jump to navigation

சென்னை நகரம்.. அதிவேக சாலை.. திடுமென தோன்றும் தேவதைகள் .. June 28, 2011

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
trackback

செப்டம்பர், 2007 –  சென்னை மண்ணில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்… ஸ்டெல்லா மேரிஸ்  கல்லூரிக்கு எதிர்த்த  நிறுத்த பேருந்தில் நின்று இன்னிக்கு இண்டர்வ்யுல என்ன சொதப்புனேன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். ரெண்டு பொண்ணுங்க ரொம்ப தீவிரமா எத பத்தியோ பேசிகிட்டு இருந்தாங்க… நாம சென்னைக்கு போன புதுசு வேற .. ஏற்கனவே  ஒரு இண்டர்வ்யுல பிரஸ்ட் ரவுண்டுல கேள்வி கேட்டுகிட்டு இருந்த HR பொண்ணு பிரேக்ல கான்டீன்ல எல்லார் முன்னாடியும் தம் அடிச்சி கிட்டு இருந்தத பார்த்து பயந்து போய் ரெண்டாவது ரவுண்டு இண்டர்வ்யு சொதப்பின காலம் ..   அதுனால  முடிஞ்ச வரைக்கும் வேற பக்கம் திரும்பி நம்பள நம்பி எவன் வேலை குடுக்க போறான்னு விதி மேல பாரத்த போட்டு யோசிச்சிகிட்டு நின்னு கிட்டு இருந்தேன் …

திடீரென்று ஒரு வயசான அம்மா அந்த பொண்ணுங்க கிட்ட போய் நின்னாங்க ..  ஒரு பொண்ணு என்ன ன்னு கேட்டது … ஆனா அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியாது போல … அந்தம்மா என்ன சொல்றாங்க ன்னு புரிஞ்சிக்க முடியல. என்னோட காதுல விழுந்த வரைக்கும் அந்தம்மா DMS எப்படி போகணும்ன்னு கேட்டு கிட்டு இருந்தாங்க .. அப்போ அந்த இன்னொரு பொண்ணு (அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியும் போல இருக்கு … ) அது அடுத்த ஸ்டாப் தான் பாட்டிமா .. அப்படின்னு சொன்னங்க..  திடிர்ன்னு அந்தம்மா , அந்த பொண்ணோட கைய்ய பிடிசிகிச்சி.. கொஞ்சம் ஆர்வம் தலை தூக்க … என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன் ..

அப்போ தான் அந்த அம்மா கண் பார்வை இல்லாதவங்க அப்படின்னு தெரிஞ்சுது ! DMS க்கு பஸ் ஏற எதிர் பக்கம்  போய் நிக்கணும்ன்னு இந்த பொண்ணு யோசிக்க … அந்த தமிழ் தெரியாத பொண்ணு டக்குன்னு அந்த பாட்டிம்மாவோட கைய பிடிச்சி ரோடு கிராஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க … இன்னொரு பொண்ணு கொஞ்சம் நேரம் யோசனை பண்ண மாதிரி தெரிஞ்சது .. அப்புறம் அந்த பாட்டியோட இன்னொரு கைய பிடிச்சி நடக்க ஆரம்பிச்சிட்டாங்க …

 

நுங்கம்பாக்கம் ஹை ரோடு ரொம்ப  கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட ஒரு கொடூரமான ஏரியா. . கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும்  நெரிசலில் சிக்கி தவிக்கிற ஆம்புலன்ஸ்கள் எல்லாம்  பார்த்திருக்கிறேன்.

அந்த பெண்கள் ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் நின்னு நின்னு பார்த்தாங்க … ட்ராபிக் குறையுற மாதிரி இல்ல … யாரும் அவங்களுக்கு உதவி பண்ற மாதிரியும் தெரியல …. அப்புறம் தைரியமா கை காட்டி ட்ராபிக்க நிப்பாட்டிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க … எல்லாரும் அவங்களையே வேடிக்கை பாக்குறாங்களே தவிர … யாரும் உதவி செய்ய முன்வரல… அந்த ரோடு கிராஸ் பண்ண அவங்களுக்கு கிட்ட தட்ட பத்து நிமிஷம் ஆனது …

நான் பார்த்து கிட்டே இருந்தேன்.. எனக்கு அப்படி ஒன்னும் தலை போகுற வேலை இல்ல … (மொத்ததுல வேலையே இல்ல அப்படிங்கறது வேற விஷயம் … ) சரி என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே அப்படின்னு …நானும் ரோட கிராஸ் பண்ணி அந்த பக்கம் போய் நின்னேன் …

ரெண்டு பஸ் ஸ்டாப்ல  நின்னு போச்சி .. எல்லாமே புல் … படிக்கட்டுல கால் வைக்கிறதுக்கு கூட இடம் இல்ல … அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் யோசிச்சி கிட்டே நின்னு கிட்டு இருந்தாங்க …

அப்போ கொஞ்சம் ப்ரீயா ஒரு ஷேர் ஆட்டோ வந்தது .. இந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பாட்டிமாவ ஆட்டோ ல ஏறி உடக்கற வச்சிட்டாங்க … உள்ள இருக்குற பயணிகளும் அந்த பாட்டிக்கு உதவி பண்ணாங்க .. அப்போ தான் பாருங்க .. அந்த ஆட்டோ டிரைவர்க்கு எங்க இருந்து தான் அவ்ளவு கோபம் வந்ததோ … அந்த பொண்ண பிடிச்சி  திட்ட ஆரம்பிசிட்டரு .. என்ன வழக்கம் போல சென்னை செந்தமிழ்ல தான்.. ஏதோ அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும் இந்த பாட்டிய அவரோட தலையில கட்டிட்டு போக பாக்குற மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டார் … அந்த தமிழ் தெரிஞ்ச பொண்ணு … ரொம்ப நேரம் கெஞ்சி பார்த்துச்சி .. அந்த ஆட்டோ டிரைவர் சவுண்ட் கம்மி பண்ற மாதிரி தெரியல … யாரும் அந்த பாட்டிமாக்கு சப்போர்ட் பண்ற மாதிரியும் தெரியல ..

அப்போ அந்த தமிழ் தெரிஞ்ச பொண்ணு அந்த பாட்டிய பார்த்து … “பாட்டி DMS அடுத்த ஸ்டாப் தான் இறங்கிக்கோங்க ” அப்படின்னு ஒரு அழுத்தமான குரல்ல சொல்லிட்டு ..” நீங்க யாரும் அவங்கள் பார்த்துக்க வேண்டியதில்ல .. அவங்க போகவேண்டிய எடத்துக்கு அவங்களே போய்க்குவாங்க  ..”  அப்படின்னு டிரைவர பார்த்து சொல்லிட்டு அவர் மேல ஒரு கோப பார்வைய விசினாங்க … அந்த டிரைவர்க்கு அந்த பார்வையோட அழுத்தத்த கொஞ்ச நேரத்துக்கு மேல சந்திக்க முடியாம கிளம்பிட்டார்..

அன்னிக்கு நைட் புல்லா எனக்குள்ள பல கேள்விகள் …

 • யார் அந்த பாட்டி ?
 • அவங்க ஏன் DMS போறாங்க ?
 • அங்க யார போய் பார்க்க போறாங்க ??
 • யார் அந்த ரெண்டு பொண்ணுங்க ?
 • அங்க இருந்த யாருக்குமே இல்லாத துணிச்சல் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் எப்படி வந்தது ?
 • அந்த ஒட்டு மொத கூட்டத்துல ஏன் யாருக்குமே அந்த பாதிக்கு உதவி பண்ணனும்ன்னு தோணல?
 • அந்த ஆட்டோ டிரைவர்க்கு ஏன் அவ்ளவு கோபம் ?
 • ஏன் அந்த பொண்ணுங்க கிட்ட அவ்ளவு முரட்டு தனமா பேசணும் ?
 • அந்த பாட்டி போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் , பார்க்க வேண்டியவங்கள பார்த்தாங்களா ?
 • மாநகரங்கள் ஏன் மாநரகம்களா மாறிகிட்டு இருக்கு ??
 • நான் ஏன் அந்த எடத்துல ஒண்ணுமே செய்யாம வெறுமனே நின்னு கிட்டு இருந்தேன் ??

இன்னிக்கு வரைக்கும் எனக்கு இந்த கேள்விகளுக்கு விடை கெடைக்கல …

Advertisements

Comments»

1. Mathes Waran - June 28, 2011

யார் அந்த பாட்டி ?
–ஒரு பாட்டி… அவ்வுளவு தான்.

அவங்க ஏன் DMS போறாங்க ?
–யாரையாவது பார்க்கவா இருக்கும்.

அங்க யார போய் பார்க்க போறாங்க ??
–தெரியலயே பாஸ்..

யார் அந்த ரெண்டு பொண்ணுங்க ?
–காலேஜ் பிகரா?

அங்க இருந்த யாருக்குமே இல்லாத துணிச்சல் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் எப்படி வந்தது ?
–துணிச்சல்ன்னு கிடையாது… ஒரு விசயத்துல இறந்குற வரைக்கும்தான் நாம ரொம்ப யோசிப்போம்… பட், எறங்குனதுக்கப்புறம் புல் ஸ்பீட் இருக்கும். அந்த மாதிரி தான்.

அந்த ஒட்டு மொத கூட்டத்துல ஏன் யாருக்குமே அந்த பாதிக்கு உதவி பண்ணனும்ன்னு தோணல?
–அதான் மனுஷன் ஜென்மம்.

அந்த ஆட்டோ டிரைவர்க்கு ஏன் அவ்ளவு கோபம் ?
–பொண்டாட்டி கூட சண்டை?? இல்ல, பீக் hoursல இப்படி லொள்ளு பண்ணுராங்களேன்னு டென்ஷன்.

ஏன் அந்த பொண்ணுங்க கிட்ட அவ்ளவு முரட்டு தனமா பேசணும் ?
–மொக்க பிகரா இருந்துருக்கும்.

அந்த பாட்டி போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் , பார்க்க வேண்டியவங்கள பார்த்தாங்களா ?
–பாத்தாச்சு பாத்தாச்சு…

மாநகரங்கள் ஏன் மாநரகம்களா மாறிகிட்டு இருக்கு ??
–மாறுன்ன ஏன் மாறுதுன்னு கேக்குறீங்க… இல்லன்ன, ஏன் நம்ம நாடு இன்னும் அப்படியே இருக்குன்னு கேக்குறீங்க… உங்களலாம் என்ன சொல்ல.???

நான் ஏன் அந்த எடத்துல ஒண்ணுமே செய்யாம வெறுமனே நின்னு கிட்டு இருந்தேன் ??
–Low Reflex Reaction. எல்லாருக்கும் உண்டு…

லூஸ்ல விடுங்க பாஸ்…

anubaviraja - June 29, 2011

மாதேஷ்… சில கேள்விகளுக்கு நான் யோசிச்ச மாதிரியே பதில் வந்திருக்கு .. ஆனா பல கேள்விகளுக்கு “இதற்க்கு அது விடை அல்லவே ” 😉

2. angelin - June 29, 2011

நீங்க ஏன் அந்த எடத்துல ஒண்ணுமே செய்யாம வெறுமனே நின்னு கிட்டு இருந்தீங்க????????????
அந்த ரெண்டு பொண்ணுங்க !!!!!!!!தேவதைகள் !!!!!!!!

anubaviraja - June 29, 2011

ஹா ஹா .. இருக்காலாம் பாஸ் 🙂

3. tamilselvan - June 29, 2011

// அந்த பாட்டி போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் , பார்க்க வேண்டியவங்கள பார்த்தாங்களா ? //

பாட்டிய விடு தலைவா அதுக்கு அப்புறம் அந்த ரெண்டு பார்டிகள எங்கே பார்த்தீங்க?

anubaviraja - June 29, 2011

அவங்க ரெண்டுபேர் Face கூட சரியா பாக்கல பாஸ் … அப்புறம் எங்க மறுபடியும் பாக்குறது 🙂 .. ஆனா அவங்களுக்கு இருந்த மன தைரியம் எனக்கு இல்ல அப்படிங்கற என்னோட மன குமுறல் தான் இந்த பதிவு !!

4. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: