சென்னை அனுபவங்கள் பார்ட்-2 April 30, 2012
Posted by anubaviraja in சென்னை, நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: சரவணா ஸ்டோர், சென்னை, பர்மா பஜார், பாரிஸ் கார்னர், பாலகிருஷ்ணா, பீச், மால், ஸ்கைவாக், ஸ்டார் பஸார், DVD கடை, Food Court, PVR
add a comment
ஒரு தொடர் பதிவு அப்படின்னு சொல்லிட்டு மூணு வருஷம் கழிச்சி ரெண்டாவது பாகம் போடுற மோத ஆள் நானா தான் இருக்கும்.. சென்ற பதிவுக்கு வாசக கண்மணிகள் மத்தியில் போதுமான வரவேற்ப்பு இல்லாத படியால் இந்த பதிவு இங்கு தாமதமாக பதிப்பிக்க படுகின்றது என்பதை மிக்க வருத்தத்தோடு தெரிவித்து கொள்ளுகிறோம்… (ஷப்பா… எவ்ளோ பெரிய வாக்கியம்!!! 😉 )
போன முறை , முறையே மெரினா பீச் , ஸ்பென்செர் பிளாசா, சிட்டி சென்டெர், பெசன்ட் நகர் பீச் , ஆகிய இடங்களுக்கு சென்ற அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் … இப்போ நான் சென்ற மற்றும் சில இடங்கள் உங்கள் பார்வைக்கு (இந்த வழக்குல பேசுறது எவ்ளோ கஷ்டமா இருக்கு 😉 )
பாரிஸ் கார்னர் DVD கடைகள்:
Little Rascals – குட்டி களவாணிகள் April 25, 2012
Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: காமெடி, சினிமா, விமர்சனம்
2 comments
எல்லாருக்கும் வணக்கம்.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ இந்த ப்ளாக் போஸ்ட் மூலமா உங்கள இம்சை பண்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ;).. ஏதோ அழகர் புண்ணியத்துல இன்னிக்கு மதுரைல கரண்ட் போகம இருக்குறதுனால இத எழுத முடிஞ்சது … தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் 😉
இந்த ராஸ்கோலு அப்படிங்கற வார்த்தை வேலைக்காரன் படத்துல VK ராமசாமி பிரபல படுதுனது 😉 இந்த Little Rascals படத்தோட DVD கெடைச்சதும் ஏதோ கொழந்த பசங்க படம் போல அப்படின்னு நெனைச்சி கிட்டு தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஆனா இது வேற வேற வேற மாதிரி படம் 😉 அப்படின்னு தெரிஞ்சிகிட்டேன்…
இந்த படம் ஒரு காதல் காவியம்… 😉 சின்ன குழந்தைகளோட உலகத்த அவங்க கூடவே இருந்து காட்சி படுத்தின மாதிரியான ஒரு கதை அமைப்பு … படத்துல வர்ற எல்லா கதாபாத்திரங்களும் (நியாயமா பார்த்தா கதா பசங்க அப்படின்னு தான் சொல்லணும் 🙂 ) கலக்கலா நடிச்சிருப்பாங்க…