jump to navigation

தமிழனென்று சொல்லடா.. March 18, 2014

Posted by anubaviraja in அரசியல், கவிதை, தமிழ்.
Tags: , , , , ,
add a comment

குடிமகன்

குறிஞ்சியிலே வெடி வெடித்து மலைகளெல்லாம் மாயமாம்..

முல்லையிலே மரமறுத்து சிறு பறவையும் காணோமாம்..

மருதமெங்கும் எரிவாயுக்கு வயலெல்லாம் வேணுமாம்..

உயிரோடு கடலாடி போய்வரல்  நெய்தலெங்கும் தான் அரிதாம்..

காணி நிலம் கிடையாது  பாரதி .. இனி உன் நாடு பாலை நிலம் தான்..

மாண்புமிக்க தமிழினத்தில்..இப்போது வந்து பிறந்ததால்…

மதுபான மணம் தவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே…

Advertisements

21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012

Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , , , ,
4 comments

100_post

உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..

என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …

 

(more…)

இருளில் கிடைத்த வெளிச்சம் .. February 17, 2012

Posted by anubaviraja in கவிதை, தமிழ், நடந்தவை, மதுரை.
Tags: ,
2 comments

ராத்திரி ஒரு மணிக்கு கரண்ட் போச்சின்ன இப்படி கவிதை எழுதி உங்கள தான் இம்சை பண்ண தோணுது … வேற என்ன பண்றது ?? 😉
யாழிசை பாடும் சிறுசிறகாய்
நின் கானம் காதினில் ஒலித்திடவே…அறை நிறை ஒளி தரும் சிறு மெழுகாய் ..
மின்மினி போல் நீ மிளிர்ந்திடவே..

நெற்றியில் நிறைந்த வியர்வை துளி
ஆண்டு பல சென்று தரை விழவே…

இரைச்சல் சத்தம் இல்லாத
அமைதி மீண்டு எனை சேர்ந்திடவே…

ஆவன செய்த மின் வாரியமே
வாழிய வாழிய நின் மக்கட் பணியே…

பாரத சமுதாயம் வாழ்கவே!
ஜெய ஜெய (ஜெயா).. பாரத சமுதாயம் வாழ்கவே!

கடுப்பு கவிதை எழுதி Facebookல் வெறுப்பேற்றும் கலை.. July 26, 2011

Posted by anubaviraja in எதுலயும் சேராது, நகைச்சுவை, நடந்தவை.
Tags: , , , , ,
6 comments

Disclaimer: மக்களே இந்த பதிவ படிச்சிட்டு உங்களுக்கு எதாவது  ஆச்சின்னா கம்பெனி காரணம் இல்ல அப்படின்னு சத்தியம் பண்ணிட்டு மேல படிங்க … அட .. மேலன்னா மேல பார்த்து தெய்வ திருமகள் விக்ரம் மாதிரி படிக்காதிங்க … மேற்கொண்டு படிங்கன்னு அர்த்தம் 😉

(more…)

காதல் போயின்.. March 23, 2011

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
6 comments

கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
அடுத்து பாத்துக்கலாம் டே”  உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா”  பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வாழ்க சனநாயகம்… January 11, 2010

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
2 comments

எத்தனை கோபங்கள்.. எவ்வளவு ஆதங்கங்கள்..
குப்பை அள்ளாமல் சென்ற மாநகராட்சி உந்து மீது,
பகிரங்கமாய் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மீது,
தினம் தலைப்புச் செய்தியில் வரும் ஊழல் மீது,
ஆனால் வாக்குப்பபதிவு தினத்தன்று மட்டும் சிறப்புத் திரைப்படமும், சுகமான உறக்கமும்..

வாழ்க சனநாயகம்…

%d bloggers like this: