jump to navigation

21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. December 21, 2012

Posted by anubaviraja in அரசியல், எதுலயும் சேராது, சினிமா, சென்னை, தமிழ், தலை, நடந்தவை, பிடித்தவை, புத்தகம், மதுரை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , , , ,
4 comments

100_post

உலகம் அழியிர விஷயம் ஒரு ஓரமா கெடக்கட்டும்… இப்போ நான் சொல்ல வர்ற முக்கியமான விஷயம் என்னன்னா …இது என்னோட நூறாவது பதிவு…. அட ஆமாங்க … நானும் செஞ்சுரி அடிச்சிட்டேன் ! 🙂 🙂 🙂 2008 டிசம்பர் மாசம் .. கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி விளையாட்டு போக்கில எழுத ஆரம்பிச்ச ஒரு விஷயம்… இப்போ நூறு பதிவு அப்படிங்கறது… எனக்கே கொஞ்சம் வியப்பா தான் இருக்கு … இத விட அதிகமா நான் எழுதிருக்க முடியும்… எல்லாம் இந்த வேலை பளு, மின்சாரமின்மை, சோம்பல், இப்படி பல்வேறு காரணங்களால் ஏதோ.. இப்போ தான் முட்டி மோதி ஒரு நூறு பதிவுக்கு வந்திருக்கேன்..

என்னோட பெரும்பாலான பதிவுகள் நகைச்சுவை பதிவுகளா தான் இருக்கும்… ஏன்னா பேசிக்கல்லி நாம காமெடி லைக் பண்றதால கூட இருக்கலாம் … நம்ம பதிவுகள்ள ரொம்பஅதிகமா ஹிட் அடிச்சது.. நம்ம தலைவர் பவர் ஸ்டார் தான்… அந்த டாப் பத்து பதிவுகள்…இதோ உங்கள் பார்வைக்கு …

 

(more…)

Advertisements

கடுப்பு கவிதை எழுதி Facebookல் வெறுப்பேற்றும் கலை.. July 26, 2011

Posted by anubaviraja in எதுலயும் சேராது, நகைச்சுவை, நடந்தவை.
Tags: , , , , ,
6 comments

Disclaimer: மக்களே இந்த பதிவ படிச்சிட்டு உங்களுக்கு எதாவது  ஆச்சின்னா கம்பெனி காரணம் இல்ல அப்படின்னு சத்தியம் பண்ணிட்டு மேல படிங்க … அட .. மேலன்னா மேல பார்த்து தெய்வ திருமகள் விக்ரம் மாதிரி படிக்காதிங்க … மேற்கொண்டு படிங்கன்னு அர்த்தம் 😉

(more…)

Source Code – சூப்பரா ஓடும் ரயில்.. June 8, 2011

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
5 comments

ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு இங்கிலீஷ் படம் … அதுவும் நானா பார்க்கல நம்ப நண்பர் ஒருத்தர் சொன்னாருன்னு டவுன்லோட் பண்ணி வச்சாச்சி … இருந்தாலும் கூட ஒரு ரெண்டு நாளா பார்க்கல …

அப்புறம் ஒரு நாள் திடீர்ன்னு சும்மா கம்ப்யூட்டர் ல இருக்குற குப்பையை எல்லாம் பெருக்கி ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி கிட்டு இருக்கும் போது இந்த படம் எத்தேட்சயா கண்ணுல பட்டது.. ரைட்டு இன்னிக்கு பாத்துடலாம்ன்னு முடிவு பண்ணி … நாம தான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா நம்ப பேச்சை நாமலே கேக்க மாட்டோமே …. பார்க்க ஆரம்பிச்சாச்சி…

(more…)

எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… May 13, 2011

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
11 comments

எலக்சன் ரிசல்ட் ஒரு வழியா முடிஞ்சி அம்மாவோட பசுமை அலை எங்கயும் வீச ஆரம்பிசிரிச்சி … தாத்தாவுக்கு டாட்டான்னு ட்விட்டர் ல HashTag எப்போ ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு இப்படி தான் இருக்கும்ன்னு  நெனச்சேன் …

(more…)

பத்தாயிரம் ரூபாய் கட்டும் – பத்து வயசு பையனும் May 13, 2011

Posted by anubaviraja in குட்டி கதைகள், தமிழ், நகைச்சுவை.
Tags: , , , , ,
2 comments

குட்டி கதை சொல்லி ரொம்ப நாள் ஆகி போச்சி , இன்னிக்கு கண்டிப்பா சொல்லி தான் ஆகணும் … மேல படிங்க … (அட மேலன்னா மேல பார்க்கப்டாது… )

ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்

அந்த பய திடீர்னு – ” இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….

சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….

அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??

“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு ”  சொல்லிட்டான்மா… 😦 😦

விஷம் விஷம் ……

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் … இந்த கதைய நமக்கு SMS அனுப்பினது அருமை தம்பி மாதேஷ் தான்…. அதுனால எல்லா புகழும் அவருக்கே ….

ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் SMS வருது ? July 29, 2010

Posted by anubaviraja in குட்டி கதைகள், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
11 comments

நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் பார்வர்ட் SMS வருதா இல்ல உங்க எல்லாருக்கும் வருதான்னு தெரியல ஆனாலும் ஒரு SMS அனுப்புரதுக்கு ஸ்ரீஹரிகோட்டா ல ராக்கெட் செய்ற அளவுக்கு யோசிச்சி அனுப்புறது தான் நம்ம ஆளுங்க வழக்கம் 🙂 🙂

கொஞ்சம் சாம்பிள் இங்க படிச்சு பார்த்தா உங்களுக்கே புரியும் ….

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் 😉

லேட்டஸ்ட் தற்கொலை கடிதம்

————-

————-

————-

நான் விஜய் படத்துக்கு போகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம்

அப்புறம் ஒரு பஞ்ச் டயலாக் :

டாப் அப்  போட்டு SMS அனுப்பும் நண்பனை நம்பு

மேக் அப் போட்டு மிஸ்ட் கால் குடுக்கும் பெண்ணை நம்பாதே 🙂

அடுத்தது தான் ரொம்ப வில்லங்கமான SMS

படித்த உடன் பார்வர்ட் பண்ணவும்

அப்புறமா ?? யோவ் உண்மையிலேயே அந்த SMS ல அது மட்டும் தான் யா இருந்தது

அப்புறம் கடைசியா :

கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்

உதாரணத்துக்கு

நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ

அந்த பொண்ணு

அப்படியே வானத்த பார்த்தா – இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்

கால பார்த்தானா –  உங்களுக்கு செருப்படி நிச்சயம்

சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்

உங்கள பார்த்து சிரிச்சா – உங்களுக்கு குவாட்டர் கன்பார்ம் 😉

சிரிச்சதேல்லாம் போதும் போய் வேலைய பாருங்க .. என்னது சிரிப்பு வரலையா ?? அப்போ நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்….  வர்ட்டா …

பின் குறிப்பு : இதுல நெறைய SMS பார்வர்ட் பண்ணது அன்பு தம்பி மாதேஷ் அவருக்கு என்னோட  நன்றி ..  (இதெல்லாம் சொல்லன்னும்ல பா 😉 )

S.M.S. தத்துவங்கள் பாகம் – 1 April 28, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , ,
10 comments

நம்ம பசங்க நெறைய தத்துவ SMS எல்லாம் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. அதுல எனக்கு பிடிச்ச கொஞ்சம் தத்துவங்கள லிஸ்ட் பண்ணிருக்கேன்.. பாருங்க (ஆனா கண்டிப்பா வாழ்கையில பின்பற்றி நடந்டுராதிங்க.. பிரச்சனை ஆயிரும் ஆமா 🙂 )

திருமணம் என்பது ஒரு நல்ல ஏசி ஓட்டலுக்கு போய் அரைமணி நேரம் மெனு கார்ட உருட்டி , ஆடர் பண்ண சாப்பாடு வந்ததும் பக்கத்துக்கு டேபிள்ல பார்த்து “அத ஆர்டர் பண்ணிருக்கலாமோ” அப்படின்னு பீல் பண்றது 😉

ரெண்டாவது நாம குடி மக்களுக்காக…

நம்மை பற்றி நமக்கே தெரியாத பல ரகசியங்களை வெளியே கொண்டுவரும் ஆயுத தான்……………  சரக்கு


அப்புறம் கொஞ்சம் காதல் பத்தின தத்து பித்துவங்கள் 🙂

கவிதை என்பது – வார்த்தை தொகுப்பு …

காதல் என்பது – வயசு கொழுப்பு …..

அப்போ இந்த மாதிரி தத்துவங்கள் எல்லாம் அப்டேட் பண்றேன் .. அதுவரைக்கும்  BYE….

ரோட்ல போற பொண்ண பார்த்தா பொறுக்கின்னு சொல்றாங்க….

விட்டுக்கு போய் பொண்ண பார்த்தா .. மாப்பிள்ளைன்னு சொல்றாங்க ..

என்ன உலகமடா சாமி …

%d bloggers like this: