ஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா August 31, 2014
Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: #ALS, ஐஸ், காமெடி, சாலஞ், செய்தி, சேலஞ், பக்கெட், ரைஸ் பக்கெட் சாலஞ்
add a comment
என்னடா ஊருக்குள்ள எல்லாரும் ஐஸ் பக்கெட் சேலஞ்….ஐஸ் பக்கெட் சேலஞ்… அப்டிங்ரான்களே.. அதோட எஸ்டிடி (வரலாறு) தெரிஞ்சிக்கணும் ணா..
Amyotrophic lateral sclerosis அப்படின்னு ஒரு நோய்.. அதோட விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்கு ஐஸ் பக்கெட் சேலஞ் அப்படின்னு ஒண்ணு கண்டு பிடிச்சி.. இந்த Facebook, Twitter மாதிரியான சமூக வலைதளங்களில் #ALS அப்படிங்கற டாக்ல பரப்ப ஆரம்பிச்சாங்க.. அதாகப்பட்டது சவால் விடுறவர் ஒருத்தர் .. அத ஓபனா யாரவது ஒருத்தருக்கு அனுப்பி வச்சிர வேண்டியது.. ஒண்ணு சவால ஏத்துகிட்டு ஒரு பக்கெட் நெறைய ஐஸ் கட்டி தண்ணி வச்சி தலைல ஊத்தணும்.. இல்லேன்னா அந்த தொண்டு நிறுவனத்துக்கு டொனேஷன் கொடுத்துரணும்..
ஜூன் மாச கடைசில ஆரம்பிச்ச இந்த சவால், காட்டு தீ மாதிரி பரவ ஆரம்பிசிச்சி.. ஜார்ஜ்புஷ், கிளிண்டன், காமரூன், இது போன்ற உலக தலைவர்கள் எல்லாம் சவால் ஏத்துகிட்டாங்க, ஒபாமா ஜகா வாங்கிட்டு நூறு டாலர் டொனேட் பண்ணிட்டார் 😉 இருந்தாலும் ஐஸ் பக்கெட் குளிரும்மா இல்லையா ?
21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012
Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.Tags: 21-12-12, அனுபவங்கள், கலாய், கவிதை, காமெடி, காலண்டர், சினிமா, செஞ்சுரி, சென்னை, டாப் பத்து, தத்துவம், தமிழ், பவர் ஸ்டார், மாயன், மொக்கை
4 comments
உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..
என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …
பவர் ஸ்டார் VS கோபிநாத் – நீயா நானா!!! May 28, 2012
Posted by anubaviraja in செய்திகள், தலை, நகைச்சுவை, நடந்தவை.Tags: கலாய், காமெடி, கோபிநாத், சினிமா, நீயா நானா, பவர் ஸ்டார், ரசிகர்கள், விஜய்
8 comments
நேந்து மதியம் சுமார் ஒரு மூணேகாலுக்கு பவர் ஸ்டார் ட்விட்டர்ல இன்னிக்கு நீயா நானால நான் வரேன் பார்க்க தவறாதிங்க ரசிக கண்மணிகளே அப்படின்னு சொன்ன போது, IPLக்கு போட்டியா விஜய் டிவி களத்துல இறக்குன ஒரு பிரம்மாஸ்திரமா தான் எல்லாருக்கும் தெரிஞ்சது!!
இந்த மாபெரும் ஒளிபரப்ப பார்க்க முடியாம அதே நேரத்துல பஸ்ல வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டேன் !! 😦 😦 (என்ன கொடுமை சார் இது!) சரி இன்னிக்கு Facebook திறந்து பாத்தா, இந்த கோட் போட்ட கோபிநாத் நம்ம பவர் ஸ்டார கன்னாபின்னான்னு கலாய்சிருக்கார்!! அந்த வீடியோவ நீங்களே கொஞ்சம் பாருங்களேன்
Little Rascals – குட்டி களவாணிகள் April 25, 2012
Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: காமெடி, சினிமா, விமர்சனம்
2 comments
எல்லாருக்கும் வணக்கம்.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ இந்த ப்ளாக் போஸ்ட் மூலமா உங்கள இம்சை பண்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ;).. ஏதோ அழகர் புண்ணியத்துல இன்னிக்கு மதுரைல கரண்ட் போகம இருக்குறதுனால இத எழுத முடிஞ்சது … தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் 😉
இந்த ராஸ்கோலு அப்படிங்கற வார்த்தை வேலைக்காரன் படத்துல VK ராமசாமி பிரபல படுதுனது 😉 இந்த Little Rascals படத்தோட DVD கெடைச்சதும் ஏதோ கொழந்த பசங்க படம் போல அப்படின்னு நெனைச்சி கிட்டு தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஆனா இது வேற வேற வேற மாதிரி படம் 😉 அப்படின்னு தெரிஞ்சிகிட்டேன்…
இந்த படம் ஒரு காதல் காவியம்… 😉 சின்ன குழந்தைகளோட உலகத்த அவங்க கூடவே இருந்து காட்சி படுத்தின மாதிரியான ஒரு கதை அமைப்பு … படத்துல வர்ற எல்லா கதாபாத்திரங்களும் (நியாயமா பார்த்தா கதா பசங்க அப்படின்னு தான் சொல்லணும் 🙂 ) கலக்கலா நடிச்சிருப்பாங்க…
பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை December 27, 2011
Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, மதுரை, ரசித்தவை.Tags: ஆனந்த தொல்லை, கலாய், காமெடி, சினிமா, சீனிவாசன், ட்ரைலர், தமிழ், பவர் ஸ்டார், மொக்கை
7 comments
நம்ம பவர் ஸ்டார் இருக்கார் இல்லையா?? .. என்னது ?? அவர உங்களுக்கு தெரியாதா?? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க??
நித்தியா மேனனுக்கே மிரட்டல் விட்டவரு அய்யா நம்ம பவர் ஸ்டாரு … (நல்லா படிக்கணும் பாஸ் !! நித்யா மேனன் .. நித்யானந்தா கெடயாது 😉 )
அவரை பத்தி ட்விட்டர்ல பேசுறாங்க.. Facebookல பேசுறாங்க.. ஒவ்வொரு நாளும் டிவில பெட்டி எடுக்குறாங்க .. ஆளே வராத லத்திகா படத்த 250 நாள் கடந்து வெற்றிகரமா ஓட வச்சிகிட்டு இருக்குறவர் தான்யா எங்க பவர் ஸ்டார் தேங்கா சீனிவாசன் … ச்சே ச்சே .. டங் ஸ்லிப் ஆயிருச்சி … டாக்டரு சீனிவாசன் ….
ட்விட்டரில் ஒரு ராமாயணம் December 26, 2011
Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.Tags: #140inramayan, கலாய், காமெடி, ட்விட்டர், தமிழ், மொக்கை, ராமாயணம், Hash Tag
1 comment so far
வர வர இந்த ட்விட்டர்ல இருக்குறவங்க அலும்பு தாங்க முடியல …. ஏதேதுக்கோ Hash Tag வச்சி… இப்போ 140 கேரக்டர்ல ராமாயணம் கதை சொல்.. அப்படின்னு #140inramayan அப்படின்னு ஒன்ன ஓட்டி… ஷப்பா… இருந்தாலும் நெறைய ரசிக்க கூடிய Tweets இருக்க தான் செஞ்சது .. கொஞ்சத்த இங்க நம்ம பார்க்கலாம்
ok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… November 17, 2011
Posted by anubaviraja in சினிமா, தமிழ், பிடித்தவை.Tags: காமெடி, சந்தானம், சினிமா, சிவா மனசுல சக்தி, ட்ரைலர், தமிழ், பாஸ் என்கிற பாஸ்கரன், ok ok, SMS
add a comment
கொஞ்சம் நாளா ஒரே சீரியஸ் படமா வந்து கிட்டு இருக்கு பாஸ் … அக்சன், அதிரடி, மறுஜென்மம், மரபணு, ஆப்கான் தீவிரவாதி 😉 … இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி ??
அதான் நம்ம தலைவர் சந்தானம் … அதிரடி ரணகளமா … ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல களம் இறங்கிட்டார் 🙂
ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி கூட்டணியோட களம் இறங்குரதால ஹாட்ரிக் அடிப்பங்கன்னு நம்பலாம் 🙂
ட்ரைலர் சூப்பர் …
அதுல பாருங்க சந்தானம் பேரு தான் முதல்ல வருது.. ஹீரோ உதயநிதி ஸ்டாலினாம் 😉
இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு சொல்லுமாறு .. தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 🙂 🙂
தமிழ் நாடே பத்தி எரியும் .. தலைவர் போஸ்டர் மேல கை வச்சிட்டிங்கல்ல?? August 1, 2011
Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நகைச்சுவை, நடந்தவை, மதுரை.Tags: அனுபவங்கள், கலாய், காமெடி, சினிமா, மொக்கை
8 comments
இது வரைக்கும் எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு காரியம் … பெட்ரோல், டீசல், விலை உயர்வ கண்டிச்சி போராட்டம் அறிவிச்ச ஒரே கட்சி … அது நம்ம லதிமுக தான் ….
Hang over – பாகம் 2! மறுபடியும் மொதல்ல இருந்தா May 10, 2011
Posted by anubaviraja in கிரிக்கெட், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: காமெடி, சினிமா, தமிழ், ஹாங் ஓவர், ஹிந்தி
2 comments
ஹாங் ஓவர் – அப்படின்னு ஒரு படம் , ரொம்ப நல்லா இருக்குன்னு நம்ப நண்பன் ஒருத்தர் சொன்னாரு – இந்த சம்பவம் நடந்தது சுமார் ஒரு ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி .. படத்த பார்த்து இப்படி எல்லாம் யோசிச்சி படம் எடுக்க முடியுமான்னு நானே ஆடி போயிட்டேன் … அசந்து போயிட்டேன் 😉 ….
கதை எல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, கல்யாணத்துக்கு முந்தின நாள் – பாச்சிலர் பார்ட்டி , காலையில எந்திரிச்சி பார்த்தா …. பாத்ரூம்ல புலி, பீரோல கொழந்த, ஒருத்தனுக்கு பல்ல காணோம் , கடைசில மாப்பிளையவே காணோம் …
இந்த பிரச்சனைய எல்லாம் எப்படி தீக்குறாங்க அப்படிங்கறது தான் மீதி கதை… திரை கதைல பட்டைய கேளப்பிருப்பாங்க … விமர்சனம் படிக்க இங்க கிளிக்
இப்போ ரெண்டாவது பார்ட் வேற வருதாம் … இன்னும் ரணகளமா இருக்கும்ன்னு ட்ரைலர் பார்த்தா நிங்களே சொல்விங்க ….
சில படங்கள் பார்ட் டூ எடுத்தாலே கொஞ்சம் மொக்கையா தான் இருக்கும்…. இந்த படம் அப்படி இருக்காதுன்னு நம்புவோம் 🙂
ரஜினி – இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் மேன் November 24, 2010
Posted by anubaviraja in சினிமா, தலை, நகைச்சுவை, ரசித்தவை.Tags: காமெடி, சினிமா, சூப்பர்மேன், சூப்பர்ஸ்டார், ரஜினி
4 comments
நம்ப தலிவர் ரஜினியோட ரோபோ படம் ஹிந்தில ரிலீஸ் ஆனாலும் ஆச்சி ரஜினி பத்தி நம்ப சேட்ஜிகள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு … சாம்பிள்க்கு கொஞ்சம் பிட்டுகள இங்க குடுத்திருக்கேன் படிச்சி பாருங்க ..
ரஜினி சின்ன வயசுல பெட்ல சூ சூ போனதில்ல .. அவர பார்த்து பயந்து பெட் தான் சூ சூ போகும்
ரஜினி எட்டு ஊருல எல் கே ஜி படிச்சாரு இன்னிக்கு அதுக்கெல்லாம் பேரு ஏதோ IIT யாம்
கலிலியோ சின்ன வயசுல மெழுகு திரி வெளிச்சத்துல படிச்சாரு, லிங்கன் தெரு விளக்கு ல படிச்சாரு ஆனா ரஜினி – ஊதுவத்தி வெளிச்சதுலையே படிச்சவர் கண்ணா ..
உலகம் 2012 ல அழிஞ்சி போகும்ம்ன்னு யாரு நைனா சொன்னது ?? நேத்து தான் ரஜினி மூணு வருஷ காரண்டியோட ஒரு லேப்டாப் வாங்குனார்
ரஜினி pizza hut ல போய் இட்லி ஆர்டர் பண்ணா ரெண்டு நிமிசத்துல மதுரை இட்லி வந்து சேரும்
ரஜினியோட ஈமெயில் ஐடி gmail@rajini.com
ரஜினி தண்டால் எடுக்கணும்னா ரெண்டு கையாலையும் பூமிய கிழே தள்ளுவார் அவ்வளவு தான்
ஒரு நாள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் , பேட் மேன் எல்லா மேனும் ரஜினிய பார்க்க வந்தாங்களாம் , அது எந்த நாள் தெரியுமா ?? ஆசிரியர் தினம்
ஜல புயல் வந்ததுகான காரணத்த ரமணன் கண்டு பிடிச்சிட்டார் .. அன்னிக்கு காலையில ரஜினி மெரீனா பீச் பக்கமா ஜாகிங் போனாராம்
Where there is a Will there is a way!! Where there is Rajini there is no other way (இத கரகீடா மொழி பெயர்க்க தெரியல ப்பா )
இது மாதிரி டஜன் கணக்குல இன்டர்நெட் புல்லா கெடக்குது மக்கா
பயபுள்ளைங்க உட்கார்ந்து இதுக்குன்னே யோசிப்பாய்ங்க போல தெரியுது