jump to navigation

சந்தானம் Half அடிச்சிட்டாரு… November 30, 2010

Posted by anubaviraja in Uncategorized.
9 comments

டைட்டில்ல பார்த்ததும் தப்பா நெனைசிக்காதிங்க மக்களே … இது வேற ஒண்ணும் இல்ல சமீபத்துல வெளியான மந்திர புன்னகை படத்தோட சந்தானம் அம்பது படத்துல நடிச்சி முடிச்சிட்டார்… எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க 🙂 😀

 

அட சொன்னா நம்ப மாட்டிங்களே.. நீங்களே எண்ணி பார்த்துக்கோங்க

மன்மதன் படத்துல ஆரம்பிச்ச அவரோட சரவெடி காமெடி பாஸ் படம் வரைக்கும் பட்டைய கேளப்பிரிட்டார்

சில்லுன்னு ஒரு காதல் படத்துல

“டேய் லாக் அப்…  நாயர் கடையில மசால் வடை வாங்குனேன் பருப்பு வேகவே இல்லைன்னு”

சூர்யா வ கலாய்கிரதாகட்டும்

“சும்மா தொங்கி கிட்டு இருந்த பல்ப ஏண்டா ஒடைச்ச ?? “

பொல்லாதவன் படத்துல

“என்ன அந்த கொழந்தைக்கு ஒரு இருவது வயசு இருக்குமா ??

“அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்” அப்படிங்கற சிறப்பான பஞ்ச் குடுத்ததுல ஆகட்டும்

வாமனன் படத்துல ஜெய் மூஞ்சில காறி துப்புறதுல ஆகட்டும்

SMS படத்துல ஜீவாவ அசிங்கபடுத்துறதுல ஆகட்டும்

“She Gift sweater… cooling glass … மங்கி குல்லா … ஓசி ல கிடைச்சது”

வோல்ட் பேமஸ்

“மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் “

பாஸ் படத்துல “என்னைய கலாய்சிட்டாரம்” வரைக்கு…

சந்தானம் கலக்கி கிட்டு தான் இருக்கார் . கூடிய சிக்கிரம் செஞ்சுரி அடிக்கிறதுக்கு வாழ்த்துக்கள் 🙂

அப்புறம் வீராசாமி அப்படிங்கற வரலாற்று சிறப்பு மிக்க படத்துல சந்தானம் நடிச்சிருக்கார் அப்படிங்கறது தான் அவரோட வாழ்க்கை பயணத்துல ஒரு மைல் கள்…  சாரி…  மைல் கல்

இப்போதைக்கு இது போதும் “தீயா வேலை செய்யணும் பாஸு… ” பாய் பாய் …

Advertisements

பீகார்ல திரும்பவும் நிதிஷ் குமார் ஆட்சி – சும்மா அதிருதுல்ல November 24, 2010

Posted by anubaviraja in செய்திகள், நடந்தவை.
Tags: , , , , , , , ,
4 comments

ஷப்பா ஆண்டவா .. இப்பவாவது இந்த பீகார் மக்களுக்கு நல்ல புத்தி குடுத்து நம்ப தலிவர் லாலு பிரசாத் கைல ஆட்சிய குடுக்க விடாம செஞ்சியே…இதுக்கே உனக்கு லட்சம் தேங்கா உடைக்கனும் 😉

ராப்ரி தேவி ரெண்டு தொகுதிளையும் அவுட் 🙂

 

(more…)

ரஜினி – இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் மேன் November 24, 2010

Posted by anubaviraja in சினிமா, தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , ,
4 comments

நம்ப தலிவர் ரஜினியோட ரோபோ படம் ஹிந்தில ரிலீஸ் ஆனாலும் ஆச்சி ரஜினி பத்தி நம்ப சேட்ஜிகள்  அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு … சாம்பிள்க்கு கொஞ்சம் பிட்டுகள இங்க குடுத்திருக்கேன் படிச்சி பாருங்க ..

ரஜினி சின்ன வயசுல பெட்ல சூ சூ போனதில்ல .. அவர பார்த்து பயந்து பெட் தான் சூ சூ போகும்

 

ரஜினி எட்டு ஊருல எல் கே ஜி படிச்சாரு இன்னிக்கு அதுக்கெல்லாம் பேரு ஏதோ IIT யாம்

 

கலிலியோ சின்ன வயசுல மெழுகு திரி வெளிச்சத்துல படிச்சாரு, லிங்கன் தெரு விளக்கு ல படிச்சாரு ஆனா ரஜினி – ஊதுவத்தி வெளிச்சதுலையே படிச்சவர் கண்ணா ..

 

 

உலகம் 2012 ல அழிஞ்சி போகும்ம்ன்னு யாரு நைனா சொன்னது ?? நேத்து தான் ரஜினி மூணு வருஷ காரண்டியோட ஒரு லேப்டாப் வாங்குனார்

 

 

ரஜினி pizza hut ல போய் இட்லி ஆர்டர் பண்ணா ரெண்டு நிமிசத்துல மதுரை இட்லி வந்து சேரும்

ரஜினியோட ஈமெயில் ஐடி gmail@rajini.com

 

ரஜினி தண்டால் எடுக்கணும்னா ரெண்டு கையாலையும் பூமிய கிழே தள்ளுவார் அவ்வளவு தான்

 

ஒரு நாள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் , பேட் மேன் எல்லா மேனும் ரஜினிய பார்க்க வந்தாங்களாம் , அது எந்த நாள் தெரியுமா ?? ஆசிரியர் தினம்

 

ஜல புயல் வந்ததுகான காரணத்த ரமணன் கண்டு பிடிச்சிட்டார் .. அன்னிக்கு காலையில ரஜினி மெரீனா பீச் பக்கமா ஜாகிங் போனாராம்

 

Where there is a Will there is a way!! Where there is Rajini there is no other way (இத கரகீடா மொழி பெயர்க்க தெரியல ப்பா )

இது மாதிரி டஜன் கணக்குல இன்டர்நெட் புல்லா கெடக்குது  மக்கா

பயபுள்ளைங்க உட்கார்ந்து இதுக்குன்னே யோசிப்பாய்ங்க போல தெரியுது

மன்மதன் அம்பு ட்ரைலர் – வந்தாச்சி November 15, 2010

Posted by anubaviraja in சினிமா, செய்திகள், ரசித்தவை.
Tags: , , , , , ,
4 comments

அன்பு பெரியோர்களே, இனிய தாய்மார்களே, அருமை நண்பர்களே , வந்துருச்சியா வந்துருச்சி… மன்மதன் அம்பு படத்தோட ட்ரைலர் ரிலிஸ் ஆயிரிசி..

 

கமல் பார்க்குறதுக்கு அப்படியே கலைஞன் படத்துல வர மாதிரியே இருக்கார் .. சில்லுன்னு த்ரிஷா , அன்பே சிவம் படத்துக்கப்புரம் கமல் கூட மாதவன் (Welcome Back Maddy 🙂 )

 

படத்துக்கு இப்போவே எதிர் பார்ப்பு ஜிவ்வுன்னு எகிறுது ..

 

டிசம்பர் வரைக்கும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே …

 

லாப் டாப் களவாணியும்.. அவனோட நேர்மையும்.. November 11, 2010

Posted by anubaviraja in செய்திகள், தமிழ், நடந்தவை.
Tags: , , , ,
3 comments

மக்கா ரொம்ப நாள் ஆச்சி உங்கள எல்லாம் சந்திச்சி .. அதுனால இனிமே அடிக்கடி மீட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இங்க ஊருக்குள்ள எல்லா பயலுகளும் செல் போன் வச்சிருக்குற மாதிரி பாரின்ல எல்லா பக்கிகளும் லாப் டாப் வச்சி கிட்டு தான் அலையுவங்க . இங்க கூட நெறைய ஐ டி கம்பனில எல்லார் தலையிலையும் ஒன்னொன்னு கட்டி விட்டுடுறாங்க . அத போற்றி பாதுகாக்குரதுகுள்ள எல்லாரும் கண்ணு முழி பிதுங்கி அலையிறாங்க 😉 நம்ப ஊருல தான் திருடர்கள் ஜாஸ்தி ஆச்சே ..

ஆனா வெளி நாட்டுலயும் திருட்டு பசங்க இருக்க தான் செயிரங்க. இப்படி தான் ஸ்வீடன் நாட்டுல ஒரு காலேஜ் ப்ரோபாசர் லாப்டாப்பை ஒரு களவாணி பய ஆட்டைய போட்டுட்டான்… ஆனா பாருங்க பயபுள்ள நேர்மைக்கு பொறந்தவன் போல , லேப்டாப் ல இருந்த முக்கியமான டேட்டா எல்லாத்தையும் பேன் டிரைவ்ல காப்பி பண்ணி அனுப்பி வச்சிருக்கான் ப்பா …

அவன யாராவது ரொம்பபபபபப………. நல்லவன்னு சொல்லிருப்பாங்கலோ???

 

பட் அவனோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . விசயத்த முழுசா  படிக்க இங்க கிளிகுங்கோ

%d bloggers like this: