jump to navigation

சென்னை அனுபவங்கள் பார்ட்-1 June 21, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
Tags: , , , , , ,
trackback

எல்லாருக்கும் வணக்கம் … நான் சென்னை வந்து ஒரு ரெண்டு வருஷம் ஆக போகுது . சரி பயபுள்ள ஊரு  பூராம்   சுத்திருப்பான்னு நிங்களா கற்பனை பண்ணினிங்கனா அதுக்கு நான் பொறுப்பு கெடயாது ஆமாம். நான் சுத்தி பார்த்த எடங்களும் சிச்சிவேசனும் தான் இந்த போஸ்ட்.

மெரினா பீச்:

ஏற்கனவே எட்டங்க்லாஸ் படிக்கும் போது  அம்பது பைசாக்கு ஐஸ்கிரீம்ன்னு  சொல்லி அஞ்சம்பதுன்னு ஏமாத்தின ஏரியா அதுனால இந்த தடவை எச்சரிக்கையா தான் போனேன் . மொத தடவை தனியா போகலையே … அண்ணா சமாதிக்கு பஸ் ஏற போனதோட சரி , பீச் பக்கம் போகலியே , அப்புறம் அண்ணன் (பாலாஜி) , ரூம் மேட் & நண்பர்களோட முதல் தடவை போனேன்.    அப்புறம் நைட் shift பார்க்கும் போது  பாலாஜிக்கும் எனக்கும் shift ஒரே நேரத்துல முடிஞ்சிரும் அடிக்கடிஅதிகாலை அஞ்சி மணிக்கு பீச் லைட் ஹவுஸ் கிட்ட போய் நல்லா பொழுது விடியிற வரைக்கும் நிப்போம் 🙂 .

சமீபத்துல ஒரு தடவை  weekend ரொம்ப போர் அடிச்சி மதியம் 12 மணிக்கு உச்சி வெயிலில  பீச் போனது ஒரு சுவாரசிய அனுபவம் அடுத்த போஸ்ட்ல அத பத்தி பேசலாம்

ஸ்பென்செர் பிளாசா :

எல்லாரும் இங்க எதுக்காக முதல் தடவை போனங்கன்னு எனக்கு தெரியாது , நான் போனது ஒரு இண்டர்வ்யுகாக. எல்லா ரவுண்டும் clear பண்ணி  கடைசில சொதப்பி வேலை வாய்ப்பு போன எடம் . அதுக்கப்புறம் பையில முப்பத்தஞ்சி ருபாய்  மட்டும் வச்சிக்கிட்டு ரெண்டு தடவை ஸ்பென்செர் போயிட்டு வந்துருக்கேன் .

சிட்டி சென்டெர் :

அட என்னப்பா இது , இங்கயும் முதல் தடவை நான் போனது ஒரு கால் சென்டெர்  இண்டர்வ்யுகாக. அதுவும் புட்டுகிசின்னு வச்சிகொங்களேன். சென்னைக்கு வந்த புதுசு அது , இப்படி ஒரு உலகம் இருக்குமான்னு என்னையே கிள்ளி பார்த்துகிட்டேன் . அதுக்கப்புறம் அந்த பக்கம் தலை வச்சி இன்னும் படுக்கலை.

பெசன்ட் நகர் பீச் :

இங்க என்னோட ரூம் மேட் தான் கூட்டிட்டு போனாரு , ஆனா அப்பிடியே பைக்க விட்டு கேள ஏறக்காம கூட்டிட்டு   வந்துட்டாரு . கேட்டா நீ சின்ன பைய்யன் கண்டது கழுதய பாத்து கண்ணுகல கெடுத்துகாதன்னு சொல்லிட்டாரு . அய்யா சென்னைவாசிகளே  அங்க அப்பிடி என்ன தான் நடக்குது ?

மத்த எடங்கள அடுத்த போஸ்ட் ல பார்ப்போமா ?? இப்போதைக்கு ஜூட் 🙂

Advertisements

Comments»

1. mathes - June 22, 2009

ஸ்பென்செர் பிளாசா – இந்த இடத்த நான் மறக்க மாட்டேன்..

ஒரு பையன் + ஒரு டாட்டா சுமோ…

ரைட் சைடுல 3 பொண்ணுங்க left சைடுல 3 பொண்ணுங்க..

ஹப்பா… எங்க எல்லாருக்கும் வயறு எரிஞ்ச நாள்…

மறக்க முடியாது…

2. anubaviraja - June 29, 2009

மாதேஷ் .. இது எப்போ .. சொல்லவே இல்ல !! ஒரு பையன் , ஆறு பொண்ணுங்களா ?? நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் …..

3. சென்னை அனுபவங்கள் பார்ட்-2 « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - May 28, 2012

[…] போடுற மோத ஆள் நானா தான் இருக்கும்.. சென்ற பதிவுக்கு வாசக கண்மணிகள் மத்தியில் போதுமான […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: