jump to navigation

பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை December 27, 2011

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , ,
trackback

நம்ம பவர் ஸ்டார் இருக்கார் இல்லையா?? .. என்னது ?? அவர உங்களுக்கு தெரியாதா?? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க??

நித்தியா மேனனுக்கே மிரட்டல் விட்டவரு அய்யா நம்ம பவர் ஸ்டாரு … (நல்லா படிக்கணும் பாஸ் !! நித்யா மேனன் .. நித்யானந்தா கெடயாது 😉 )

அவரை பத்தி ட்விட்டர்ல பேசுறாங்க.. Facebookல பேசுறாங்க.. ஒவ்வொரு நாளும் டிவில பெட்டி எடுக்குறாங்க .. ஆளே வராத லத்திகா படத்த 250 நாள் கடந்து வெற்றிகரமா ஓட வச்சிகிட்டு இருக்குறவர் தான்யா எங்க பவர் ஸ்டார் தேங்கா சீனிவாசன் … ச்சே ச்சே .. டங் ஸ்லிப் ஆயிருச்சி … டாக்டரு சீனிவாசன் ….

அந்த படத்துக்கு 150வது நாள் வெற்றி!?!? விழா எடுத்தது சங்கம் வச்சி தமிழ் வளர்த்த நம்ம மதுரை தான் 😉

 

அவர் பல திரை காவியங்கள்ல நடிச்சிகிட்டு இருக்கார் அப்படிங்கற விஷயம் எல்லாருக்கும் தெரியும் தெரியாதுன்னா கொஞ்சம் இந்த பக்கம் போய் பார்த்து தெரிஞ்சிக்கோங்க….

கீழே இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் பவர் ஸ்டார் ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யபடுகிறது.. இவற்றை ஐந்து நிமிடம் கூர்ந்து பார்ப்பதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல… 😉

அதுல பாருங்க அவர் குடுத்த இண்டர்வ்யு எல்லாம் உலக புகழ் பெற்றவை… இப்படி தான் விஜய் டிவி ல ஒரு இன்டர்வியு குடுத்தார் பாருங்க… ஆகா…

அதுல ஒரு பன்ச் டயலாக் பாருங்க !!!

கொலகொலயா முந்திரிக்கா .. இந்த பவர் ஸ்டார் அடிச்சா நீ … கத்தரிக்கா… கத்தரிக்கா…  கத்தரிக்கா…

தல.. நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!! 😉

அப்புறம் சன் டிவி ல கூட பின்னி பெடல் எடுதுட்டார் நம்ம பவர் ஸ்டாரு …

அவரு பின்னாடி அஞ்சு லட்சம் ரசிகர்கள் இருக்காங்களாம்… நான் சொல்லலை பாஸ் !! நம்ம பவர் ஸ்டார் அவரே சொன்ன விஷயம் இது ..

அப்புறம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை பண்ற ஐடியா வேற அவருக்கு இருக்காம் … (என்ன கொடுமை சார் இது 😦 )

இப்போ அவருக்கு என்ன வந்தது அப்படின்னு கேக்குறின்களா?? இதோ விசயத்துக்கு வரேன்.. அவரோட புது படத்துக்கு இப்போ தான் ட்ரைலர் ரிலீஸ் பண்ணங்க… என்னா டெர்ரா இருக்கு தெரியுமா 😉

படம் அப்படியே சந்திரமுகி வாடை அடிக்குது.. தலைவர் ராஜா வேஷத்துல வர்றாரு.. தலைய வேட்டுராறு..வேட்டையன் மாதிரின்னு வச்சிகொங்களேன்… அப்புறம் கரடிவேசம் போட்டுருக்கார்… வீல்ச்சர்ல உட்காந்து வர்றாரு பறந்து பறந்து அடிக்கிறாரு … சூப்பர் ஸ்டார் பதவிக்கு தான் ஒரு சிறந்த போட்டியாளர் அப்படின்னு பவர் ஸ்டாரு நிருபிச்சிகிட்டே இருக்கார் 😉

அப்புறம் ரசிகர் மன்றரதுல சேரனும் அப்படினா என்கிட்ட  ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க … உங்களுக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்க சொல்றேன் … ஸ்டார்ட் மியூசிக் … 🙂

Advertisements

Comments»

1. ROCKY BALA - December 28, 2011

நாங்க மொத்தம் 1000௦௦௦ பேர் இருப்போம், இது போல தலைவரோட ரசிகர் மன்றத்துல சேர தமிழ் நாட்டுல பல லச்சம் பேர் இருக்கோம்……………………

anubaviraja - December 28, 2011

பாஸ்.. வீட்ல சொல்லிட்டு வந்துட்டிங்க்ளா ?? 😉

2. dasa - December 29, 2011

power house stop ninathalaey power star avar. stamp ottatha cover

anubaviraja - January 5, 2012

கண்டிப்பா!! அவர் ஒரு நடமாடும் பல்கலை கலகம் 😛

3. சென்னை: IPL – நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா! « ஆண்டவன் படைச்சான் … என் கிட் - May 21, 2012

[…] புரியுதா – பவர் ஸ்டாரோட பவர் என்னன்னு […]

4. பவர் ஸ்டார் VS கோபிநாத் – நீயா நானா!!! « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - May 28, 2012

[…] மதியம் சுமார் ஒரு மூணேகாலுக்கு பவர் ஸ்டார் ட்விட்டர்ல இன்னிக்கு நீயா நானால […]

5. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: