jump to navigation

சென்னை அனுபவங்கள் பார்ட்-2 April 30, 2012

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , ,
trackback

ஒரு தொடர் பதிவு அப்படின்னு சொல்லிட்டு மூணு வருஷம் கழிச்சி ரெண்டாவது பாகம் போடுற மோத ஆள் நானா தான் இருக்கும்.. சென்ற பதிவுக்கு வாசக கண்மணிகள் மத்தியில் போதுமான வரவேற்ப்பு இல்லாத படியால் இந்த பதிவு இங்கு தாமதமாக பதிப்பிக்க படுகின்றது என்பதை மிக்க வருத்தத்தோடு தெரிவித்து கொள்ளுகிறோம்… (ஷப்பா… எவ்ளோ பெரிய வாக்கியம்!!! 😉 )

போன முறை , முறையே மெரினா பீச் , ஸ்பென்செர் பிளாசா, சிட்டி சென்டெர், பெசன்ட் நகர் பீச் , ஆகிய இடங்களுக்கு சென்ற அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் … இப்போ நான் சென்ற மற்றும் சில இடங்கள் உங்கள் பார்வைக்கு (இந்த வழக்குல பேசுறது எவ்ளோ கஷ்டமா இருக்கு 😉 )

பாரிஸ் கார்னர் DVD கடைகள்:

இந்த எடத்துக்கு இன்னொரு பேரும் இருக்கு …. “பர்மா பஜார்” எதுக்கு அந்த பேர் வந்ததுன்னு சத்தியமா தெரியாது பாஸ் .. சும்மா சொல்ல கேள்வி தான் 🙂 சென்னைல இருந்த வரைக்கும் மாசாமாசம் அங்க போய் ஒரு பத்து பதினஞ்சு DVD வாங்கலைனா எங்களுக்கு தூக்கமே வராதே … இங்க DVD விலையும் ரொம்ப கம்மி பதினஞ்சு ரூபாயில ஆரம்பிச்சி இருபது ருபாய் வரைக்கும் நல்ல பிரிண்ட்ல ஆங்கிலம், ஹிந்தி படங்கள் கிடைக்கும் .. தமிழ் படங்கள் நாங்க பொதுவா தியேட்டர்ல பாத்துடுரதுனால பிற மொழி படங்களுக்கு முன்னுரிமை. அதுலயும் குறிப்பா உயர்திரு பாலகிருஷ்ணா அவர்கள் நடித்த தெலுங்கு திரை படங்களும் வாங்கிருக்கோம் அப்படின்னா பார்த்துகொங்களேன் 😛

கடைகாரர் நமக்கு ரொம்ப தோஸ்த் ஆயிட்டார் .. ஏதாவது DVD வொர்க் ஆகலை அப்படின்னு திரும்ப கொண்டு போய் குடுத்தா மாத்தி குடுதுருவார்… சிலசமயம் இந்த பிரிண்ட் நல்லா இருக்காது பாஸ் .. அப்படின்னு கூட சொல்லி இருக்கார்

இப்போ மதுரை மாநகரம் அண்ணன் கண்ட்ரோல்ல இல்லாம போனதால எந்த ஒரு DVD யுமே கிடைக்குரதில்லை. அதனால சென்னை பக்கம் போகும் போதெல்லாம் பர்மா பஜார் பக்கம் ஒரு விசிட் அடிப்பது வழக்கமான ஒரு விஷயம் ஆகி விட்டது…

ஸ்கைவாக் மால்:

நான் சென்னை போன புதுசுல என்னோட ரூம் (பச்சிலர் பசங்க என்னதான் மிக பெரிய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாலும் அத “ரூம்” அப்படின்னு ஏன் தான் எல்லாரும் சொல்றாங்களோ தெரியல 😦 ) பக்கத்துல ஒரு பிரம்மாண்டமான கட்டடம் கட்டி கிட்டு இருந்தாங்க.. சென்னைக்கு வந்த புதுசு வேறயா… ரொம்ப பெரிய கட்டடமா இருந்ததுன்னால பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்க்குறது மாதிரி பார்த்து கிட்டு இருந்தேன் .. அப்போ என்னோட ரூம் மேட் தான் சொன்னாரு இங்க ஒரு பெரிய ஷாப்பிங் மால் வருதுப்பா உள்ள ஏழெட்டு தியேட்டர் வேற வர போகுது அப்படின்னு …. சரி இவரு இப்படி சொல்லிட்டாரே.. அப்போ கண்டிப்பா இது மிக பெரிய ஒரு விஷயம் தான் அப்படின்னு முடிவு பண்ணி .. இத இப்போ திறந்டுவாங்க … இப்போ திறந்டுவாங்க …  அப்படின்னு நானும் காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் … இந்த இலவு காத்த கிளி இருக்கு இல்லையா ? (அதுக்குள்ள அவசரப்பட்டு கம்ப்யூட்டர் சட்டௌன் பண்ற முடிவுக்கு எல்லாம் போக கூடாது… கதையெல்லாம் சொல்ல போறதில்ல) 😉 அந்த மாதிரி நான் காத்து கிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன்… 🙂 அவ்ளோ தான்…

கடைசில நான் சென்னைய விட்டு கிளம்புறதுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னாடி தான் இந்த மால திறந்தாங்க அந்த அயோக்ய ராஸ்கல்ஸ் 😉 .. இந்த மால் எனக்கு ரொம்பவும் பிடிச்ச இடம்… இப்போ சென்னை போகும் போதெல்லாம் கண்டிப்பா எதாவது ஒரு சாக்கு சொல்லி அங்க போயிடறது…

கிரௌண்ட் ப்ளோர்ல இருக்குற ஸ்டார் பஸார் – ஒரு மார்டன் சரவணா ஸ்டோர் …. அங்க பல பொருட்கள், ஆடை அணிகலன்கள்… என்னுடைய அழகுக்கு !?!?! 😉 அழகு சேர்க்கும் பல சாதனங்கள் வாங்கிருக்கேன்… அந்த மால்ல இருக்குற மத்த கடைகள்ல எல்லாம் ஷாப்பிங் பண்ணும் அப்படின்னா மாச சம்பளம் முழுசையும் செலவு பண்ண வேண்டியதிருக்கும் – பரவா இல்லையா ? 😉 அப்புறம் மாடில Food Court இங்க என்ன ஆர்டர் பண்ணனும் என்றாலும் அவங்க குடுக்குற ஒரு கார்டுல காசு ரீசார்ஜ் பண்ணி தான் வங்க முடியும்.. அப்பப்போ அந்த பக்கம் நண்பர்களோட தலைய காட்டுறது தான் 🙂

பலமுறை இந்த மால்க்கு போயிருந்தாலும் இங்க இருக்குற PVR ல  இது வரைக்கும் படம் பார்த்தது இல்ல … ஹ்ம்ம்… அடுத்த தடவையாவது போக முடியுதான்னு பார்க்கலாம் ….

இந்த பதிவ இத்தோட நிறுத்திக்கிறேன்… தக்க சமயம் வரும் பொழுது அடுத்த பாகம் வெளியாகும் … (அது யாருப்பா அங்க கல்லெல்லாம் எடுக்குறது … Me – பாவம் 😉 )

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: