jump to navigation

பேருந்து பயணம் – வாழ்வியல் பாடம் ் March 16, 2013

Posted by anubaviraja in நடந்தவை, மதுரை.
2 comments

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் என்னுடைய மொபைல் போன் மூலம் எழுத பட்டு பின்னர் கணினியில் சரி பார்க்க பட்டது

சற்று முன்பு வரை கூட பதிவு எழுதும் மன நிலையில் நான் இல்லை. இப்பொழுது பேருந்தில் பயணம் செய்து கொண்டு தான் இருக்கிரேன், ஆயினும் எழுத தூண்டியவர் என் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் தான்.

வெகு சமிபத்தில் திரைஉலகத்தயும் இணயத்தயும் சூழ்ந்து இருக்கும் ஹரிதாஸ் மற்றும் பரதேசி ஆகியன என்னுள் எற்பபடுத்தி இருக்கும் தாக்கம் அதிகம்.

வழமை போல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து எனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருக்கிரேன். பேருந்தில் சற்றெ மனநலம் குன்றிய ஒருவர் , இருபது வயது இருக்கலாம்.. ஒல்லியான உடல் உருவம், கருத்த தேகம், அசவுகரியமான உடல் மொழி, அழுக்கான ஆடைகள்.. நடத்துனரால் இறக்கி விடப்படுவாறோ என எண்ணிக்கொண்டு இருந்தேன்…

image

(more…)

Advertisements

நான் வாங்கிய பைக் – Bajaj Discover 100CC March 11, 2013

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை, மதுரை.
Tags: , , , , ,
2 comments

அன்பர்களே, நண்பர்களே… ரொம்ப நாளா இந்த பக்கம் வராம இருந்துட்டேன்னு கொஞ்சம் பேர் வருத்தத்துலயும்,நெறய பேர் கட்டுகடங்காத மகிழ்ச்சிலயும் இருக்குறிங்க அப்படின்னு கேள்விப்பட்டு இங்க வந்துட்டேன். 😉

அதாகப்பட்டது, நான் ஒரு ஆறு மாசம் முன்னாடி வாங்கின பைக் – பஜாஜ் டிஸ்கவர் 100 சிசி …இத பத்தி எழுதுறதுக்கு இவ்வளவு நாள்!!

இந்த வண்டி வாங்குறதுக்கு முன்னாடி எவ்வளவு குழப்பங்கள், எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு ஆராய்ச்சிகள்… இதுக்கு முன்னாடி இரு சக்கர வாகனம் – அப்படின்னு ஒண்ணு நான் சென்னைல ஒட்டிகிட்டு இருந்தது சுசுகி ஷோகன்… அருமையான வண்டி பாஸ்… நான் ஆபீஸ் வரதுக்கு 100  அடி தூரத்துக்கு முன்னாடியே எல்லாரும் அலர்ட் ஆயிருவாங்க அப்ப்டின்ன பார்த்துகொங்களேன்… சிறப்பு சத்தம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிலோமீட்டர் ஓடும் தன்மை, அருமையான தோற்றம்… இப்படி அனைத்தும் ஒருங்கே இணைந்த ஒரு உன்னதமான வண்டி தான் –    ஷோகன், ஷோகன் – ஷோகன்… இதுக்கு மேல அந்த வண்டிய பத்தி ஒரு வார்த்தை பேசினேன் அப்படினா சும்மா காட்சிக்கும் ஓட்டிக்கோப்பா அப்படின்னு குடுத்த சிங்கப்பூர் சீமான், என் அண்ணனின் உயிர் நண்பர் , உயர் திரு பிராங்க்ளின் அவர்கள் கோபித்து கொல்வார் (கொள்வார் இல்ல 😉 ) என்பதால் மேற்கொண்டு பஜாஜ் டிஸ்கவர் 100 சிசி பத்தியே நான் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி – அந்த வண்டியின் ஒரு புகைப்படம் உங்கள் பார்வைக்கு,

bike

இதன் பிறகு மதுரை வந்து இரண்டரை ஆண்டுகாலமாக பைக் என்கின்ற பேச்சுக்கே இடம் குடாமல் மன உறுதியோடு வாழ்ந்து வந்தேன்… ( ஸ்ஸ்ஸ்ஸ் .. செந்தமிழ்ல லென்த்தா பேசுறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு 🙂 ) புதுசா ஒரு வீட்டுக்கு குடி வந்தோம்… அப்போ தான் கவனிச்சேன்… அங்க ஒரு பைக் பார்க்கிங் இருக்கு அப்படின்னு… லேசா சலனம் … சரி அப்படி மார்க்கெட்டில என்ன வண்டி தான் இருக்கும் அப்படின்னு பாப்போம்னு தேட ஆரம்பிச்சேன்…

(more…)

%d bloggers like this: