jump to navigation

பேருந்து பயணம் – வாழ்வியல் பாடம் ் March 16, 2013

Posted by anubaviraja in நடந்தவை, மதுரை.
trackback

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் என்னுடைய மொபைல் போன் மூலம் எழுத பட்டு பின்னர் கணினியில் சரி பார்க்க பட்டது

சற்று முன்பு வரை கூட பதிவு எழுதும் மன நிலையில் நான் இல்லை. இப்பொழுது பேருந்தில் பயணம் செய்து கொண்டு தான் இருக்கிரேன், ஆயினும் எழுத தூண்டியவர் என் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் தான்.

வெகு சமிபத்தில் திரைஉலகத்தயும் இணயத்தயும் சூழ்ந்து இருக்கும் ஹரிதாஸ் மற்றும் பரதேசி ஆகியன என்னுள் எற்பபடுத்தி இருக்கும் தாக்கம் அதிகம்.

வழமை போல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து எனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருக்கிரேன். பேருந்தில் சற்றெ மனநலம் குன்றிய ஒருவர் , இருபது வயது இருக்கலாம்.. ஒல்லியான உடல் உருவம், கருத்த தேகம், அசவுகரியமான உடல் மொழி, அழுக்கான ஆடைகள்.. நடத்துனரால் இறக்கி விடப்படுவாறோ என எண்ணிக்கொண்டு இருந்தேன்…

image

எனது முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் அந்த நபரிடம் பேச்சு கொடுத்தார். கையில் பத்து ருபாய் மட்டும் வைத்திருந்த அவரிடம், எங்கு செல்ல வேண்டும் என்று வினவிய பொழுது எனது ஊருக்கு முந்தய நிறுத்தத்தை சொன்னார்.

இவரொ இன்னும் பணம் வைத்திருக்கிராயா என்று கேட்டார். இவரும் ஆம் என்பதை போல தலை ஆட்டி விட்டு சட்டை பையில் இருந்து மேலும் சிறிது சில்லரை காசுகளை எடுத்து நீட்டினார்.

 

அப்போதெ எனக்கு புரிந்து போனது இந்த பணம் பயணச்சீட்டு வாங்கப் பத்தாது என்று. ஆனால் இவரொ அமைதியாக ஒரு புன்னகை புரிந்து கொண்டார்.

நடத்துனர் வந்து என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுத்தார். அடுத்து அந்த வாலிபரின் முறை. நடத்துனர் எதோ கேட்க அவர் ஏதோ சொல்லப் போக.. விபரீதம் ஏதும் நிகழும் முன், எனது முன்னிருக்கைக் காரர் நடத்துனரிடம் நான் பணம் தருகிரேன் என்று கூறியதும் நிலைமை சீரானது..

அந்த வாலிபரின் முகத்தில் பூத்த புன்னகை, கார்காலத்து இரவு நேரத்தில் முகிலிடயே தோன்றும் முழு நிலவாய் ஒளி விட்டது. அவ்வளவு மகிழ்ச்சி வெள்ளம் அவரிடத்தில். நான் வெறுமேன வேடிக்கை பார்த்து அமர்ந்திருக்க.. இவர் கையில் இருந்து சில ரொட்டித் துண்டுகள் கொடுக்கப் பட்டன. மீண்டும் ஒரு புன்னகை கீற்று…

திருமங்கலம் பேருந்து நிலையம் வந்ததும் மிகுதியான மக்கள் கூட்டம்… வெறு வழி இன்றி அந்த வாலிபர் என் அருகே அமர வைக்கப் படுகிறார். ஒரு மணி நேரம் அருகருகே அமர்ந்து பயணம்.. ஒன்றும் பேசவில்லை.. சில சமயம் பார்வை மட்டும் செலுத்தினென்.

விருதுநகர் நிறுத்தம் – அவர் அதற்க்குள்ளா சாத்தூர் வந்து விட்டது என்று வினவ , அப்பொது தான் தெரிந்தது அவர் என்னுடய ஊருக்கு தான் வருகிரார் என்று. இதற்க்கிடயே முன்னிருக்கையாளர் இவர் கையில் சிறிது பணத்தை திணித்து விட்டு இறங்கினார். உள்ளே வெக்கையாக இருக்க.. சன்னலை திறந்து சிறிது காற்று வாங்கினேன். சன்னல்… கூதல், என இரு வார்த்தைகள் கேட்க்க.. உடனே அதை சாத்தினேன், உபத்திரவம் தர கூடாதில்லயா ? இடையில் ஒரு தரம்.. சாத்தூர் வந்து விட்டதா என்று கேட்க, நான் வந்ததும் கட்டாயம் சொல்கிறேன் என்றேன்.

கடைசியாக சாத்தூர் நிறுத்தம் வந்ததும், அவரை இறங்கச் செய்து பின் நான் சென்றேன். அம்மா அலைபேசியில் அழைக்க, அவரை பேருந்து நிலையத்தில் விட்டு.. அவர் நினைவுகளை சுமந்து சென்றேன்.

 

 

Advertisements

Comments»

1. Ravi - March 19, 2013

ஓவ்வொரு பயனமும் ஒவ்வொரு பாடம்

anubaviraja - March 19, 2013

ஆமா பாஸ் ..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: