jump to navigation

ஆயிரத்தில் ஒருவன் – என்னை பாதித்தது ஏன் ??? January 31, 2010

Posted by anubaviraja in சினிமா, தமிழ், ரசித்தவை.
Tags: , , ,
2 comments

ஒரு வழியா எல்லாரும் ஆயிரத்தில் ஒருவன் படத்த எல்லாரும் கிழிச்சி தொங்க போட்டாச்சி 🙂 . படத்த பத்தி விமர்சனம் நல்ல படியாவும் இருந்திச்சி – மோசம்ன்னும் சொல்லிருந்தாங்க … ஆனா ட்ரைலர் பார்த்ததுமே படத்தபார்த்துடணும்ன்னு முடிவே பண்ணியாச்சி .. நமக்கு தான் “ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாம்பளே கேக்க மாட்டோமே” 😉 …

பொங்கலுக்கு தான் ஊருக்கு போறோமே எப்பிடி படம் பாக்குறதுன்னு யோசித்த பொழுது … கண நேரத்தில் உதயமானது அந்த ஐடியா .. சிவகாசில தான் அட்லாப்ஸ் தியேட்டர் இருக்குதே , அதுக்கு ஆன்லைன் புக்கிங் இருக்குதான்னு  பார்த்தா – அட இருந்திச்சி பா . ரைட் புக் பண்ணிட்டு – பொங்கலுக்கு அடுத்த நாள் கெளம்பிட்டோம்  …

படத்தோட கதைய எல்லாரும் ஏற்கனவே சர்ப் போட்டு அலசிட்டதனால , இந்த படம் என்ன எப்படி பாதிச்சதுன்னு சொல்லிடறேன் …

 • வித்தியாசமான கதை களம் –   இந்த மாதிரி ADVENTURE STORY தமிழ்ல வந்து ரொம்ப நாள் ஆச்சின்னு  நெனைக்கிறேன்
 • ஹீரோக்கு படத்துல ஹீரோயசம் இல்லவே இல்லை (நெறைய எடத்துல கார்த்தி கைப்பிள்ளை மாதிரி அடி வாங்கிகிட்டு நிக்கிறார் 🙂 )
 • ஹீரோயின்க்கு படத்துல குடுக்கபட்டிருக்குற முக்கியத்துவம் – அதுவும் ரீமா சென் கெடைக்கிற பால் எல்லாத்தையும் சிக்ஸர் அடிச்சி கலக்கிட்டாங்க ..
 • ரொம்ப நாள் கழிச்சி பார்த்திபன் டபுள் செஞ்சுரி அடிச்சா மாதிரியான ஒரு அட்டகாசமான நடிப்பு
 • “இப்படை தளம் பெயர் என்ன .. இது குறித்து தாங்கள் விவரிக்கவே இல்லையே …அச்சப்படுவோம் என்றா …” பார்த்திபன் பேசுற இந்த டயலாக் – எனக்கு RANG DE BASANDHI கிளைமாக்ஸ் சீன் தான் ஞாபகம் வந்திச்சி
 • இங்கிலீஷ் படங்கள்ல மட்டுமே பார்த்த பிரமாண்டமான சண்டைகாட்சிகளை தமிழ் படத்துல கொண்டு வந்தது
 • சோழர்கள் பேசுற தூய தமிழ் வசனங்கள்

இதெல்லாம் எல்லருக்கும் பிடிச்ச அம்சங்கள் அப்படின்னு நெனைக்கிறேன் . இருந்தாலும் என்ன பாடிச்சதுக்கு முக்கியமான காரணம் – இலங்கை தமிழர்களின் வாழ்க்கைய படத்தின் காட்சிகள் பிரதிபலித்தது தான் .. (செல்வராகவனே இத இல்லைன்னு மறுத்திருந்தாலும் )

 • அவர்கள் பேசுற தமிழ் – இலங்கை தமிழ் மாதிரியே இருக்குறது ..
 • நம்பிக்கை துரோகத்தினால ஆபத்துல சிக்கிகிறது ..
 • நவீன ஆயுதங்களுக்கு முன்னாடி அவங்க கிட்ட இருக்குற பழைய வாள் கேடயத்த வச்சிக்கிட்டு சண்டை போடுறது
 • எதிரிகள் ஜெயித்தும் பெண்களை மானபங்க படுத்துறது
 • கடைசி நேரத்துல கூட கப்பல்ல உதவி வந்துராதான்னு பார்த்திபன் கண்ணுக்கு கப்பல் தெரியிறது

இப்படி சொல்லிகிட்டே போகலாம் .. இதுனால தான் நான் சென்னை வந்ததும் ஒரு தடவை INOX ல போய் இந்த படத்த பார்த்துட்டேன் .

எனக்கு தெரிஞ்சி இது பார்க்க வேண்டிய படம் தான். ஆயிரத்தில் ஒருவன் – கோடு போட்ருக்கார் , யாரவது ரோடு போடுங்களேன் பா …

Advertisements
%d bloggers like this: