jump to navigation

Source Code – சூப்பரா ஓடும் ரயில்.. June 8, 2011

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு இங்கிலீஷ் படம் … அதுவும் நானா பார்க்கல நம்ப நண்பர் ஒருத்தர் சொன்னாருன்னு டவுன்லோட் பண்ணி வச்சாச்சி … இருந்தாலும் கூட ஒரு ரெண்டு நாளா பார்க்கல …

அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு சும்மா கம்ப்யூட்டர் ல இருக்குற குப்பையை எல்லாம் பெருக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி கிட்டு இருக்கும் போது இந்த படம் எத்தேட்சயா கண்ணுல பட்டது.. ரைட்டு இன்னிக்கு பாத்துடலாம்ன்னு முடிவு பண்ணி … நாம தான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாமலே கேக்க மாட்டோமே …. பார்க்க ஆரம்பிச்சாச்சி…

படம் பாக்குறதுக்கு முன்னாடி மேட்ரிக்ஸ் .. இன்செப்சன் இது போன்ற குழப்ப காவியங்கள எல்லாம் பாத்திருந்திங்கன்னா இது அதோட ரொம்ப எளிமையான வடிவம் …

சம்பவம் நடக்குறதுக்கு எட்டு நிமிஷம் முன்னாடி இப்போ இந்த ரயில் பயணத்துல ஹீரோ தூங்கி கிட்டு இருக்காரு … முழிச்சு பார்த்தா முன்னாடி ஒரு பொண்ணு இருக்கு … ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. கண்ப்யுஸ் ஆகி அங்கயும் இங்கயும் உலாத்துராறு .. தீடீர்ன்னு இன்னொரு ட்ரைன் கிராஸ் ஆகுது .. ரெண்டுமே வெடிச்சி செதருது … என்னடா ஒபெநிங்லையே எண்டு கார்ட் போட்டங்களா அப்படின்னு பார்த்தா … இங்க தான் திரை கதையில ஒரு ட்விஸ்ட்…

இப்போ … ஊருக்குள்ள ஒரு ரயில்ல குண்டு வெடிச்சி நெறைய பேர் செத்து போயிடறாங்க.. அந்த ரயில்ல போன எவனுமே பொழைக்கல…

ஹீரோ திரும்பவும் அதே ட்ரைன்ல அதே மாதிரி கண்ணு முழிக்கிறாரு.. திரும்பவும் அதே பொண்ணு … காப்பி கொட்டுது … அதே ஆளுங்க .. கொஞ்சம் நேரத்துல மறுபடியும் டமால் …

இப்போ பாருங்க மறுபடியும் முழிக்கிறாரு .. மறுபடியும் பொண்ணு … மறுபடியும் ஆளுங்க … மறுபடியும் டமால் … மறுபடியும் பார்ரா ….

இப்போ நடுவுல கொஞ்சம் சீரியசான விஷயம் எல்லாம் நடக்குது … ஹீரோ உண்மையிலேயே ஒரு கமாண்டோ … ஸோர்ஸ் கோட் அப்படின்னு ஒரு ப்ரோக்ராம் செஞ்சி ஹீரோவ அந்த ரயில்ல ஏற்கனவே பயணம் செஞ்ச அவரோட பாடிக்கு பிட் ஆகுற மாதிரி ஒரு ஆள் கண்டு பிடிச்சி ரயில் வெடிக்கிறதுக்கு ஒரு எட்டு நிமிஷம் முன்னாடி ஏத்தி விட்டுடறாங்க (அட கூடு விட்டு கூடு பாயிறது 😉 ) அவரு கரக்கீட்டா அந்த பாம கண்டு பிடிக்கிற வரைக்கும் திரும்ப திரும்ப ரயில்ல ஏத்தி வச்சி செத்து செத்து வெளையாட வைக்கிறாங்க … பாவம் அந்த பய.. கேட்டா ஏதோ மில்லிட்டரி ஆபரேசன்னு சொல்லுறாங்க .. கடைசி வரிக்கும் ஒரு டாக்டர், நர்சு கூட வரலையின்னா பார்த்துகோங்க .. 😉

ஆனா என்ன நம்ப கேப்டன் இந்த கேரக்டர்ல நடிச்சிருந்தா பல்லால கடிச்சி ரயில நிறுத்தி எல்லாரையும் காப்பதிருக்க மாட்டாரு ??? #டவுட்டு

ஆனா படம் உண்மையிலேயே கலக்கல் … என்னதான் திரும்ப திரும்ப ரயில் வெடிக்கிறத காட்டினாலும் பரபரப்புக்கு மட்டும் பஞ்சம் இல்ல … படத்தோட ட்ரைலர் கீழ இருக்கு பார்த்துகோங்க

நெஞ்சத்த நெகிழ வைக்கிற அளவுக்கு ஒரு கிளைமாக்ஸ் இருக்கு … அத என்னன்னு நீங்க படத்த பார்த்து தெரிஞ்சிகோங்க .. அப்புறம் நம்ம ஊரு ரயில் படம் .. இந்த கொடுமையையும் பார்த்து தொலைசிருங்களேன்… வர்ட்டா … 🙂

Advertisements

Comments»

1. Mohamed faizal - June 9, 2011

சூப்பர் காமெடி …………….

anubaviraja - June 13, 2011

🙂 🙂

2. Mathes Waran - July 3, 2011

இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இந்த படம் பார்த்தேன்..

செம்ம அருமை…

ஆனா, உங்க பதிவுக்கு முடிவுல போட்டுருக்கீங்களே ஒரு ஆஸ்கார் படம்.. யப்பா…. தாங்கலப்பா…

anubaviraja - July 3, 2011

அந்த புல் படத்துல சொன்ன விசயத்த நம்ம பாலையா ஒரு ரெண்டு நிமிசத்துல முடிசிட்டாருல்ல 😉

Matheswaran Shanthi Kanagarajan - July 4, 2011

ஹா.. ஹா.. அது சரி தான் னா..

நம்ம ஊரு ஹீரோஸ்ச பத்தி ஆலிவுட் மனுசங்களுக்கு தெரியல… அதான்.. இல்லன்ன, அந்த படத்த “குறும் படமா” எடுத்துருப்பங்க


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: