jump to navigation

நான் வாங்கிய பைக் – Bajaj Discover 100CC March 11, 2013

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை, மதுரை.
Tags: , , , , ,
trackback

அன்பர்களே, நண்பர்களே… ரொம்ப நாளா இந்த பக்கம் வராம இருந்துட்டேன்னு கொஞ்சம் பேர் வருத்தத்துலயும்,நெறய பேர் கட்டுகடங்காத மகிழ்ச்சிலயும் இருக்குறிங்க அப்படின்னு கேள்விப்பட்டு இங்க வந்துட்டேன். 😉

அதாகப்பட்டது, நான் ஒரு ஆறு மாசம் முன்னாடி வாங்கின பைக் – பஜாஜ் டிஸ்கவர் 100 சிசி …இத பத்தி எழுதுறதுக்கு இவ்வளவு நாள்!!

இந்த வண்டி வாங்குறதுக்கு முன்னாடி எவ்வளவு குழப்பங்கள், எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு ஆராய்ச்சிகள்… இதுக்கு முன்னாடி இரு சக்கர வாகனம் – அப்படின்னு ஒண்ணு நான் சென்னைல ஒட்டிகிட்டு இருந்தது சுசுகி ஷோகன்… அருமையான வண்டி பாஸ்… நான் ஆபீஸ் வரதுக்கு 100  அடி தூரத்துக்கு முன்னாடியே எல்லாரும் அலர்ட் ஆயிருவாங்க அப்ப்டின்ன பார்த்துகொங்களேன்… சிறப்பு சத்தம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிலோமீட்டர் ஓடும் தன்மை, அருமையான தோற்றம்… இப்படி அனைத்தும் ஒருங்கே இணைந்த ஒரு உன்னதமான வண்டி தான் –    ஷோகன், ஷோகன் – ஷோகன்… இதுக்கு மேல அந்த வண்டிய பத்தி ஒரு வார்த்தை பேசினேன் அப்படினா சும்மா காட்சிக்கும் ஓட்டிக்கோப்பா அப்படின்னு குடுத்த சிங்கப்பூர் சீமான், என் அண்ணனின் உயிர் நண்பர் , உயர் திரு பிராங்க்ளின் அவர்கள் கோபித்து கொல்வார் (கொள்வார் இல்ல 😉 ) என்பதால் மேற்கொண்டு பஜாஜ் டிஸ்கவர் 100 சிசி பத்தியே நான் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி – அந்த வண்டியின் ஒரு புகைப்படம் உங்கள் பார்வைக்கு,

bike

இதன் பிறகு மதுரை வந்து இரண்டரை ஆண்டுகாலமாக பைக் என்கின்ற பேச்சுக்கே இடம் குடாமல் மன உறுதியோடு வாழ்ந்து வந்தேன்… ( ஸ்ஸ்ஸ்ஸ் .. செந்தமிழ்ல லென்த்தா பேசுறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு 🙂 ) புதுசா ஒரு வீட்டுக்கு குடி வந்தோம்… அப்போ தான் கவனிச்சேன்… அங்க ஒரு பைக் பார்க்கிங் இருக்கு அப்படின்னு… லேசா சலனம் … சரி அப்படி மார்க்கெட்டில என்ன வண்டி தான் இருக்கும் அப்படின்னு பாப்போம்னு தேட ஆரம்பிச்சேன்…

இந்திய கம்பெனி தயாரிச்ச வண்டிய வாங்குவோம் அப்படின்னு ஒரு எண்ணம், ஹீரோ, டிவிஎஸ், அப்புறம் பஜாஜ் இந்த மூணு பிராண்ட் மட்டும் தான் என் கண் முன்னாடி … ஒரு சில விஷயம் மட்டும் ரொம்ப உறுதியா யோசிச்சேன்…

  • வண்டி வெயிட் இருக்க படாது (ஏன்னா நம்ப எடை அப்படி )
  • கொஞ்சம் ஒசரமா இருக்கணும் (ஆமா .. ஆமா…)
  • ஸ்டைலிஷ் ஆ இருக்கணும்
  • பெட்ரோல் போடாத (ரைட்டு அதுக்கு வாய்ப்பு இல்ல)கம்மிய செலவகுற மாதிரி
  • ஒரு ஊதா கலர்ல …
  • செல்ப் ஸ்டார்ட் (இல்லன்னா யாரு கிக்கர் உதைக்கிறது சாமி)
  • விலை கம்மியா … (உனக்கு நியாயமா சைக்கிள் தான் வாங்கி குடுக்கணும் அப்படிங்க்ரின்களா?)

இத்தனை கண்டிசனையும் தாண்டி எனக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் c டிஸ்கவர் 100 சிசி!!!

வண்டி என்னமோ நல்லாத்தான் இருக்கு , இந்த மதுரை டீலர் இருக்காரே… அடேயப்பா…. நானே வண்டியில இருக்குற ஒவ்வொரு நட்டு போல்டுக்கும் ஒரு கையெழுத்து அப்படிங்கற விகிதத்தில என்னோடஒட்டு மொத்த சந்ததியவே அடமானம் வச்சி லோன் வாங்கிட்டு வந்தா… செக் கைல வாங்குற வரைக்கும் பணிவா பேசிக்கிட்டு இருந்த மக்கள்… வண்டிய டெலிவரி குடுக்குரதுக்குள்ள …அடடடடா…. அங்க போனும்னு, இத வாங்கனும்ன்னு, RTO பண்ணனும்னு…

இன்று போய்… நாளை வா…. இதே கதை தான் …. 😦

வண்டி குடுக்குரதுல 10 நாள் டிலே … RC புக் அஞ்சு நாள் கழிச்சி… டூல் கிட் பதினஞ்சு நாள் கழிச்சி … சைடு ஹூக் … கடைசி வரைக்கும் கொடுக்கவே இல்ல …

இந்த ஆறு மாச காலத்துல நான் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் ஒட்டிருக்கேன்…எனக்கேன்வோ இந்த வண்டி ரொம்ப பிடிச்சிருக்கு … ரெண்ட தெரு தள்ளி இருக்குற ஆபீசுக்கு போக வரதென்ன (அவன் அவன் பாத்ரூம்கே பைக்ல போறான் 😛 ) இரு தம்பி… நாம பைக்ல  போலாம் அப்டின்னு பந்தா என்ன …

bik2

இது மாதிரி என்னோட வாழ்கையில இன்னும் சில பொருட்கள் ஐக்கியமாயிருக்கு … அத பத்தி எல்லாம் வரும் நாட்கள்ல பார்க்கலாம் 🙂

Advertisements

Comments»

1. Dhans - March 30, 2014

what happen to shogan?? did you sell it?

anubaviraja - April 1, 2014

Its my Friend’s bike boss. He is using it now.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: