jump to navigation

ஆயிரத்தில் ஒருவன் – என்னை பாதித்தது ஏன் ??? January 31, 2010

Posted by anubaviraja in சினிமா, தமிழ், ரசித்தவை.
Tags: , , ,
2 comments

ஒரு வழியா எல்லாரும் ஆயிரத்தில் ஒருவன் படத்த எல்லாரும் கிழிச்சி தொங்க போட்டாச்சி 🙂 . படத்த பத்தி விமர்சனம் நல்ல படியாவும் இருந்திச்சி – மோசம்ன்னும் சொல்லிருந்தாங்க … ஆனா ட்ரைலர் பார்த்ததுமே படத்தபார்த்துடணும்ன்னு முடிவே பண்ணியாச்சி .. நமக்கு தான் “ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாம்பளே கேக்க மாட்டோமே” 😉 …

பொங்கலுக்கு தான் ஊருக்கு போறோமே எப்பிடி படம் பாக்குறதுன்னு யோசித்த பொழுது … கண நேரத்தில் உதயமானது அந்த ஐடியா .. சிவகாசில தான் அட்லாப்ஸ் தியேட்டர் இருக்குதே , அதுக்கு ஆன்லைன் புக்கிங் இருக்குதான்னு  பார்த்தா – அட இருந்திச்சி பா . ரைட் புக் பண்ணிட்டு – பொங்கலுக்கு அடுத்த நாள் கெளம்பிட்டோம்  …

படத்தோட கதைய எல்லாரும் ஏற்கனவே சர்ப் போட்டு அலசிட்டதனால , இந்த படம் என்ன எப்படி பாதிச்சதுன்னு சொல்லிடறேன் …

 • வித்தியாசமான கதை களம் –   இந்த மாதிரி ADVENTURE STORY தமிழ்ல வந்து ரொம்ப நாள் ஆச்சின்னு  நெனைக்கிறேன்
 • ஹீரோக்கு படத்துல ஹீரோயசம் இல்லவே இல்லை (நெறைய எடத்துல கார்த்தி கைப்பிள்ளை மாதிரி அடி வாங்கிகிட்டு நிக்கிறார் 🙂 )
 • ஹீரோயின்க்கு படத்துல குடுக்கபட்டிருக்குற முக்கியத்துவம் – அதுவும் ரீமா சென் கெடைக்கிற பால் எல்லாத்தையும் சிக்ஸர் அடிச்சி கலக்கிட்டாங்க ..
 • ரொம்ப நாள் கழிச்சி பார்த்திபன் டபுள் செஞ்சுரி அடிச்சா மாதிரியான ஒரு அட்டகாசமான நடிப்பு
 • “இப்படை தளம் பெயர் என்ன .. இது குறித்து தாங்கள் விவரிக்கவே இல்லையே …அச்சப்படுவோம் என்றா …” பார்த்திபன் பேசுற இந்த டயலாக் – எனக்கு RANG DE BASANDHI கிளைமாக்ஸ் சீன் தான் ஞாபகம் வந்திச்சி
 • இங்கிலீஷ் படங்கள்ல மட்டுமே பார்த்த பிரமாண்டமான சண்டைகாட்சிகளை தமிழ் படத்துல கொண்டு வந்தது
 • சோழர்கள் பேசுற தூய தமிழ் வசனங்கள்

இதெல்லாம் எல்லருக்கும் பிடிச்ச அம்சங்கள் அப்படின்னு நெனைக்கிறேன் . இருந்தாலும் என்ன பாடிச்சதுக்கு முக்கியமான காரணம் – இலங்கை தமிழர்களின் வாழ்க்கைய படத்தின் காட்சிகள் பிரதிபலித்தது தான் .. (செல்வராகவனே இத இல்லைன்னு மறுத்திருந்தாலும் )

 • அவர்கள் பேசுற தமிழ் – இலங்கை தமிழ் மாதிரியே இருக்குறது ..
 • நம்பிக்கை துரோகத்தினால ஆபத்துல சிக்கிகிறது ..
 • நவீன ஆயுதங்களுக்கு முன்னாடி அவங்க கிட்ட இருக்குற பழைய வாள் கேடயத்த வச்சிக்கிட்டு சண்டை போடுறது
 • எதிரிகள் ஜெயித்தும் பெண்களை மானபங்க படுத்துறது
 • கடைசி நேரத்துல கூட கப்பல்ல உதவி வந்துராதான்னு பார்த்திபன் கண்ணுக்கு கப்பல் தெரியிறது

இப்படி சொல்லிகிட்டே போகலாம் .. இதுனால தான் நான் சென்னை வந்ததும் ஒரு தடவை INOX ல போய் இந்த படத்த பார்த்துட்டேன் .

எனக்கு தெரிஞ்சி இது பார்க்க வேண்டிய படம் தான். ஆயிரத்தில் ஒருவன் – கோடு போட்ருக்கார் , யாரவது ரோடு போடுங்களேன் பா …

Advertisements

தமிழ் படம் பாத்தாச்சிங்கோ… January 30, 2010

Posted by anubaviraja in சினிமா, சென்னை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , ,
1 comment so far

அடடடா .. என்ன ஒபெநிங் படத்துக்கு .. திங்கள் கிழமை வரைக்கும் ஆன்லைன் புக்கிங்  எல்லா தியேட்டர்லயும்  புல் …  ( கொஞ்சம் ஓவரா தான் டிவி ல விளம்பரம் பண்ணிட்டாங்களோ ?? )

ஆஹா ரஜினி  படத்து ஒபெநிங் மாதிரி அளப்பறைய குடுக்குராங்கலேன்னு சரி எந்த தியேட்டர்ல டா டிக்கெட் இருக்கும்னு பார்த்துட்டு அபிராமி ல புக் பண்ணினோம் …

பரவயில்லை வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாம காமெடி பண்ணிருக்காங்க 🙂 . சிவா – இவர தவிர இந்த படத்துக்கு வேற யாரையும் ஹீரோவா நெனைச்சி பார்க்க முடியல … அவரோட பாடி லாங்குவேஜ் டயலாக் டெலிவரி … ம்ம்ம் .. பின்னி பெடல் எடுத்துட்டார் …

இந்த படத்துல .. இந்த சீன தான் கலாய்க்க போறங்கன்னு தெரியும் … ஆனா எப்படி கலாய்க்க  போறாங்கன்னு உங்களால யூகிக்க முடியாது .. அது தான் டைரக்டரோட வெற்றி . கொஞ்சம் சொதப்பிருந்தாலும் லொள்ளு சபா மாதிரி ஆயிருக்கும் . டைரக்டர் லியோநியோட மருமகனாம்ல .. மாமா பேர காப்பாத்திட்டார் .. ( சினிமாவ கேலி பண்ணுறதுல தான் ) .. ஆனாலும் ரஜினி – விஜய் மேல உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி 😉

இண்டர்வலுக்கு முன்னாடி படம் சரியான வேகம் .. அப்புறம் கொஞ்சம் மொக்கை தான் … இருந்தாலும் பரவாஇல்லை …. தமிழில் ஒரு SCARY MOVIE பார்த்த எபெக்ட் .. ( ஏற்கனவே நமக்கு அந்த மாதிரி படம் ரொம்ப பிடிக்கும் அப்டிங்கறது வேற விஷயம் 😀 )

படத்தில நான் ரசித்தவை …

 • வெண்ணிறாடை மூர்த்தி , பாஸ்கர் , மனோ பாலா – அவங்களோட பேர் ( பரத் , நகுல், சித்தார்தாம் 🙂
 • ஹட்ச் விளம்பரத்த கூட விட்டு வைக்கலை
 • காபி குடிக்கிற கேப்ல  ஹீரோ முன்னேறுற பாட்டு
 • குறிப்பா அந்த rape சீன் (கண்ணா பின்னான்னு கற்பனைய அலையை விடாதிங்க .. படாத போய் பாருங்க 😉 )
 • சினிமா பட்டி – நாட்டாமை – கள்ளி பால் – கிராமத்து சினிமா  சூப்பர்ப்பு…
 • பாமிலி சாங் பாடி ஒன்னு சேருற இடத்துல .. MLTR –  SOMEDAY பாட்டு போட்டது

இப்பிடி அடுக்கி கிட்டே போகலாம் . படம் கண்டிப்பா ஒருதடவை பார்க்க வேண்டியது தான் .. சிவாவ தவிர வேற யார ஹீரோ வா போட்டிருக்கலாம் ???

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நம்ப அஞ்சாநெஞ்சன் அண்ணனோட பையன்  மட்டும் படத்த தயாரிக்கலைன்னா படம் ரிலீஸ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்ட பட்ட்ருக்கும்கோ …

மேட்ரிக்ஸ் கொஞ்சம் கலக்கல் … January 11, 2010

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை.
Tags: , , , ,
add a comment

மேட்ரிக்ஸ் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சின்னு  நெனைக்கிறேன் … மேட்ரிக்ஸ் – 2   பத்தி இன்னும் சில நாட்கள்ல விமர்சனம் போட்டுறேன் (கண்டிப்பா .. இந்த தடவை நம்புங்க பா … )

இப்போ முதல் வீடியோ பாருங்க .. மேட்ரிக்ஸ் விண்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டம்ல ரன் ஆச்சி அப்படின்னா எப்படி இருக்குன்னு ஒரு சின்ன கற்பனை … பில்கேட்ஸ் பார்த்தா தூக்குல தொங்கிடுவார் 😉

நல்லா கவனிச்சி பாருங்க நெறையா உண்மை கூட தெரியும் 🙂

அப்புறம் ரெண்டாவது … சிவாஜி – தி பாஸ் … ட்ரைலர் ஆடியோ … வீடியோ எல்லாம் மட்ரிக்ஸ் படத்துல இருந்து சுட்டுருக்காங்க … சும்மா சொல்ல கூடாது .. நம்ம பசங்க இந்த மாதிரி வேலை எல்லாம் சூப்பர் ஆ பண்ணுறாங்க …

என்ஜாய் … மீண்டும் சந்திப்போம் … அது வரை ….

நான் உனது மனதை தெளிவு படுத்துகிறேன், நியோ. ஆனால், என்னால் கதவை மட்டுமே காண்பிக்க முடியும். நீதான் அதன் வழியே பயணிக்க வேண்டும்.

வாழ்க சனநாயகம்… January 11, 2010

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
2 comments

எத்தனை கோபங்கள்.. எவ்வளவு ஆதங்கங்கள்..
குப்பை அள்ளாமல் சென்ற மாநகராட்சி உந்து மீது,
பகிரங்கமாய் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மீது,
தினம் தலைப்புச் செய்தியில் வரும் ஊழல் மீது,
ஆனால் வாக்குப்பபதிவு தினத்தன்று மட்டும் சிறப்புத் திரைப்படமும், சுகமான உறக்கமும்..

வாழ்க சனநாயகம்…

%d bloggers like this: