jump to navigation

Little Rascals – குட்டி களவாணிகள் April 25, 2012

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
trackback

எல்லாருக்கும் வணக்கம்.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ இந்த ப்ளாக் போஸ்ட் மூலமா உங்கள இம்சை பண்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ;).. ஏதோ அழகர் புண்ணியத்துல இன்னிக்கு மதுரைல கரண்ட் போகம இருக்குறதுனால இத எழுத முடிஞ்சது … தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் 😉

இந்த ராஸ்கோலு  அப்படிங்கற வார்த்தை வேலைக்காரன் படத்துல VK ராமசாமி பிரபல படுதுனது 😉 இந்த Little Rascals படத்தோட DVD கெடைச்சதும் ஏதோ கொழந்த பசங்க படம் போல அப்படின்னு நெனைச்சி கிட்டு தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஆனா இது வேற வேற வேற மாதிரி படம் 😉 அப்படின்னு தெரிஞ்சிகிட்டேன்…

இந்த படம் ஒரு காதல் காவியம்… 😉 சின்ன குழந்தைகளோட உலகத்த அவங்க கூடவே இருந்து காட்சி படுத்தின மாதிரியான ஒரு கதை அமைப்பு … படத்துல வர்ற எல்லா கதாபாத்திரங்களும் (நியாயமா பார்த்தா கதா பசங்க அப்படின்னு தான் சொல்லணும் 🙂 ) கலக்கலா நடிச்சிருப்பாங்க…

கன்னியரை வெறுக்கும் காளையர்கள் சங்கம் அப்படின்னு ஒரு சங்கம் வச்சி நடக்கிட்டு இருக்கும் சின்ன சின்ன பசங்க… (“The He-Man ‘Womun’ Haters Club”) பேர் எல்லாம் நல்லா அட்டகாசமா தான் இருக்கும்… ஆனா சங்கத்து செயலாளர் அல்பாஆல்பா (Alfalfa) ஒரு பொண்ணு மேல ஆசை பட்டு ரொமான்ஸ் பண்ணி கிட்டு இருக்கிறது பொறுக்க முடியாம சங்கத்து தலைவரும் சங்கத்து உறுப்பினர்களும் இந்த கூட்டணிய உடைக்க திட்டம் போடுறாங்க..

ஹீரோ ஹீரோயின கூட்டிட்டு வந்து சங்கத்து கட்டடத்துக்குள்ள வச்சி பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கும் போது உறுப்பினர்கள் பண்ற சதியால ஹீரோயின் கோவிச்சிகிட்டு போயிடறாங்க… அப்படியே சங்கத்துக்கு சொந்தமான கட்டடமும் பத்திகிட்டு எரிஞ்சி போயிருது…

ஹீரோ எப்படி சங்கத்து தலைவர் ஸ்பான்கிய சமாதான படுத்தி தன்னோட லவ்வர் கிட்ட எல்லாத்தையும் விளக்கி சொல்லி திரும்ப ஒன்னு செருறார் அப்படிங்கறது தான் மீதி கதை.. இதுக்கு நடுவுல எரிஞ்சி போன சங்க கட்டடத்த வேற எப்படி புதுசா கட்டுறாங்க அப்படிங்கறது வேற ஒரு கிளை கதை 🙂

படத்துல பல வில்லன் கோஷ்டியும் உண்டு… சங்கத கலைக்க வர எதிர் கோஷ்டி, ஹீரோயின கரெக்ட் பண்ண வர்ற பணக்கார பையன்.. இப்படி நெறைய பேர் …

கிளைமாக்ஸ்ல குருவில வர மாதிரி ஒரு ரேஸ் வேற 🙂 படம் ஒட்டு மொத்த மாஸ்… கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டிய ரகம்.. படத்துல என்னை கவர்ந்த விஷயங்கள்…

  • கடைசி வரைக்கும் “Okay” அப்படிங்கற வார்த்தைய  “Otay” ன்னு  சொல்லற ஒரு பையன்
  • ஹீரோவோட கலக்கல் ஹேர் ஸ்டைல்
  • அந்த அழகு ஹீரோயின்
  • சங்கத்து ஆட்கள் பேங்க் லோன் கேட்டு போகுற அழகு
  • ஹீரோ குடுக்க சொன்ன லேட்டர தொலைச்சிட்டு அவரு சும்மாகாச்சிக்கு திட்டினத ஹீரோயின் கிட்ட உலறுற சங்கத்து உறுப்பினர்கள்
  • தீ அணைப்பு படைய கூப்ட்ரதுக்கு பசங்க கால் பண்ற அழகு
  • ஹீரோயனோட கர்சீப்ப கடைசி வரைக்கும் வச்சிக்கிட்டு சுத்துற ஹீரோ
  • பசங்கள பொண்ணுங்களும், பொண்ணுங்கள பசங்களும் மாத்தி மாத்தி கலய்கிறது

கண்டிப்பா டவுன்லோட் பண்ணியாவது பார்த்திருங்க மக்கா.. ட்ரைலர் இதோ இதோ …

Advertisements

Comments»

1. malini - April 26, 2012

this is one of ma favvv movie Raja…i watched this whn i ws in school…n u forgt froggy n his crokky voice girl friend huh…lol..n ur review s just awesme…:)

anubaviraja - April 26, 2012

ஹச்சோ.. நான் அந்த cute pairஅ மறந்துட்டேன் … எப்படியோ எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் தான் 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: