jump to navigation

மின்சாரம் இல்லா தமிழ்நாடு – அப்போ சென்னை ?? October 23, 2012

Posted by anubaviraja in அரசியல், சென்னை, செய்திகள், தமிழ், நடந்தவை, மதுரை.
Tags: , , , , ,
trackback

அனைவருக்கும் வணக்கம் … ரொம்ப நாளா நான் பதிவு எழுதாமலேயே இருந்ததுக்கு மிக முக்கியமான காரணம், தமிழ் நாட்டுல மின் தட்டுப்பாடு தலை விரிச்சி ஆடுறதாலும், அதுக்கு தலை வாரி, பூச்சூடி பார்க்க தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததும் தான் அப்படிங்கறத இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன் 😉

இப்படி தான் ஒவ்வொருத்தரோட பொழுதும் தினம் தினம் போகுது

சென்னைய தவிர்த்த தமிழ்நாட்டோட பிற பகுதிகள் எல்லாத்துலயும் 14-16 மணி நேரம் மின்சாரம் கிடையாது… இதனால வர சில பல பிரச்சனைகள் என்னென்னன்னு பார்க்கலாம்

 • சிறு தொழில் முனைவோர் – வேலைக்கு ஆட்கள் வர்றாங்க… மெஷின்கள் ஓட்ட முடியல – சம்பளம் குடுக்கணும்
 • அரிசி மற்றும் உணவு தயாரிப்பு ஆலைகள் – குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் இடைல்லா மின்சாரம் வேணும்..இல்லைனா ஒண்ணும் தயாரிக்க முடியாது … விலைவாசி எகிறும் …
 • ப்ரௌசிங் சென்ட்டர், ஜெராக்ஸ் கடை, மாவு மில்,  இப்படி மின்சாரத்த மட்டுமே சார்ந்து இருக்கும் தொழில் எல்லாம்.. 😦
 • தொழிலாளர்கள் – இப்படியே போய்கிட்டு இருக்குறதால நெறைய கம்பனிகள் இழுத்து மூடிட்டாங்க … வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்க தான் போகுது
 • தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் இங்கல்லாம் மெசின் ஓட்டுறதே பெரிய காரியமா இருக்கு
 • கணினிமயமாக்கபட்ட அரசு அலுவலகங்கள் – ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது – இவ்வளவு ஏன், போன மாசம் கரண்ட் பில் கட்ட போனேன், இப்போ கரெண்ட் இல்ல, போயிட்டு கரண்ட் வந்ததும் வாங்க அப்படின்னு சொல்லிட்டாங்க!!! என்ன கொடுமை சார் இது !! 😦 😦 😦
 • விவசாயம் – நீர் பாசனம் பண்றதுக்கு தேவையான அளவு மின்சாரம் – அது இல்லவே இல்லை
 • மாணவர்கள் – சரியா படிக்க முடியல, தூங்க முடியல… பச்சிளம் குழந்தைகள் இரவில கதறி அழும்போது…ஹ்ம்ம் .. 😦
 • இல்லத்தரசிகள் – சீரியல் பார்க்க முடியல, தேங்கா அரைக்க மிக்சி உபயோக படுத்த முடியல, ஆறு மணிக்கு கரண்ட் போகுறதுக்கு முன்னாடியே எழுந்து சமையல் எல்லாம் முடிக்க வேண்டியது இருக்கு …
 • கரண்ட் இருக்குற நேரத்துல UPS கூட சார்ஜ் ஆகாம பாதி ராத்திரியில கத்த ஆரம்பிசிருது …
 • இளைய மக்கள் – இணையத்துல இணைஞ்சி இருக்க முடிவதில்லை – போன் சார்ஜ் பண்றதுக்கு கூட சில சமயம் பவர் இருக்க மாட்டேங்குது..
 • தூக்கம் இல்லாம மக்கள் எல்லாம் ஒரு விதமான மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க …

ஆக மொத்தம் இது மக்கள் மேல தொடுக்க பட்டுள்ள மறைமுக போர் அப்படின்னு எல்லாரும் சொல்ராங்க… இப்போ மின் தட்டுப்பாடு, அப்புறம் உணவு பஞ்சம் , தண்ணீர் பஞ்சம், காற்று பற்றாகுறை – இன்னும் என்னென்ன வரப்போகுதோ ??

நிலைமை இப்படி இருக்கும் போது.. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி வரைக்கும்.. சென்னை ல மட்டும் ஒரு மணி நேரம் மட்டும் மின் வெட்டு அமுலிலிருந்தது… இத்தனைக்கும் மொத்த மின் தேவைல மூன்றில் ஒரு பகுதி சென்னைக்கு மட்டும்… சென்னை, வர்த்தக தலை நகரம் தான், மிக முக்கியமான நபர்கள், தலைவர்கள், இருக்கும் இடம் தான்… வருவாய் கொண்டு வரும் ஊர் தான், தகவல் தொழில்நுட்ப பூமி தான்… ஆனா இங்க தமிழ் நாட்டின் கடை கோடி மக்களையும் கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன்… தட்டு பாடு இருக்கும் சமயத்துல எல்லாரும் பகிர்ந்து கொள்வது தானே இயல்பு ?

இந்த மொபைல் கம்பெனிகாரங்க தமிழ் நாடு வட்டம், சென்னை வட்டம் அப்படின்னு பிரிச்சு வைக்கிறாங்க அப்படின்னு பார்த்தா.. மின்சார வாரியமுமா?? எப்பா ராசா… சென்னை தமிழ் நாட்டுக்குள்ள தான் இருக்கு …

நாங்கள்லாம் சென்னைக்கு எதிரா பேசல… இப்போ. காவேரில தண்ணி தராததுக்கு கர்நாடகாகாரங்க என்ன சொல்றாங்க? எங்க தேவைக்கு தான் தண்ணி இருக்கு … இப்போ  அவங்க பண்றதுக்கும், சென்னைக்கு மட்டும் மிக குறைவான மின்வெட்டு பண்றதுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த அளவுக்கு மின்வெட்டு வரும், அதுக்கு தகுந்த நடவடிக்கைகளை எந்த அரசாங்கமும் எடுக்கலையா?? என்ன மாதிரியான தலைவர்கள நாம தேர்ந்தெடுத்துகிட்டு இருக்கோம்? கூடங்குளம் – இங்க இருந்து தமிழ் நாட்டுக்கு 250 மெகாவாட் மின்சாரம் தான் வர போகுதாம்… மொத்த பற்றாகுறை மூவாயிரம் மெகாவாட் பக்கம்… கொஞ்ச காலம் காத்து நம்ம பக்கம் வீசுச்சி… காற்றாலைல இருந்து மின்சாரம் வந்து கொஞ்சம் நிம்மதியா இருந்தோம்… இப்போ நம்ம மாற்று ஏறி சக்தி பத்தி தீவிரமா யோசிக்கணும்…

இதெல்லாம் ரொம்ப ஓவர் .. ஆமா …

கடந்த சில தினங்களா மழை பொழிவதாலும், மின் தேவை குறைந்ததாலும், இடைல்லா மின்சாரம், கொஞ்சம் கொஞ்சம் கெடைக்குது, தமிழ் நாடு குஜராத் மாதிரி மின் மிகை மாநிலமா மாறனும்…

 • மின் திருட்டு ஒழிக்க பட வேண்டும்
 • சூரிய சக்தி மின்சார திட்டங்கள்  பெருமளவில் அமைக்க பட வேண்டும்
 • கிடப்பில் போட பட்டுள்ள மின் திட்டங்கள் போர்கால அடிப்படையில் செயல் படுத்த பட வேண்டும்
 • மின் கடத்துதலில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்
 • மக்களாகிய நாம் மின்சாரத்த சிக்கனமா பயன் படுத்தனும்
 • குண்டு பல்ப் முற்றிலும் ஒழிக்க பட்டு CFL  புல்ப்கள் புழக்கத்தில் வர வேண்டும்

இப்படி பல வேண்டும்கள் இருக்கு, மக்களாகிய நாமும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டால்… மின் தட்டுபாட்டை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்…

இல்லைனா இந்த மாதிரி தெருவுக்கு தெரு போஸ்டர் ஓட்ட வேண்டிய நெலமை சீக்ரமா வந்துரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: