jump to navigation

செவ்வாய் தோறும்.. மோரியுடன் – ஒரு வாழ்க்கை பாடம்… October 2, 2011

Posted by anubaviraja in பிடித்தவை, புத்தகம், ரசித்தவை.
Tags: , , , , ,
trackback

நான் அதிகமா படிப்பேன் அப்படின்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. ஆனா ஆங்கில நாவல்களை பொறுத்த வரைக்கும் நான் எந்த ஒரு புத்தகத்தையும் தொட்டு கூட பார்த்தது கெடயாது.. திடீர்ன்னு ஒருநாள் ஒரு நண்பர்  … ஒரு புத்தகத்த பத்தி உங்க ப்ளாக்ல  எழுத முடியுமா அப்படின்னு கேட்டார்.. என்னடா இது நாம என்ன அவ்ளோ பெரிய அப்படக்கர் பதிவரா ? அப்படின்னு சந்தேகம் வந்தது.. சரி இருந்தாலும் நம்மளையும் மதிச்சி  கேட்டாங்களே… அப்படின்னு சரி குடுங்க கண்டிப்பா எழுதுறேன் அப்படின்னு சொல்லி வாங்கி பார்த்தேன்…

தலைப்பே ரொம்ப வித்யாசமா இருந்தது .. “Tuesdays with Morrie – an old man, a young man, and life’s greatest lesson”

மனசுக்குள்ள டக்குன்னு வந்து அந்த எழுத்தாளர் இடம் பிடிசிகிட்ட்டார் .. சரி எப்டியாவது இந்த புத்தகத்த படிச்சே ஆகணும் அப்படின்னு முடிவு பண்ணி.. கொஞ்சம் கொஞ்சமா .. மோரியோட உலகத்துக்குள்ள பயணம் செய்ய ஆரம்பிச்சேன் .. ஒவ்வொரு அத்யாயத்த முடிக்கும் போதும் அந்த கதையின் கதாபாத்திரங்கள் எனக்குள் ஒரு விதமான பாதிப்ப எற்படுதினாங்க… கதையின் போக்கு ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் மாதிரி அருமையா இருந்தது… கதை பெரும்பாலும் ரெண்டு கதாபாத்திரங்களையே   சுத்தி வந்தாலும் ஒரு முறை கூட சலிப்பு தட்டவே இல்ல.. அவ்வளோ சுவாரசியமான விஷயங்களை ஆங்காங்கே சொல்லிருக்காங்க.. சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாமே வாழ்கை பாடங்கள்..

எப்பவுமே நான் ஒரு புத்தகத படிச்சி முடிக்க 2-3 நாளைக்கு மேல எடுத்தது இல்ல .. ஆனா இந்த புத்தகத படிக்க எனக்கு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சி.. எனக்கு இந்த புத்தகத படிச்சி முடிக்க பிடிக்கல .. அதனால தள்ளி போட்டுகிட்டே போனேன்.. எப்படியும் கிளைமாக்ஸ்ல மோரியோட மரணம் இருக்கு, அப்படிங்கறது தெரிஞ்சுது கூட ஒரு காரணமா இருக்கலாம் .. ஆனா இந்த புத்தகம் என்னோட வாழ்கையில நெறைய மாற்றங்களை கொண்டு வந்துச்சி அப்படிங்கறது உண்மை..பல விஷயங்கள்ல இதுவரைக்கும் எனக்கு இருந்த பார்வைய அப்படியே திருப்பி போட்டார் மோரி …

இந்த புத்தகத்தோட கதை என்னவோ ரெம்ப சின்ன .. நமக்கு பழக்கமான கதை தான் … தன்னோட கல்லுரி பேராசிரியரின் கடைசி காலத்துல, அவர வாரம்தோறும சந்திச்சி, வாழ்க்கை பாடங்கள மீண்டும் ஒரு முறை தெளிவா கத்துகுற மாணவன் ஒருத்தரோட கதை தான் … ஆனா அது சொல்ல பட்ட விதமும்.. சொல்ல பட்டிருகுற பல விசயங்களும் … கண்டிப்பா உங்க மனசுக்குள்ள பெரிய அளவுல அதிர்வலைகளை ஏற்படுத்தும் அப்டிங்க்றதுல எந்த ஒரு சந்தேகமும் இல்ல

நம்ம ஊருல பன்ச் டயலாக் அப்படிங்கற பேர்ல நம்ம ஹீரோக்கள் எல்லாம் கொடூரமான வேலை எல்லாம் பார்த்துகிட்டு இருக்காங்க இல்ல? அதுக்கு பேர் எல்லாம் பன்ச் டயலாக் கெடயாது.. மோரி சொல்ற ஒவ்வொரு விசயமும் உங்களோட இதயத்த சிந்திக்க வைக்கிற பன்ச்..

என்னை ரொம்ப கவர்ந்த சில வரிகள்..

Love wins. Love always wins

அன்பே சிவம் அப்படின்னு கமல் சொன்ன மாதிரி .. அன்பே எப்பவும் வெல்லும் அப்படின்னு மோரி சொல்லுறார் ..

Love each other or perish

காதல் காதல் காதல்.. காதல் போயின் சாதல்.. அப்டின்னு பாவலர் சொன்னார் இல்லையா? அதே விஷயம் இங்க அன்புக்கு உதரணமா சொல்ல பயன் பட்டிருக்கு .. (அன்புக்கும் காதலுக்கும் என்ன வித்யாசம்னு உங்களுக்கு தெரியும்ன்னு நெனைக்கிறேன் 😉 )>

Don’t cling to things, because everything is impermanent

பணம் மட்டுமே வாழ்கை இல்லை – பொருட்களின் மேல பற்று வைக்கிறது நல்லதில்ல .. இப்படி எல்லாருமே இருந்திட்டா உலகம் உருப்பட்டரும் இல்ல ? இதுல கூட புத்தரின் தத்துவத்தோட சாயல் கொஞ்சம் இருக்கு ..

“We…need to forgive ourselves…For all the things we didn’t do. All the things we should have done. You can’t get stuck on the regrets of what should have happened

முதல்ல நீ செஞ்ச தப்புகளுக்கு உன்ன உன்னால மன்னிக்க முடியிதா அப்படின்னு பாருன்னு சொல்றார் ..

The most important thing in life is to learn how to give out love, and to let it come in

கதவை திற காற்று வரட்டும்ன்னு நித்யா சாமி சொன்னார் 😉 அன்பாய் இருப்பது எப்படி… அன்பை பெறுவது எப்படின்னு மோரி சொல்றார் ..

if you are ever going to have other people trust you, you must feel that you can trust them, too–even when you’re in the dark

நம்பினார் கை விட படார் 🙂

When you learn how to die, you learn how to live

சாகுற நாள் தெரிஞ்சிடா வாழ்ற நாள் நரகமயிடும்னு தலைவர் சொன்னார் 🙂 முதல்ல சாகுறது எப்படின்னு கத்துக்கோ… அப்புறம் நீ அருமையா வாழலாம் அப்ப்டின்க்ரார்..

When you’re in bed, you’re dead

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – குறள்

Love is how you stay alive, even after you are gone

அன்பு ஒன்றே நிலையானது.. 🙂

என்ன கேட்டிங்கனா இது புத்தகம் இல்ல ஒரு பொக்கிஷம்…

வாங்கி படிச்சி பார்க்கணுமா ?? இங்க போலாம்..

மீண்டும் சந்திப்போமா ???

Advertisements

Comments»

1. Matheswaran Kanagarajan - November 6, 2011

nalla irukku..

anubaviraja - November 16, 2011

தம்பி – அந்த புக் வேணுமா ??

2. chitra.j - January 4, 2012

unmaiyana varthaigal… vazhkai yeangira vandiku atchani yeangira anbu migavum avasiyamana onu…righta friend…

anubaviraja - January 4, 2012

கண்டிப்பா!!! அன்பு என்னும் ஒன்று மட்டும் தான் இன்னும் இந்த உலகம் இன்னும் சுழன்று கொண்டிருப்பதற்கு காரணம் அப்படின்னு நான் நெனைக்கிறேன்.. “The most important thing in life is to learn how to give out love, and to let it come in.” – Morrie

3. chitra.j - January 5, 2012

Hai friend…nanum athaithan solla vanthan neeinga munthikiting, neeinga morrie in antha navali karaithu kudithuvitinganu theariyuthu…realy r u great… eannakum eappadi great agarathunu konjam sonna nalla irukum…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: