jump to navigation

சிவா மனசுல சக்தி – சந்தானத்துக்கு ஆஸ்கார்…. July 19, 2009

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , , , ,
6 comments

நீங்க இன்னும் யூத் தானா?? கண்டுபிடிக்கிறதுக்கு ஒரே வழி – ஒரே கேள்வி – உங்களுக்கு சிவா மனசுல சக்தி புடிச்சிருக்கா ?? ஆமாம் அப்படின்னா நீங்க யூத் இல்லினா நீங்க ஓல்ட் பார்ட்டி  . நான் எப்டின்னு கேக்குறிங்களா  ?    எனக்கு தான் படம் ரொம்ப பிடிச்சிருக்கே 🙂

ஒன்னும் புது கதை எல்லாம் இல்லைங்க , ஆரம்பத்துல ஹீரோ ஜீவா ஹீரோயின் கிட்ட மிலிடரி ஆபிசேர் அப்படின்னு டுபாகூர் விடுறாரு , அதே மாதிரி அந்த பொண்ணும் நான் air hostess அப்படின்னு   புளுகுது , கடைசில ஜீவா கூரியர் பையன், அந்த பொண்ணு ரேடியோ ஜாக்கி அப்படின்ன்னு தெரிஞ்சதும் மோதல் – காதல் – ஒண்னு சேரல்    அப்படின்னு வழக்கமான தமிழ் சினிமா கதை தான். ஆனா அத சொன்ன விதம் 🙂

ரொம்ப ஜாலியான  ஒரு கதை களம் எடுத்துட்டு டைரக்டர் சும்மா புகுந்து விளையாடிருக்குறார். படம் முழுக்க நகைச்சுவை பரவி கெடக்குது . என்ன பொருத்தவரைக்கும் இந்த்த படத்தோட உண்மையான  ரெண்டு   ஹீரோ ஒண்னு யுவன் – எல்லாமே அருமையான பாடல்கள். அப்புறம் நம்மாளு சந்தனம். கவுண்டர் ஸ்டைல் காமெடி இவருக்கு நல்லா கை குடுக்குது.

சில ஹைலைட் காமெடி :

 • முதல் தடவை பாருக்கு போகும் போது, மிச்சம் இருக்குற சைடு டிஷ் எல்லாம் carry பெக்ல  எடுத்து போட்டுட்டு , மினி பீர் வச்சிக்கிட்டு உட்கார்ந்டுருக்குற சத்யன பார்த்து டென்ஷன் ஆகும் போது ….
 • சக்திய தேடி ஏர்லைன்ஸ் ஆபீஸ் போய் ஷகீலாவ    பார்த்து ஜீவா அசிங்கப்பட்டு நிக்கும் போது விழுந்து  (நெஜமாவே ) விழுந்து சிரிக்கும் போது….
 • சத்யம் தியேட்டர் வாசல்ல – ப்ளாக் டிக்கெட் விக்கும் ஜீவாவ கலாய்க்கும் போது
 • கும்பல் of குர்காஸ்   அப்படின்னு பல்பு வாங்கிட்டு நிக்கும் போது ….
 • தியேட்டர் குள்ள போய் ஸ்க்ரீன் கிழிச்சி தூக்குல தொங்குன்னு ஜீவாவ செதைக்கும் போது…
 • ஒவ்வொரு தடவையும் “ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு felling ”   அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசும் போது…
 • ஒவொரு தடவையும் தன்னோட புது மொபைல் போன ஜீவா உடைக்கும் போதும் அழுமுஞ்சி ரியாக்சன் காட்டும் போது …
 • கடைசில பார்ல இப்போ அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு அப்டிங்க்ரியா ?? இல்லை அப்ப்டிங்க்ரியா ?? அப்படின்னு கேட்டு அதுக்கு ஜீவா சொல்லுற ” தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ” அப்படி சொல்லுறதுக்கு ரியாக்சன் குடுக்கும் போது …

பாஸ் கலக்கிடிங்க கீப் இட் up!!

நான் மட்டும் ஆஸ்க்கார் கமிட்டில இருந்தா இந்த வருசம் அவார்ட் சந்தனத்துக்கு தான் 🙂

Advertisements

பொழைக்க தெரியாத நல்லுள்ளம் July 16, 2009

Posted by anubaviraja in தமிழ், தலை, நடந்தவை.
add a comment

 • அவரு வீட்டுக்கு யாரோ ஓசீல தண்ணி பைப் connection குடுத்துடாங்கலாம் , அவரு கோபப்பட்டு உடனே கட் பண்ண சொல்லிட்டாராம்….
 • அவரு வெளிய போகும் பொது ஒரே ஒரு கார் மட்டும் தான் கூட போகுது ….
 • அவரு ஒரு டாம் கட்டினாரு …மிச்சம் அஞ்சி கோடி இருந்திச்சாம் அத வச்சி ஒரு பூங்கா கட்ட சொல்லிட்டாராம்
 • அவரு விட்டுல அசைவ சாப்பாடு …சூப்பர் … நல்லா அவிச்ச முட்டை ரெண்டு ..
 • இலவசமா கலர் டிவி குடுக்கலையாம் வெறும் கல்வி மட்டும் தான் குடுக்குறார் …
 • சும்மா சும்மா கிராமத்துக்கேல்லாம் போய்கிட்டு இருந்துருக்குராறு …
 • மாசம் மாசம் கட்சில இருந்து முன்னுறு ரூபாய் (ஆத்தாடி!! ) வாங்கிருக்குராறு …

தலை பாசைல “இப்படியெல்லாம் ரொம்ப நல்லவனா இருக்காத ன்னே இளிச்சவாயன்னு சொல்லிருவாங்க ….”

அப்ப்டிக்ற ரேஞ்ச்ல இருந்துருக்குறார் யாருன்னு உங்களுக்கே தெரியும்னு நெனைக்கிறேன் ….

மறைந்தும் அணையாத மாட விளக்கே ….. July 7, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment

ஆண் பிள்ளை அழக்கூடாது என்பாயே
பரீட்சைக்கு அழும் போது பாடம் சொல்லி தந்தாய்
பேய்க்கு அழும் பொழுது நெற்றியில் நீறிட்டு சென்றாய்
நானழுது தாங்காது நீஅழுவாய் – கதறும் எனை கண்டு
புன்னகையோடு புகை படமாய் நின்றாயே ???

மறைந்தும் அணையாத மாட விளக்கே …..

ஒளி மங்கிய எதிர்காலம் ….. July 5, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
add a comment


ஆக்சிஜென் பாக்கெட் ஐந்நூறு ரூபாய்
தண்ணீர் பாட்டில் ஆயிரம் ரூபாய்
தலையை சிலுப்பி விழித்தெழுந்து
சிக்னலில் நிற்கும் வண்டியின் இஞ்சினை நிறுத்தினேன் ..

ஒளி மங்கிய எதிர்காலம் …..

நாங்களும் நாடோடிகள் தாங்கோ …. July 5, 2009

Posted by anubaviraja in சினிமா, சென்னை, பிடித்தவை.
Tags: , , , , , ,
add a comment

போன வாரம் ஞாயிற்று கிழமையே சும்மா இருக்க பிடிக்காம சங்கம் தியேட்டர்ல நாடோடிகள் படம் புக் பண்ணி பார்த்துட்டு வந்தாச்சி …அத ஒரு போஸ்ட் போடுறதுக்கு இவ்வளவு நாள் ஆயிரிச்சி 😦 . ஆறு மாசம் முன்னாடி சத்யம் தியேட்டர் போய் SLUM டாக் பார்த்தது . அப்புறமா போன வாரம் தான் சங்கம் பக்கம் தலை வச்சி படுத்துருக்கோம் . போன தடவை ஆபீஸ்ல ப்ரீயா கூட்டிட்டு   போனாங்க   இந்த தடவை என்னோட ரூம் மேட் 🙂

படம் பாக்குறதுக்கு முன்னாடி ஒரு பத்து விமர்சனம் படிக்குறது என்னோட வழக்கம் 🙂 அடே மாதிரி பார்ததேல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிருந்தாங்க . ரைட் போல்லாம்னு கெளம்பிட்டோம்.

உண்மையிலேயே நல்லா தான் இருந்திச்சி , என்ன நான் உட்கார்ந்திருந்த சீட் சாயவும் முடியாம நிமிர்ந்து உக்காரவும் முடியாம இம்சை பண்ணிருச்சி , ரைட் படத்துல ஆழ்ந்துட்டதால  அது பெரிசா தெரியல … முழு கதையையும் சொல்ல எனக்கு தெரியாது ஆனா எல்லாரும் கை தட்டின சீன்கள் :

 • BA வரலாறு கோல்ட் மெடல் அப்படின்னு சசி குமார அவங்க அப்பா கிண்டல் பண்ணும் போது தன்னோட குடும்ப STD ய ( STDன்னா வரலாறு தான ?? )அவரு ஒப்பிகிராறு பாருங்க அப்போ ….
 • மொட்டை மாடியில தங்கச்சிய விஜய் ரூட் விடும்போது “எல்லாம் எங்களுக்கு தெரியும் டா வெண்ணைகளா ” அப்படின்னு சசிகுமார் சொல்லும் போது
 • கஞ்சா கருப்போட இன்றோடக்சன்  … அத தியேட்டர்ல பாருங்க 🙂
 • மாமாவுக்கு (சசி ) கொலகட்டை குடுத்துறலாம்னு எடுத்துட்டு வந்த ஹீரோயின் அத பரணி சாபிடுரத பார்த்து குடுக்கும் ரியாக்சன் … “அவனும் உன்னையே தான் சுத்திகிட்டு இருக்கான் பார்த்து செய் ” அப்படின்னு கசுவலா சசி சொல்லுறது …
 • “பட் மாமா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ” – சசி பல கோணங்களில …
 • “முள்ளை பிடிச்சாலும் முழுசா பிடிக்கணும் டா” – சசி ; “போங்க டா நல்லா பிடிங்க ” கஞ்சா கருப்பு 🙂
 • விஜயோட அப்பா  லவ் லெட்டருக்கு சசி தங்கச்சி என்ன ரியாக்சன் குடுக்க்ரான்னு பாக்குறதுக்கு கூலிங்  கிளாஸ் சகிதம் வெயிட் பண்ணுறது
 • பரணி யோட அப்பா பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலீஸ் கிட்ட்ட பரணிய பத்தி வண்டி வண்டியா திட்டிட்டு அப்புறம் காட்டுற ரியாக்சன்
 • அஞ்சி நிமிசத்துல எடுத்த போடோவ பிளேக்ஸ் போடா   மாத்திட்டு போற அரசியல் வாதி சின்ன மணி அண்ணன் 😉

இன்னும் நெறைய ….

இந்த படம் பார்த்துட்டு வந்த பிறகு friend லவ் பண்ணி சேர்த்து வைடா அப்படின்னு வந்து நின்னா ஒரு அஞ்சி நிமிஷம் யோசிக்க வச்சதுல சமுத்திர கனி சக்சஸ் கனி ஆயிருக்குறார் 🙂

அடுத்து என்ன்ன ரொம்ப பாதிச்ச SMS …. நெக்ஸ்ட் மீட் பண்ணலாம் 🙂

அப்புறம் பதிவோட தலைப்புக்கு என்ன அர்த்தம்ன்னு யோசிக்குரிங்களா ??? படம் பார்த்துட்டு வந்ததும் திங்கள் கிழமை எங்க ஹவுஸ் ஓனர் விடு காலி பண்ண சொல்லிடாரு .. இப்போ புரியுதா ??? 😉

%d bloggers like this: