jump to navigation

சாத்தூர் தீ விபத்தும் வேடிக்கை மனிதர்களும்… May 10, 2012

Posted by anubaviraja in செய்திகள், தமிழ், நடந்தவை.
Tags: , , ,
trackback

எப்போவும் பொழுது போகலைனா எங்க ஊரான சாத்தூர் அப்படிங்கற பேர Googleல சர்ச் பண்ணி பாக்குறது வழக்கம்… எப்போயுமே மிக கம்மியான ரிசல்ட் தான் வரும்… நியூஸ் செக்சன் எடுத்தா “சாத்தூர் KKSSRR ராமசந்திரன்” – முன்னாள் அமைச்சர் பத்தின செய்தி தான் இருக்கும்.. இது தான் வழக்கம் .. ஆனா இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான ஒரு விபத்து பத்தின செய்தி  ஹிந்து வெப்சைட் ல வந்திருந்தது.. நான் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி என்னடா இதுன்னு  தமிழ்ல தேடி பாத்த போது தான் தெரிய வந்தது இது சாத்தூர் கவார்மன்ட் ஆஸ்பத்திரி முன்னாடி இருக்குற , எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு ஹோட்டல்ல நடந்த விபத்து அப்படின்னு…

பாவம் இந்த விபத்துல ஹோட்டல் ஓனர், அவர் அண்ணனோட  பதினஞ்சு வயசு பையன்… ஹோட்டல் மாஸ்டர் இந்த மூணு பேரும் சம்பவ இடத்துலேயே இறந்துட்டாங்க … காஸ் சிலிண்டர் கொண்டு வந்த ஊழியர் அந்த வால்வ சரி செய்ய நெனைச்சப்ப இந்த கோரமான தீ விபத்து நடந்திருக்கு… இது தவிர மூணு பேருக்கு படுகாயம் வேற …  இந்த ஹோட்டல்ல பலமுறை நான் மதிய உணவு சாப்பிடுருகேன் ஓரளவு விலை குறைவான, அதே சமயம்  சுவையான உணவா தான் இருக்கும் .. அந்த கடை ஒனரோட முகம் சரியா நினைவு இல்லா விட்டாலும் கலகலப்பா பேசுற ஒரு நபர் தான் .. நம்ம மக்கள் பாதுகாப்பு விஷயங்கள்ல எவ்ளவோ கவன குறைவா இருக்கிறது தான் இது போன்ற விபத்துகளுக்கு மூல காரணமே ..

இதையெல்லாம் விட என்னோட மனச ரொம்ப பாதிச்ச விஷயம் என்னன்னா … இங்க விபத்து நடந்து இருக்கு , மூணு உயிர் பறிபோயிரிசி… காயம் அடைஞ்சவங்கள மருத்துவமனைக்கு கொண்டு போகனும், உடல்களை மீட்கனும், தீ பரவ விடாம பார்த்துக்கணும்,  மீட்ப்பு படையினர் சம்பவ இடத்துக்கு  வரணும் … இதுக்கெல்லாம் வழி விடாம … விபத்து நடந்த இடத்த சுத்தி நம்ம பொது ஜனங்கள் நின்னு வேடிக்கை பார்த்து கிட்டு இருந்திருக்காங்க ….போலீஸ் வந்து தடியடி நடத்தி தான் கூட்டத்த கலைக்க வேண்டியது இருந்திருக்கு 😦

அடப்பாவிகளா … உங்க வீடு தீ பிடிச்சி எறிஞ்சா இப்படி தான் வேடிக்கை பார்ப்பின்களா? கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாம்? இது என்ன லைவ் கிரிகெட் மேட்சா ? இல்ல புது படம் ஸ்க்ரீன் போட்டு காட்டறான்களா??? அம்புலன்ஸ் வரதுக்கு கூட வழி விடலை அப்படின்னா நீங்கல்லாம் நிஜமாவே மனிதர்கள் தானா?  நீங்க போய் உதவி கூட பண்ண வேண்டாம்யா… கொஞ்சம் ஒதுங்கி நின்னு உதவி பண்ண வரவங்களுக்கு வழியாவது விடுங்களேன் ? இதுக்கு நீங்க கதவ நல்லா இறுக்கி பூட்டிகிட்டு வழக்கமா டிவில பார்க்குற  மெகா சீரியல், ஒரு கோடி குடுக்குற நிகழ்ச்சி , போன் பண்ணா பாட்டு  போட்ற ப்ரோக்ராம் .. இதையே பார்த்துகிட்டு இருந்திருக்கலாம் ….

உலகம் எங்கயா போய்கிட்டு இருக்கு ?? மனிதம், மனிதாபிமானம் … எதுனாச்சும் கொஞ்சமாவது மிச்சம் இருக்கா ? 😦 😦 😦

நெஞ்சு பொறுக்குதில்லையே…

இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் …

படங்கள் நன்றி : தினகரன்

முழு செய்தியும் படிக்க – இங்கு சொடுக்குங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: