jump to navigation

21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012

Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , , , ,
trackback

100_post

உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..

என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …

 

top10-wide1

 1. பவர் ஸ்டார் VS கோபிநாத் – நீயா நானா!!! – இது நம்ம கோட்டு கோபி பவர் ஸ்டார கலாய்ச்சு ஒரு ஷோ பண்ண ஆதங்கத்துல எழுதுனது -செம்ம ரெஸ்பான்ஸ்
 2. பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை – இது நம்ம தலைவரோட வாழ்க்கை வரலாறு…
 3. எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… -2011 எலேக்சன்ல பிரச்சாரம் பண்ண நம்ம தல வடிவேலுவுக்கு என்ன நடக்க போதுன்னு முன் கூட்டியே யோசிச்சி எழுதுனது  😉
 4. தெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SAM டைரக்டர்க்கு கூட…  – என்ன ரொம்ப பாதிச்ச ஒரு படம் தெய்வத் திருமகள்… இருந்தாலும் நியாயமான விமர்சனம் தான் ..
 5. தமிழ் நாடே பத்தி எரியும் .. தலைவர் போஸ்டர் மேல கை வச்சிட்டிங்கல்ல?? – மதுரை போஸ்டர் கலாசாரத்த காலய்ச்சும், நம்ம அருமை டி ஆர் அவர்கள வாழ்த்தியும் எழுதின பதிவு …
 6. பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தானம் அண்ட் கோ கலக்குறாங்க  – சும்மா ஒரு ட்ரைலர் மட்டும் தான் 🙂
 7. சென்னை: IPL – நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா! – இந்த உட்டாலக்கடி IPL 2012 பத்தி போட்ட பதிவு
 8. சென்னை நகரம்.. அதிவேக சாலை.. திடுமென தோன்றும் தேவதைகள் ..  – நான் எழுதினதுலேயே எனக்கு பிடிச்ச ஒரு சீரியஸ் ஆன பதிவு
 9. 2016 ல நம்ம ஆட்சி தான் – அதே தான் , எலெக்சன் , ரிசல்ட், தல டி ஆர் – பிரமாதம்
 10. S.M.S. தத்துவங்கள் பாகம் – 1 – பார்வட் SMS தொகுத்து எழுதுனது …. ரெண்டாம் பாகம் இன்னும் வரல 😉

மேல சொன்னது எல்லாம் எண்ணிக்கை அடிப்படையிலான பதிவுகள்… என்னோட மனசுக்கு நெருக்கமான அஞ்சு பதிவுகள்…

5

 1. சென்னை நகரம்.. அதிவேக சாலை.. திடுமென தோன்றும் தேவதைகள் .. ஒரு சம்பவத்த கேள்விப் பட்டு, ஈர்க்கப் பட்டு அனுபவித்து எழுதின பதிவு
 2. சாத்தூர் தீ விபத்தும் வேடிக்கை மனிதர்களும்… – சொந்த ஊர் மக்களை பத்தி கடும் கோபத்துல எழுதினது
 3. மின்சாரம் இல்லா தமிழ்நாடு – அப்போ சென்னை ??  – தமிழ் நாட்டுல நிலவி வரும் கடுமையான மின் பற்றகுறைய பற்றி குறிப்பிட்டு எழுதுனது …
 4. வைப்பற்றங்கரையிலிருந்து கூவம் நதியோரம் வரை….  -என்னோட வாழ்க்கை வரலாறு…
 5. ஒரு கவிதை போட்டி..சில கோணங்களில் காதல்…  – என்னோட குட்டி கவிதை தொகுப்பு …

2012

ரைட்டு… இப்போ இந்த உலகம் அழியிறது, அப்புறம் இந்த மாயன் காலண்டர் … இந்த மேட்டர்க்கு வருவோம்… அதாவது என்னன்னா…இந்த மாயன் பசங்களோட காலண்டர்  21-12-12 டோட முடியுதாம்… அதுனால உலகம் அழிஞ்சி போயிரும்…அது நடக்கும், பூமி பிளக்கும், வானம் வெடிக்கும், சுனாமி வரும், அப்படி இப்படின்னு ஏக பட்ட வதந்தி… ஆனா இது வரைக்கும் ஒண்ணும் நடக்கல… இனிமேயும் ஒண்ணும் நடக்க போறதில்ல… அந்த மாயன் காலண்டர் காலியா போச்சின்னா நாமலே கை காச போட்டு நல்லதா ஒரு சாமி காலண்டரோ,கிங்பிஷர் காலண்டரோ வாங்கி குடுக்க வேண்டியது தான … அத விட்டுட்டுஎதுக்கு இப்படி பீதிய கேளப்பனும்?? இன்னிக்கு உலகம் அழியாததுக்கு காரணம் என்னனா…

 • சச்சின் டெண்டுல்கர் இன்னும் ரிட்டையர் ஆகல
 • மருதநாயகம் இன்னும் ரிலீஸ் ஆகல, இவ்வளவு ஏன் விஸ்வருபமே ஜனவரி 2013ல தான் வர போகுது
 • மாண்புமிகு, இதய தெய்வம், புரட்சி தலைவி, அம்மா அவர்கள் (ஷப்பா மூச்சி வாங்குது ) 2014ல பிரதமர் ஆகுறேன்னு சொல்லிருக்காங்க
 • பவர் ஸ்டார் படம் டிசம்பர் 25 ம் தேதி தான் ரிலீஸ் ஆகுது
 • ஜூன் 2013 ல மின் வெட்டு இருக்காதுன்னு நத்தம் விஸ்வநாதன் சொல்லிக்கார்
 • கலைஞர் தனி ஈழம் அமைச்சு தரேன்னு சொல்லிருக்கார்
 • இதுக்கெல்லாம் மேல , நான் இந்த நூறாவது மொக்கை போட வேண்டியது இருந்தது இல்லையா ? 😉

ஆனா ஒண்ணு, மனித இனம் தன்னோடைய மன உறுதிய விடாத வரைக்கும் உலகம் முழுசா அழியாது …

Fear is not real! It is a product of thoughts you create. Do not misunderstand me, danger is very real. But fear is a choice -Will Smith (After Earth)

Advertisements

Comments»

1. Mercy Livi - December 21, 2012

சென்னை நகரம்.. அதிவேக சாலை.. திடுமென தோன்றும் தேவதைகள் .. One of my fav from your list, Raja ! Way to go…. Waiting to see the 250th post soon. Hope you don’t take Sachin as example here ! Juz Kidding.

anubaviraja - December 21, 2012

Sure Mercy, wont be so lazy from 2013, let me see how many I can score next year 🙂

2. megajoseph - December 21, 2012

நல்ல பதிவு

anubaviraja - December 22, 2012

மிக்க நன்றி 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: