jump to navigation

செவியற்றோர்க்கு வெடித்தாயோ?? September 6, 2012

Posted by anubaviraja in கவிதை, தமிழ், நடந்தவை.
Tags: , , , ,
trackback

வறியோன் வெடிக்க எளியோன் சிதறினானோ ?

சோற்றுக்கு பிழைப்புக்கு தினம் அக்கினி பரிட்சை ஏனோ ?

ஏழையாய் பிறந்தது கொடும் பாவச் செயல் தானோ?

மாந்தர் மகிழ்வுற ஒர் கிராமம் மயானமானதோ ?

ஒளிச் சிதறல் வர உழைத்தவன் உடல் சிதறி மாண்டதேனோ ?

நீவிர் தீக்குளித்து ஊராருக்கு தீபவொளி விழாவோ?

பிணக்கிடங்குக்கு கொண்டு சென்றது நீ தினமுழைத்த வெடி கிடங்கா?

உதவிக்கு வந்த சனம் அவரோடு மண்டதென்ன ?

உரிமம் ரத்து செய்தார் கதவடைப்பேன் இல்லை?

பிணத்திற்கு பணம் ஏன் ?

வருமுன்னே காப்பதற்கு தடை என்ன?

கேள்விச்சரம் தொடுத்து அஞ்சலி செய்கிறேன்

சிவகாசிக்கு இனியொரு வெடி விபத்து வேண்டவே வேண்டாம்

Advertisements

Comments»

1. ramani - September 7, 2012

நினைவஞ்சலி செலுத்துவதோடு நின்றுவிடாது
இதுபொல் நடவாதவாறு பார்த்துக் கொள்வதே
சிறந்தது என உணர்த்திப்போகும் கவிதை அருமை
மனம் சுட்ட பதிவு.பகிர்வுக்கு நன்றி

anubaviraja - September 7, 2012

மனித உயிர்களுக்கு நம்ம நாட்டுல மதிப்பு கொறைஞ்சி கிட்ட போவது வருந்தத்தக்க நிகழ்வு 😦

2. Radhika SD - September 7, 2012

Sir ungaloda kavidhai ah?!! Very touching!!! good, if there wont be any more Fire accidents in Sivakaasi!

anubaviraja - September 7, 2012

ஆமாம் இது என்னுடைய கவிதை தான்.. முறைப்படி பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யாத வரை, இது போன்ற அசம்பாவிதங்களை தடுப்பது கடினம் :(((

3. Angappan GS - September 7, 2012

ராஜா, கவிதை மிகவும் அருமை
தீயிற்கும் இறக்கம் வரும் இந்த கவிதையை படித்தால்
ஆனால் நம் மனிதர்களுக்கு இறக்கம் இல்லை…
மனித நேயம் மாண்டுவிட்டது
அதிகாரிகளின் அலட்சியம்…
இன்று நாற்பத்தி மூன்று உயிர்கள் பலி
“பாதுகாப்பு” என்பது வார்த்தைக்கு மட்டும் தான்
மனித உயிர்களுக்கு இல்லை..

anubaviraja - September 7, 2012

உரிய பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் இல்லாத பட்டாசு தொழிற்சாலைகள் இன்னும் நூற்றுக்கணக்கில் சிவகாசியில் உள்ளன, நாம் எப்பொழுதும் அசம்பாவிதம் நடந்த பிறகு தான் கற்றுக் கொள்கிறோம் 😦

4. காமராஜ் - September 7, 2012

“nenju erigirathu” raja.. thavirkka thiran padaithor, padithu palan seithaal un kavithai vetri perum. “nalla maatukku oru soodu”

anubaviraja - September 7, 2012

நன்றி அண்ணா !

5. ashok - September 15, 2012

கத்தி சொன்னாலும், கெஞ்சி கேட்டாலும் , கிடைப்பது நீதியல்ல குறைவான நிதி மட்டுமே. ஏன்? என்றால் ஏழை என்று இடி[வெடி] போல் சத்தம் வருகிறது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: