jump to navigation

SMS படிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்…. June 28, 2009

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , ,
6 comments

ஷப்பா … இன்னும் நமக்கு SMS விடாம அனுப்பிகிட்டு தான் இருக்காங்க … இந்த வார ஸ்பெசல் ….

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா
பெத்தவங்க  சொல்லுறாங்க
யாருடி அந்த பரதேசி நாயி??

ஒரு பையன்  வாந்தி எடுத்தா
பெத்தவங்க  சொல்லுறாங்க
பரதேசி நாயி குடிச்சிட்டு வந்து
வாந்தி எடுக்குது பாரு ….

அட போங்க யா யாரு வாந்தி எடுத்தாலும்
பசங்கள தன திட்டுறாங்க

நியாயம்  தான பாஸ் ….

———————-

காதல் தோல்விக்கு அப்புறம்
எல்லாரும் சொல்லுற ஒரு அருமையான வரி

…..

…..

…..

மச்சி ஒரு quarter சொல்லேன் …..

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை .. 😉

——————————–

உங்கள பத்தி நினைக்கும் போது
உங்க SMS பார்த்துக்குறேன்
உங்கள பாக்கணும் போல இருக்கும் போது
கண்ணா மூடிக்கிறேன் ..
உங்க குரல கேக்கணும் போல இருக்கும் போது
……

……

ஒரு நாய் மேல கல்ல விட்டு எறியுறேன்

ரைட் … அட்டாக் பாண்ணுரிங்கள்ள … குதிச்சிறு  கை பிள்ள ….

இன்னும்  நல்லா மலாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சி எனக்கு SMS அனுப்புங்க பா ….

Advertisements

விழலுக்கிறைத்த நீர்…… June 28, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment

பேருந்து நிறுத்தத்தில் மாணவியை கேலி செய்யும் கேடிகள்
பார்த்து விட்டு கடந்து செல்பவனின் பர்சில் சிரிக்கிறாள்
உயிர் விட்டு அண்ணனுக்கு விழி தந்த தங்கை

விழலுக்கிறைத்த நீர்……

இது உங்கள் சொத்து … June 22, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ், தலை.
1 comment so far

புதிதாய் வாங்கிய கார் சீட்டின் உரையை கூட கிழிக்கவில்லை
நேற்று நடந்த ஜாதி கலவரத்தில்
பேருந்தின் கண்ணாடியை நொறுக்கியவன்…

இது உங்கள் சொத்து …

சென்னை அனுபவங்கள் பார்ட்-1 June 21, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
Tags: , , , , , ,
3 comments

எல்லாருக்கும் வணக்கம் … நான் சென்னை வந்து ஒரு ரெண்டு வருஷம் ஆக போகுது . சரி பயபுள்ள ஊரு  பூராம்   சுத்திருப்பான்னு நிங்களா கற்பனை பண்ணினிங்கனா அதுக்கு நான் பொறுப்பு கெடயாது ஆமாம். நான் சுத்தி பார்த்த எடங்களும் சிச்சிவேசனும் தான் இந்த போஸ்ட்.

மெரினா பீச்:

ஏற்கனவே எட்டங்க்லாஸ் படிக்கும் போது  அம்பது பைசாக்கு ஐஸ்கிரீம்ன்னு  சொல்லி அஞ்சம்பதுன்னு ஏமாத்தின ஏரியா அதுனால இந்த தடவை எச்சரிக்கையா தான் போனேன் . மொத தடவை தனியா போகலையே … அண்ணா சமாதிக்கு பஸ் ஏற போனதோட சரி , பீச் பக்கம் போகலியே , அப்புறம் அண்ணன் (பாலாஜி) , ரூம் மேட் & நண்பர்களோட முதல் தடவை போனேன்.    அப்புறம் நைட் shift பார்க்கும் போது  பாலாஜிக்கும் எனக்கும் shift ஒரே நேரத்துல முடிஞ்சிரும் அடிக்கடிஅதிகாலை அஞ்சி மணிக்கு பீச் லைட் ஹவுஸ் கிட்ட போய் நல்லா பொழுது விடியிற வரைக்கும் நிப்போம் 🙂 .

சமீபத்துல ஒரு தடவை  weekend ரொம்ப போர் அடிச்சி மதியம் 12 மணிக்கு உச்சி வெயிலில  பீச் போனது ஒரு சுவாரசிய அனுபவம் அடுத்த போஸ்ட்ல அத பத்தி பேசலாம்

ஸ்பென்செர் பிளாசா :

எல்லாரும் இங்க எதுக்காக முதல் தடவை போனங்கன்னு எனக்கு தெரியாது , நான் போனது ஒரு இண்டர்வ்யுகாக. எல்லா ரவுண்டும் clear பண்ணி  கடைசில சொதப்பி வேலை வாய்ப்பு போன எடம் . அதுக்கப்புறம் பையில முப்பத்தஞ்சி ருபாய்  மட்டும் வச்சிக்கிட்டு ரெண்டு தடவை ஸ்பென்செர் போயிட்டு வந்துருக்கேன் .

சிட்டி சென்டெர் :

அட என்னப்பா இது , இங்கயும் முதல் தடவை நான் போனது ஒரு கால் சென்டெர்  இண்டர்வ்யுகாக. அதுவும் புட்டுகிசின்னு வச்சிகொங்களேன். சென்னைக்கு வந்த புதுசு அது , இப்படி ஒரு உலகம் இருக்குமான்னு என்னையே கிள்ளி பார்த்துகிட்டேன் . அதுக்கப்புறம் அந்த பக்கம் தலை வச்சி இன்னும் படுக்கலை.

பெசன்ட் நகர் பீச் :

இங்க என்னோட ரூம் மேட் தான் கூட்டிட்டு போனாரு , ஆனா அப்பிடியே பைக்க விட்டு கேள ஏறக்காம கூட்டிட்டு   வந்துட்டாரு . கேட்டா நீ சின்ன பைய்யன் கண்டது கழுதய பாத்து கண்ணுகல கெடுத்துகாதன்னு சொல்லிட்டாரு . அய்யா சென்னைவாசிகளே  அங்க அப்பிடி என்ன தான் நடக்குது ?

மத்த எடங்கள அடுத்த போஸ்ட் ல பார்ப்போமா ?? இப்போதைக்கு ஜூட் 🙂

மாதம் ஒரு பாலைவன சோலை …. June 21, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
1 comment so far

முழு அலங்காரத்துடன் வாசலிலே மனைவி
சல்யுட் அடிக்கும் கூர்கா
கும்மாளத்துடன் என் குழந்தைகள்
என்ன செய்வேன் – மாதத்திற்கு ஒரே ஒரு முதல் தேதி …

மாதம் ஒரு பாலைவன சோலை ….

பல நாட்களாக போஸ்ட் போடாத காரணங்கள் .. June 21, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
2 comments

நண்பர்களே கடந்த சில நாட்களாக ரொம்ப நல்லா இருந்துருப்பிங்கன்னு எனக்கு நல்லா தெரியும் என்னா நான் ப்லோக் ல எந்த போஸ்ட்டுமே போடலையே … உங்க மகிழ்ச்சிய கெடுக்குரதுகாகவே – I am back 🙂

இத்தனை  நாள் நான் எழுதாம இருந்ததுக்கு காரணங்கள் :

காரணம் ஒன்று :

அய்யோ… இவ்ளவு recessionலயும்  எனக்கு promotion குடுத்து அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக்கிடங்க . (யோவ் !! சத்தியமா சொல்றேன்யா நானும் மேனேஜர் தான் யா நம்புங்க …)

வேலை .. ம்ம்ம்ம் .. டெய்லி டரியல் தான் ….வந்தவுடனே மெயில் செக் பண்ணிட்டு படுத்துடு டா கைப்புள்ள அப்படின்னு தான் காதுக்குள்ள குரல் கேட்குது 😦 . எழுத முடியல … முடியல

காரணம் ரெண்டு :

என் தங்கச்சிக்கு கல்யாணம் .. ஆமாம் , மாப்ளை சென்னை தான் . அந்த வேலையா ஒருக்கு ஒரு மூணு நாலு தடவை போயிட்டு வந்தாச்சி 😦 , ஜஸ்ட் Thousand kilometers per visit !!

காரணம் மூணு :

என்னோட பெரியம்மா பையன் கல்யாணம் 🙂 . மதுரைல வச்சி நடந்துச்சி … அது விஷயமா நெறைய வேலைகள் .. (வேலை சொல்லியே உசிர வங்கிடுவாங்க போல இருக்கே 🙂 )

காரணம் நாலு :

என்னோட ரூம் மேடோட அண்ணன் கல்யாணம் மேட்டுர்ல அப்புறம் சில கல்யாண நிகழ்ச்சிகள் …

இதெல்லாம் நொண்டி சாக்குன்னு என்னக்கும் தெரியுது .. இருந்தாலும் சிக்கிரம் நெறைய பகிர்ந்துக்கலாம் … வர்டா ….:D

%d bloggers like this: