jump to navigation

துன்பம் தொலைப்பது எப்படி??? April 30, 2010

Posted by anubaviraja in தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , ,
trackback

திரும்பவும் ஒரு குட்டி கதை… நீ என்ன பெரிய ரஜினியா ?? இல்லை பாக்யராஜா?? ஒரே குட்டி கதையா சொல்லிக்கிட்டு இருக்கியே ? அப்படின்னு கேக்க ப்ப்டாது .. அவங்கள நிறுத்த சொல்லுங்க .. நானும் நிறுத்துறேன் … (எனக்கு SMS அனுப்புரவங்கள சொன்னேன் 😉 )

சரி கதைக்கு  போவோம் … இது கொஞ்சம் வன்முறையான கதை .. அதனால கொஞ்சம் ரத்த வாடை வீசும் .. பரவல்லையா ??? ( பில்ட் அப் போதும் கதைய சொல்லுடா அப்படின்னு சொல்றிங்களா ?? ரைட் ஓகே … )

ஒரு ஊருல  …. (யோவ் .. அப்படி கதை சொல்ல ஆரம்பிக்கிறது தானய்யா உலக வழக்கம் அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி ??? ) சரி … நான் கண்டினியூ பண்றேன் … ஒரு ஊருல ஒரு பெரிய பேங்க் இருந்திச்சாம் .. அதுல ஏகப்பட்ட பணம் புலன்கிகிட்டு இருந்திச்சாம் .. இத கேள்வி பட்டு அந்த பேங்க் இருக்குல்ல பேங்க் ,… (ஆமாடா .. ஆமா.. அப்ப்டிங்க்ரின்களா ??? .. கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கேனோ?? ) ரைட் … பாக் டு தி ஸ்டோரி ….

அந்த திருடன் பேங்க்க கொள்ளை அடிக்க துப்பாக்கியோட உள்ள புகுந்துட்டான் … கிட்டத்தட்ட ஒரு கோடி தேறும் .. கொள்ளை அடிச்சிட்டு திரும்பி போனான் .. அப்ப ஒரு பய புள்ளை கிடு கிடுன்னு நடுங்கிகிட்டு நின்னுகிட்டு இருந்தான்.. திருடன் அவன் கிட்ட வந்தான் … “டே .. நான் இந்த பங்க்க கொள்ளை அடிச்சத பாத்தியா ?? ” அப்படின்னு கேட்டான்..

இந்த பயலுக்கு தான் நாக்குல சனியாச்சே.. “ஆமா பார்த்தேன்னு” சொன்னான் (பெரிய ஹரிச்சந்திரன் வாரிசு 🙂 ) துப்பாக்கிய எடுத்தான் பொட்டுன்னு அவன போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருந்தான் ..

அப்புறம் முன்னாடி ஒரு புருசனும் பொண்டாட்டியும் நின்னுக்கிட்டுருந்தாங்க , அவன் நேரா புருசன் காரன்கிட்ட போய் … “யோவ் .. நான் பாங்க கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா ?? ” அப்டின்னு கேட்டான் .. புருசன்காரன் கொஞ்ச நேரம் யோசிச்சான் .. அப்புறம் சொன்னான் ..

“திருடன் சார்…  திருடன் சார்… நான் பாக்கல… ஆனா என் பொண்டாட்டி பார்த்தா… ”

பயபுள்ளை எப்புடி கோர்த்து விட்டான் பார்த்திங்களா ?? அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை … கல்யாணம் ஆனவனுக்கு அது ஒன்னு தான் பிரச்சனை ;)… மீண்டும் சந்திப்போமா ???

Advertisements

Comments»

1. mathes - May 1, 2010

//அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை … கல்யாணம் ஆனவனுக்கு அது ஒன்னு தான் பிரச்சனை..//

ஒரு வாட்டி நீங்க கல்யாணம் பண்ணி பாருங்க!! அப்போம் தெரியும்!! என்னது இது சின்ன புள்ள தனமா!! ஒரு பொண்ண உசார் பண்ணி, லெட்டர் குடுத்து, உசுருக்கு உசுர லவ் பண்ண, அவ நம்ள முட்டாள் மாத்ரி பார்பா!! கஷ்டப்பட்டு லவ் பண்ணி கல்யாணாம் பண்ண, நகை வங்கி குடு, அம்மா வீட்டுக்கு குட்டிட்டு போ, தம்பிக்கு வேல வாங்கி குடு-நு சொல்லி சொல்லி 50 kg தாஜ்மஹால் மாத்ரி இருந்த பொண்ணு 50 ton-கு வெயிட் போடுவ.. நாம அவ கூட டெய்லி வாக்கிங் போகணும்.. அவ excercise பண்ண, டாக்டர்-ட போக நாம ஹவுஸ் லோன் போட்டு செலவு பண்ணனும்.. அட அதுகூட பரவா இல்ல.. டாக்டர்-அ பரக்க போகும் பொது ஏதோ கல்யாண வீட்டுக்கு போற மாதிரி வீட்ல உள்ள நக நட்டு எல்லாம் போட்டு போயி hospital பில்-அ எத்துறது…
இது எல்லாம் போதாதுன்னு 33% எட ஒதுக்கீடு வேற!!
இதலாம் பார்க்கும் பொது… மோதல பொண்டாட்டிய போட்டு தள்ளு… அப்புறம், இந்த பொண்ண “அடக்கமான பொண்ணுங்க” சொல்லி நம்ம தலையெல கட்டி வச்ச புரோக்கர்-அ போடு!! கோயாள சாவட்டும்!!
(The above context applies both to love and arranged marriage.. எல்ல கல்யாணமும் சொர்கத்தில நிச்சயிக்க பட்டு நாரகத்துல நடக்குது!!)

anubaviraja - May 1, 2010

ஹா ஹா .. .பொண்ணுங்க மேல ஏன் இந்த கொலை வெறி.. ???

//அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை … கல்யாணம் ஆனவனுக்கு அது ஒன்னு தான் பிரச்சனை..//

இத திரும்ப ஒரு தடவை நல்லா படிச்சி பாருங்க…. 😉

mathes - May 6, 2010

அந்த அது எது-னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பாஸ்!! கொஞ்சம் மாற மண்ட நமக்கு!!

anubaviraja - May 8, 2010

கல்யாணம் பண்ணவனுக்கு .. அத தவிர வேற பெரிய பிரச்சினையே கெடயாது 😉 😀

2. mathes - May 10, 2010

இதுல ‘அது’னா ‘கல்யாணம்’ தானா???

இல்ல… நித்தியானந்த ஸ்டைல்-ல எதுவும்-அ??

anubaviraja - May 18, 2010

குருஜி ஸ்டைலேல எல்லாம் நம்ப போக முடியுமா ?? நம்ம ரூட் வேற ரூட் 🙂

3. mathes - May 10, 2010

அட நான் ஏன் இத கேக்கிறேன்னா, நாளா பின்ன நம்ம பேர்ல தப்பு வந்துடற கூடாது பாருங்க!! 🙂

நீங்க போட்டுருக பொம்மை வேற ஒரு மாத்ரி கண் அடிக்குது!! 😉 <– இந்த மாத்ரி தான்!!

4. karthik - August 9, 2013

Super


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: