்கும் நல்லாவே இருக்கும் ( நம்ம வாழ்க்கையே  சோகமா  தான் போய்கிட்டு இருக்கு கதை முடிவாச்சும்  நல்லா சந்தோசமா முடியட்டுமே 🙂 ). எல்லாருக்கும் அவங்க ஹீரோயின் கேரக்டர் தான் ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு ஹீரோ தான் ரொம்ப பிடிக்கும் 🙂 . ஒன்னு அவங்க ரொம்ப நல்லவனா இருப்பாங்க இல்லினா கிளைமாக்ஸ்ல திருந்தி நல்லவன்யிருவாங்க.

அப்புறம் எங்க ஊர் கிளை நூலகத்துல உறுப்பினர் ஆனதும் வாழ்க்கையே மாறிடுச்சி. சிறுகதை இலக்கியம் … அயல் நாடு கதைகள் … என்னுடைய வாசிப்பு உலகம் பெரிசா மாறிச்சி. தினம் ஒரு புத்தகம் படிச்சிட்டு மத்திடுவேன் .

அப்புறம் MBA செமினார் கிளாஸ் போகும் போது ப்ரொபசர் சொல்லி DALE Carnegie, Shiv kera, அப்புறம் நெறைய self improvement books எல்லாம்  படிக்க ஆரம்பிச்சேன்.

ஆனா இங்க சென்னை வந்து ஒரு ஒன்றரை வருஷம் ஆகிபோச்சி. புத்தகம் படிக்கிற பழக்கம் ரொம்ப கொறைஞ்சி போச்சி 😦 .  ஆனா நெறைய தமிழ் ப்ளாக் , அப்புறம் இன்டேர்நெட்ட மேஞ்சி  அந்த கொறைய தீத்துகிறேன்

Advertisements

Comments»

1. Mathes - April 20, 2009

Raja..

Internet has everything in it..

And do u know, I’ve books.. But I dont have concentration and patience to read them..

anubaviraja - April 20, 2009

இன்டர்நெட்ல எல்லாமே இருக்கலாம் .. ஆனா எனக்கு என்னவோ அதே விசயத்த புத்தகத்துல படிச்சா தான் படிச்சா மாதிரி இருக்கும் 😉

2. அறிவே தெய்வம் - April 20, 2009

\\எனக்கு இன்னும் ஒரு வசதி என்னன்னா எங்க மளிகை கடைக்கு வர்ற பழைய புக் எல்லாம் படிக்கச் ஆரம்பிச்சேன். அதனால பைசா செலவு இல்லாம நெறைய புக்ஸ் நாவல் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன் .

ராஜேஷ் குமாரோட விவேக் , சுஜாதாவோட கணேஷ் வசந்த் , சுபா வோட பரத்-சுசிலா, பட்டுகோட்டை பிரபாகரோட கதைகள், பாலகுமாரனோட நாவல்கள்,

அப்புறம் எங்க ஊர் கிளை நூலகத்துல உறுப்பினர் ஆனதும் வாழ்க்கையே மாறிடுச்சி. சிறுகதை இலக்கியம் … அயல் நாடு கதைகள் … என்னுடைய வாசிப்பு உலகம் பெரிசா மாறிச்சி. தினம் ஒரு புத்தகம் படிச்சிட்டு மத்திடுவேன் .

DALE Carnegie, Shiv kera, அப்புறம் நெறைய self improvement books எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன்.\\

கிட்டதட்ட நானும் இதே மாதிரிதான்…

வாழ்த்துக்கள்…

anubaviraja - April 20, 2009

நன்றி சார்.. தொடந்து ஆதரவு குடுங்க…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: