jump to navigation

பவர் ஸ்டார் VS கோபிநாத் – நீயா நானா!!! May 28, 2012

Posted by anubaviraja in செய்திகள், தலை, நகைச்சுவை, நடந்தவை.
Tags: , , , , , , ,
trackback

நேந்து மதியம் சுமார் ஒரு மூணேகாலுக்கு பவர் ஸ்டார் ட்விட்டர்ல இன்னிக்கு நீயா நானால நான் வரேன் பார்க்க தவறாதிங்க ரசிக கண்மணிகளே அப்படின்னு சொன்ன போது, IPLக்கு போட்டியா விஜய் டிவி களத்துல இறக்குன ஒரு பிரம்மாஸ்திரமா தான் எல்லாருக்கும் தெரிஞ்சது!!

இந்த மாபெரும் ஒளிபரப்ப பார்க்க முடியாம அதே நேரத்துல பஸ்ல வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டேன் !! 😦 😦 (என்ன கொடுமை சார் இது!) சரி இன்னிக்கு Facebook திறந்து பாத்தா, இந்த கோட் போட்ட கோபிநாத் நம்ம பவர் ஸ்டார கன்னாபின்னான்னு கலாய்சிருக்கார்!! அந்த வீடியோவ நீங்களே கொஞ்சம் பாருங்களேன்

ட்விட்டர் , Facebook எல்லா ஏரியாகளிலும் பவர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிச்சிட்டாங்க!!

எப்பா, நீங்களே சொல்லுங்க – உங்களுக்கு இன்னொரு முகம் இருக்கும்ல அப்படின்னு கேட்டா பிளாஷ்பாக் சொல்லுறதுக்கு அவுரு என்ன பாம்பே பாட்ஷா பாயா?? வின்னர் பட காமெடி தான் பாஸ் ஞாபகம் வருது

கைபுள்ள: எனக்கு கோபம் வராது……
கட்டதோர: ஓ! அப்போ கோபம் வந்தா ?
கைபுள்ள: அதான் வராதுன்னு சொல்லறேன்னே… அப்புறம் ஏன்ங்க அத எதிர்பாக்குறிங்க??

மிஸ்டர் கோபி , நீங்க பவர் ஸ்டார் கிட்ட சீரியசா என்ன எதிர்பாக்குறிங்க? அவர் மக்களை மகிழ்விக்கிற கலைஞன்!!! போற போக்க பார்த்தா நீங்க ராமராஜன் கிட்ட மஞ்ச சட்ட போட வேண்டாம்ன்னும் டிஆர் கிட்ட அடுக்கு மொழி பேச வேண்டாம் அப்படின்னும், ராஜேஷ் கிட்ட போய் கதையோட படம் எடுங்க அப்படின்னும் சொல்லுவார் போல தெரியுது!!

அன்பே சிவமும் பார்க்கலாம், மைக்கேல் மதன காமராஜன் படமும் பார்க்கலாம்… உங்களுக்கு எந்த Content வேணுமோ அத தேடி எடுத்துக்கோங்க பாஸ்!!  கிரேஸி மோகன் கிட்ட வந்து ரெண்டு மணி நேரம் சீரியஸா ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுங்க அப்படின்னு சொன்னா அவர் அப்படியே ஷாக் ஆயிற மாட்டார் ??

என்னால நூற்று கணக்கான மக்கள் பயன் பெருறாங்க அப்படின்னு பவர் ஸ்டார் சொன்னார் – உண்மை தான் என்னோட ப்ளாக்க்கு பதிவு எழுதாத நாட்கள்ல ஒரேடியா காத்தாடும்… இன்னிக்கு தினமும் கொறஞ்சது 10-20 பேராவது என்னோட ப்ளாக் படிக்கிரங்கன்னா அது இந்த பவர் ஸ்டார்ரோட பதிவ Googleல தேடி வரதுனால் தான்!!! இது தான் நிதர்சன உண்மை!!! 😉

இந்த மாதிரி ரசிகர்கள் பொங்கிற கூடாது அப்படின்னு தான் ட்விட்டர்ல பவர் ஸ்டார் சொன்னார்

பச்ச புள்ளய்யா அவரு!!!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்!! ப்ரோகம்ல பவர் ஸ்டார் சொன்னது!!

எதுக்குங்க சீரியஸா இருக்கணும் ?? ஜாலியாவே எல்லாத்தையும் எடுத்துக்கலாமே

இது ஒரு வாழ்க்கை தத்துவம் அய்யா!!!

Advertisements

Comments»

1. valaiyakam - May 28, 2012

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

2. thai - May 29, 2012

gopinathithin oru kiltharamana seyatpadu.power star oru panpalan

3. Ganessin - May 30, 2012

//என்னால நூற்று கணக்கான மக்கள் பயன் பெருறாங்க அப்படின்னு பவர் ஸ்டார் சொன்னார் – உண்மை தான் என்னோட ப்ளாக்க்கு பதிவு எழுதாத நாட்கள்ல ஒரேடியா காத்தாடும்… இன்னிக்கு தினமும் கொறஞ்சது 10-20 பேராவது என்னோட ப்ளாக் படிக்கிரங்கன்னா அது இந்த பவர் ஸ்டார்ரோட பதிவ Googleல தேடி வரதுனால் தான்!!! இது தான் நிதர்சன உண்மை!!!///
நான் உங்க ப்ளாக்க்கு வந்ததும் அப்படிதான்…..

இவரால் வேறு எந்த நடிகரையாவது இப்படி கேள்வி கேட்க முடியுமா?
ஒரு எளிய நடிகரை கலாய்ப்பது என்ன பெரிய காரியமா?
சொந்த காசில் படம் எடுத்தார். சொந்த செலவில் அந்த படத்தை ஓட்டினார்… இதெல்லாம் ஒரு குற்றமா?
ஏன் ஓடாத எந்திரன் படத்தை சன் டிவி ஹௌஸ் புல் என்று ரீல் விட்டு ஒட்டினார்கலே அதே கேள்வி கேட்க துப்பு உள்ளதா இந்த கோபிநாத்திடம்?
மன்மதன் அம்பு என்ற குப்பை படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டின் பொது இதே கோபினாத் ஒரே அடியாக பில்டுப் கொடுத்தார் விஜய் டிவியில்……
என்னை பவர் ஸ்டார் ரசிகனாக மாற்றிய புகழ் கோபினாதிற்கே. வாழ்க பவர் ஸ்டார். ஒழிக கோபிநாத்.

4. K. Jayadev Das - June 1, 2012

\\இன்னிக்கு தினமும் கொறஞ்சது 10-20 பேராவது என்னோட ப்ளாக் படிக்கிரங்கன்னா அது இந்த பவர் ஸ்டார்ரோட பதிவ Googleல தேடி வரதுனால் தான்!!! இது தான் நிதர்சன உண்மை!!! ;)\\

நான் கூட அப்பைட்த்தான் இன்னைக்கு வந்தேன்…….. ஹி……….ஹி…………ஹி……………..

5. செல்வா - June 19, 2012

உண்மை

6. nalamvirumbi - August 23, 2012

same here 🙂

anubaviraja - September 6, 2012

நன்றி பாஸ்

7. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] பவர் ஸ்டார் VS கோபிநாத் – நீயா நானா!!! – இது நம்ம கோட்டு கோபி பவர் ஸ்டார கலாய்ச்சு ஒரு ஷோ பண்ண ஆதங்கத்துல எழுதுனது -செம்ம ரெஸ்பான்ஸ் […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: