jump to navigation

தெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SAM டைரக்டர்க்கு கூட… July 21, 2011

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
trackback

முதல் நாள் – முதல் ஷோ பார்த்துட்டு வந்து பசங்க படம் ரொம்ப சூப்பர் அப்படின்னு பீலிங்கொட சொன்னாங்க .. என்னடா இது இவங்க இப்படி பீல் பண்ற ஆளுங்க இல்லையே , இதுல எதாவது உள்குத்து இருக்குமோன்னு மைல்டா டவுட் ஆனேன்… ஏன்னா கந்தசாமி , ராவணன் எப்பெக்ட் 😉

சரி சக பதிவர்கள் முக்காவாசி பேர் நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டாங்க … சரி ரைட் ஆனது ஆகி போச்சி , படத்த பாத்துரலாம்ன்னு முடிவு பண்ணி போயாச்சி …

 


ரொம்ப நாளைக்கு அப்புறம், ரங் தே பசந்தி படத்துக்கு அப்புறமா என்னோட மனச கனக்க வச்ச கிளைமாக்ஸ் தெய்வ திருமகள் படத்தொடது… இந்த வாரணம் ஆயிரம் … மதராச பட்டினம் , விண்ணை தாண்டி வருவாயா … இப்படி பட்ட படத்தயேல்லாம் பார்த்துட்டு நெறைய பேர் பீலிங்க்ஸ்சொட சுத்திகிட்டு இருந்தங்கள்ள ?? அந்த மாதிரி இந்த படத்த பார்த்ததும் எனக்கு ஒரு பீலிங்க்ஸ் … படம் நம்முடைய, குடும்ப உறவு , பாசம் , இது மாதிரியான செண்டிமெண்ட் விசயங்களுக்குள்ள புகுந்து விளையாடுரதுனால நம்ப கலைஞர் பாணியில “கண்கள் பணித்தது .. இதயம் இனித்தது ” அப்படின்னும் சொல்லலாம் ..

 


படத்தோட கதையா பத்தி பலர் ஏற்கனவே சர்ப் போட்டு அலசி ஆராய்ச்சி பண்ணிடதுனால, அத பத்தி நான் தனியா சொல்ல போறதில்ல .. மனதளவுல அஞ்சு வயசு ஆகுற கிருஷ்ணா , அவரோட அஞ்சு வயசு பொண்ணு நிலா .. இவங்களோட உலகம், வாழ்க்கை – இது தான் இந்த படத்தோட கதை .. அவங்க ரெண்டு பேர்க்கும் இடையில உண்டான பாச பிணைப்ப சொல்றதுக்கு வர்ற ஆரிரோ ஆராரிரோ பாட்டு வந்த பொழுதே .. எனக்கு மனசு நெகிழ்ந்துரிச்சி..

விக்ரம் இந்த படத்துல நடிக்கல … கிருஷ்ணா மட்டும் தான் படத்துல தெரியுறார் … சாருக்கு ஒரு தேசிய விருது பார்சல் …. விஷால் தம்பி தான் பாவம் … 😉

சாரா , என்ன ஒரு நடிப்பு … பிறவி கலைஞர் அப்படின்னு சொல்லுவாங்க இல்ல ? இந்த குழந்தை அது மாதிரி ஒரு பிறவி …

அனுஷ்கா – ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு படத்துல நடிச்சிருக்காங்க …

அப்புறம் முக்கியமா நம்ம சந்தானம் … படத்துக்கு படம் பாஸ் ரொம்ப ஓவரா சையின் ஆகிகிட்டு இருக்குறார் .. இந்த படத்துல அடக்கி வாசிக்க வேண்டிய இடத்துல அத செஞ்சும் .. ஸ்கோர் பண்ண வேண்டிய எடத்துல சிக்ஸர் அடிச்சும் கலக்குறார் …

எனக்கு ரொம்ப பிடிச்ச , மனச நெகிழ வச்ச காட்சிகள் ..

  • யாருமே கண்டுக்காம போற தண்ணீர் வேஸ்ட்  ஆகிக்கிட்டுருகுற பைப்ப விக்ரம் மூடுறது
  • டிராபிக் சிக்னல மதிச்சு விக்ரம் நடக்கிறது … முக்கியமான இறுதி கட்டத்துல கூட
  • கிருஷ்ணாவும் நிலாவும் ஆடுற அந்த தீம் டான்ஸ் / ஆக்சன்
  • குழந்தை அழுகுதே ஏன் சும்மா உட்காந்திருக்க ?? “என்ன பண்ணனும்”?
  • நிலா கூட படிக்கிற டெரர் பையன் கிருஷ்ணாக்கு முத்தம் குடுக்கும் போது
  • ஆரிரோ பாட்டு புல்லா…
  • நிலாவ தேடி நிலா கிட்ட கிருஷ்ணா பேசுறது …
  • நாசரோட கொழந்தைக்கு கிருஷ்ணா மருந்து வாங்கிட்டு வரது
  • முக்கியமா அந்த கோர்ட் சீன் 😥

இப்படி நெறையா சொல்லிகிட்டே போகலாம் …

இப்படி ஒரு பக்கா செண்டிமெண்ட் படத்துல அப்பப்போ சரியான விகிதத்துல காமெடி இழையோடி இருக்கிது நம்ம ஆசுவாச படுதிக்க உதவுது ..

 


அப்புறமா டைரக்டர் விஜய் … நீங்க இந்த படத்த நல்ல பாக் பண்ணி தமிழ் ரசிக பேரு மக்களுக்கு குடுதுருக்கிங்க … என்ன ஒரு வருத்தம்  I AM SAM படத்தோட கதை அப்படின்னு பச்ச கொழந்தைக்கு கூட தெரிஞ்ச பிறகும் அத ஒத்துக்க மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறிங்களே ?? கொஞ்சம் நேர்மையா இருங்க பாஸ். டைட்டானிக் பிளஸ் லகான் சேர்ந்த மிக்ஸ் தான் மதராச பட்டினம் அப்படின்னு எங்க எல்லாருக்கும் தெரியும் … உணர்ச்சிமயமா படம் எடுத்து அதுல வெற்றி பெரும் வித்தை உங்க கிட்ட இருக்குது …

 

“கதையா ? அதெல்லாம் எதுக்கு ? யாரவது திருடி சினிமா எடுத்துர போறாங்க” – இது தான் டைரக்டர் படத்துல வச்ச ஒரே நேர்மையான வசனம் 🙂

சரி டைரக்டர் தான் காப்பி அடிச்சாருன்னு பார்த்தா நம்ப ஜி. வி. பிரகாஷ் … தம்பி அருமையா ஆங்கில பாடல் ஒன்றையும் , ஒரு ஹிந்தி பாட்டையும் சுட்டு போட்டுட்டார் …  விக்கிபீடியா லையே காரி துப்பிடாங்க

“Prakash Kumar has lifted two songs. The song “Pa Pa Pappa” is taken from Walt Disney’s Robin Hood song “Whistle-Stop”. The song “Jagada Thom” has been taken from Amaan Ali Khan and Ayaan Ali Khan‘s 2007 song “Truth” from the album of the same name”

மத்தபடி படத்துல பின்னணி இசை இருந்ததா அப்படின்னு எனக்கு ஒரு சந்தேகம் …. அந்த அளவுக்கு கதையோட ஒட்டி இசை அமைஞ்சிருந்தது …

 

 

படம் பார்த்துட்டு அன்னிக்கு  புல்லா மனசு என்னவோ பண்ணிச்சி … கிருஷ்ணா & நிலாவோட உலகத்துல முழுசா வெளிய வர எனக்கு இன்னும் பல காலம் ஆகும்ன்னு தோணுது…

இதே படத்த ஒரு இருவது வருசத்துக்கு முன்னாடி எடுத்திருந்தா கமல் பிளஸ் பேபி சுஜிதா … நாற்பது வருசத்துக்கு முன்னாடி எடுத்திருந்தா சிவாஜி பிளஸ் குட்டி பத்மினி … பிச்சு உதறிருக்க மாட்டாங்க ??

தெய்வ திருமகள் … கண்டிப்ப்பா ………. போய் குடும்பத்தோட பாருங்க … காப்பி அடிச்ச படம்னு பீல் பண்ணிங்க அப்படின்னா நல்ல பிரிண்ட் DVD வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி பாருங்க 😉

 

அப்புறம் கொஞ்ச நாள்  முன்னாடியே வந்த இதே மாதிரி ஒரு உணர்ச்சி குவியலான கிளைமாக்ஸ்.. பார்த்துட்டு நல்ல  அழனும் ஓகே ??

 

Comments»

1. Vinoth - July 21, 2011

U r right raja….Romba nal kalichi patha oru arumaiyana padam…Inga hyderabad la ella audience yum elundhu ninu climax la kai thatinanga
endha padathukum indha madhiri oru appreciation na pathathila inga…ennaye ariyama naraya vati aludhutan veetuku vandha peru kooda..

anubaviraja - July 21, 2011

A Fabulous Movie in the Making! that’s where the director succeeded!

2. RAJA M - July 21, 2011

An wonderful experience

anubaviraja - July 21, 2011

Yes! for sure! ராஜா எழுதுனதுக்கு … ராஜா கிட்ட இருந்து ஒரு கமெண்ட் .. அடடே .. ஆச்சிரிய குறி !! 😉

3. Manohar Veera - July 21, 2011

காப்பி அடித்தாலும் நல்லாவே வந்திருக்கு…
விமர்சனம் படம் மாதிரியே சூப்பர்…

என் விமர்சனம்

http://www.tamiltel.in/2011/07/blog-post_3769.html

anubaviraja - July 21, 2011

பாஸ் உங்க விமர்சமனம் படிச்சேன் .. ரொம்ப ப்ரோபெசனலா இருந்தது … கலக்கிடிங்க பாஸ் 🙂

4. முத்து - July 21, 2011

“இதே படத்த ஒரு இருவது வருசத்துக்கு முன்னாடி எடுத்திருந்தா கமல் பிளஸ் பேபி சுஜிதா … நாற்பது வருசத்துக்கு முன்னாடி எடுத்திருந்தா சிவாஜி பிளஸ் குட்டி பத்மினி … பிச்சு உதறிருக்க மாட்டாங்க ??”

ஏன் இந்த கொலை வெறி?

anubaviraja - July 21, 2011

எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா ? 😉 😀

5. Samudra - July 21, 2011

அருமை

anubaviraja - July 21, 2011

நன்றி பாஸ் 🙂

6. Jayadev Das - July 21, 2011

நாயகன் படம் வந்த போது ஆஹா, என்ன அருமையான படைப்பு என்று வியந்து பாராட்டிய கேணைகளாக இருந்தோம். ஆனால், இன்று படம் மட்டுமல்ல, பாடல்களையும் எங்கேயிருந்து சுட்டார்கள் என்பதை உடனடியாக கண்டு பிடித்துச் சொல்லும் கில்லாடிகள் உள்ளார்கள், உங்களுக்கு எனது சல்யூட்!! நன்றி.

anubaviraja - July 21, 2011

இதெல்லாம் இந்த சமுதாயத்துக்கு நாம ஆத்த வேண்டிய கடமை இல்லையா பாஸ் ? 😉

7. Real Santhanam Fanz - July 23, 2011

நீவீர் சந்தனாம் ரசிகன் என்பதை உம் பதிவுகளின் மூலம் அறிந்து கொண்டோம்… நீர் இவற்றை பார்வையிட அழைக்கபடுகிறீர்கள்.
http://realsanthanamfanz.blogspot.com/
http://twitter.com/#!/Santhanam_Fanz
http://www.facebook.com/groups/santhanamfanz?id=232760440089994

anubaviraja - July 25, 2011

கண்டிப்பா .. சங்கத்துல சேந்துட்டா போச்சி 😉

8. Syed - July 23, 2011

ஆங்கில படத்தை பார்க்காத பல தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை காப்பி அடித்து நல்ல விதமாக கொடுத்திருக்கும் டைரக்டருக்கு வாழ்த்துக்கள்.

anubaviraja - July 25, 2011

கடைசில படம் நல்லா தான் இருந்தது .. அது தான நமக்கு முக்கியம் 🙂

9. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] தெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SA…- என்ன ரொம்ப பாதிச்ச ஒரு படம் தெய்வத் திருமகள்… இருந்தாலும் நியாயமான விமர்சனம் தான் .. […]


Leave a comment