jump to navigation

ஈசன் ட்ரைலர் – சசிகுமாரின் பட்டண பிரவேசம் December 8, 2010

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை.
Tags: , , , , , ,
add a comment

ரொம்ப நாளைக்கு அப்புறம் சசி குமார் இயக்கத்துல ஈசன் வர பதினேழாம் தேதி ரிலீஸ் ஆக போகுது … இப்போதைக்கு ட்ரைலர்  ரிலீஸ் பண்ணிருக்காங்க

 

 

சுப்ரமணிபுரதுல இருந்து அப்படியே வித்தியாசமான கதை  களத்தோட இந்த படத்த எடுத்துருக்கார் போல தெரியுது…

சமுத்திரகனிக்கு போலீஸ் கெட்டப் கலக்கலா இருக்கு

சசிகுமாரோட வித்தியாசமான ஹேர் ஸ்டைல்

நாடோடிகள் அபிநயா – நாடோடிகள் சின்ன மணி அண்ணே  🙂 … சுப்ரமணியபுரம் சித்தன் … கோவா வைபவ் இப்படி நெறய பேர் நடிச்சிருக்காங்க…ஏதோ த்ரில்லர் படம் மாதிரி இருக்கு.

 

படம் இப்பவே பார்க்கனும் அப்படிங்கற எதிர்பார்ப்ப தூண்டுது …

 

பொறுத்திருந்து பார்ப்போம் சசிகுமாரின் பட்டண பிரவேசம் வெற்றி அடையுதான்னு

Advertisements

நானும் பிரபல பதிவர் தான்… நானும் பிரபல பதிவர் தான் December 2, 2010

Posted by anubaviraja in செய்திகள், நகைச்சுவை, நடந்தவை.
Tags:
5 comments

இதுநாள் வரைக்கும் நானும் சும்மா பொழுது போக்கா தான் ப்ளாக் எழுதிகிட்டு இருந்தேன் .. தம்பி மாதேஷ் – என்னையும் மதிச்சு அவரோட ப்ளாக்ல  எழுதுறதுக்கு பெர்மிஷன் குடுத்தாரு … நாம யாரு .. ஆப்பிள் iPhone பேன் பசங்க பத்தி ஒரு ப்ளாக் எழுதிட்டோம்ல….

நீங்களே  படிச்சி பாருங்க 🙂 🙂

 

 

நாளை சந்திப்போமா ?? 😀

FarmVille – கொலைகார Facebook கேம் December 2, 2010

Posted by anubaviraja in செய்திகள், நடந்தவை.
Tags: , , , , , ,
7 comments

நாட்டுல பல பேருக்கு ரெண்டு நாள் facebook சைட் டௌன் ஆயிரிச்சினா பைத்தியமே பிடிசிரும் போல தெரியுது ( நீ என்ன பெரிய வள்ளலா அப்படின்னு கேக்கிரிங்க ?? நாமளும் அதுல ஆக்டிவா தான இருக்குரோம் 😉

 

FaceBook ல அப்டேட் பண்ணனும் அப்டிங்கறதுகாகவே போட்டோ எடுக்குறது, பல்லு விளக்குனது, பக்கோடா சப்ட்டது இது எல்லாத்தையும் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றது … இப்படி நம்ம ,மக்களோட FaceBook வாழ்க்கை ரண கொடுரமா தான் போகிறது இருக்குது.

இந்த லட்சணத்துல Facebook குள்ளேயே விளையாடுற மாதிரி நெறைய கேம்ஸ் இருக்கு .. இந்த கப்ளிங்க்ஸ் , ஸ்பூன்லிங்க் டிக்கிலோனா இது மாதிரி தலை சிறந்த கேம் எல்லாம் இதுல இருக்கு … ரொம்ப முக்கியமா ஒரு கேம் பத்தி சொல்லியே ஆகணும் FarmVille – இதுக்குள்ள தான் பல பேர் முழ்கி போய் இருக்காங்க..

 

அப்படி இது என்ன கேம் டா அப்படின்னு கேட்டா .. ஏதோ விவசாயம் பண்ணும் அப்ப்டிங்க்றாங்க …  மாடு மேய்கிறாங்க, தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறாங்க , கோழி வளக்குறாங்க, பன்னி பண்ணை வச்சி நடத்துறாங்க… என்ன கொடுமை சார் இது 😦 😦

அவன் அவன் ஊருக்குள்ள விவசாயம் பாக்குறதுக்கு ஆள் இல்லாம நாயா பேயா அலைஞ்சிகிட்டு இருக்கான். இவங்க என்னடான்னா ஆபீஸ் டைம்ல  வேலைய பார்க்காம FarmVille விளையாட வேண்டியது. இவங்க கெட்டது பத்தாதுன்னு “என் வயலுக்கு ரெண்டு மூட்டை உரம் குடு” , “என் கோழி பண்ணைக்கு ரெண்டு கிலோ தவிடு குடுன்னு” பிரண்ட்ஸ் எல்லாருக்கும் request அனுப்பி டார்ச்சர் பண்றாங்கப்பா 😦  விவசாயம் பாக்கணும்னா ஊருக்கு போய் அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க மக்களே…

 

 

சரி இவங்கலாவது லோக்கல் மக்கள் லோக்கலா ஏதோ பண்றாங்க அப்படின்னு பார்த்தா .. அமெரிக்கால ஒரு மேடம் என்ன பண்ணிச்சி தெரியுமா ??? அது விளையாண்டு கிட்டு இருக்கும் போது அவங்களோட மூணு மாச பிள்ளை பச்சை கொழந்த அழுதுருக்கு….

கேம் பாதிலேயே நிறுத்த வேண்டிய கோபத்துல புள்ளைய பிடிச்சி உலுக்கியே கொன்றிச்சி 😦 😦 😦

 

மகா ஜனங்களே தயவு செஞ்சி உங்க பொன்னான நேரத்த இந்த மாதிரி ஒரு கொலைகார கேம் விளையாண்டு நீங்களும் சாகடிக்காதிங்க ..

திரும்பவும் சந்திப்போம் ….

%d bloggers like this: