நான் ஒரு புத்தகப் புழுவா ??? April 19, 2009
Posted by anubaviraja in தமிழ், பிடித்தவை, புத்தகம்.Tags: ஈழத்தமிழர்கள், சுஜாதா, சுபா, தமிழ், புத்தகப் புழு, ரமணி சந்திரன், ராஜேஷ் குமாரோட, லக்கி லுக், லயன் காமிக்ஸ், DALE Carnegie
4 comments
எல்லாருக்கும் வணக்கம். தலைப்ப பாத்தோனே டரியல் ஆக கூடாது. என்னக்கு படிக்கிரதுனா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே புத்தகங்கள் தான் என்னோட உயிர் நண்பர்கள் . அதுக்காக தெருவுல போய் விளையாடுறதே இல்லியான்னு கேட்காதிங்க . பாதி நேரம் புத்தகம் .. மீதி நேரம் “வெயிலோடு வெளயாடி ….” தான்.
சின்ன வயசுல வெள்ளிகிழமைக்கு ஏங்கி இருந்து சிறுவர் மலர் படிச்சதும் , லக்கி லுக் , மாயாவி, லயன் காமிக்ஸ் , ராணி முத்து காமிக்ஸ் படிச்சதும். கொஞ்சிம் நாள் கழிச்சி எங்க அண்ணன் (பெரியப்பா பையன் ) கலெக்சன்ல இருந்து ஈழத்தமிழர்கள் , புலிகள் பத்தின புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன் . அப்புறம் அப்பிடியே எல்லா வார இதழ்களும் , மாத பத்திரிகைகளும் பழக்கம் ஆச்சி.
எனக்கு இன்னும் ஒரு வசதி என்னன்னா எங்க மளிகை கடைக்கு வர்ற பழைய புக் எல்லாம் படிக்கச் ஆரம்பிச்சேன். அதனால பைசா செலவு இல்லாம நெறைய புக்ஸ் நாவல் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன் .
ராஜேஷ் குமாரோட விவேக் , சுஜாதாவோட கணேஷ் வசந்த் , சுபா வோட பரத்-சுசிலா, பட்டுகோட்டை பிரபாகரோட கதைகள், பாலகுமாரனோட நாவல்கள், இந்திரா சௌந்தராஜனோட அமானுஷ்யம் இப்பிடி ஒருத்தர் விடாம படிக்க ஆரம்பிச்சேன்
கொஞ்ச நாள்ல எனக்கு ரமணி சந்திரன் நாவல் படிக்கிற வாய்ப்பு கெடைச்சது . அப்புறம் நான் அவங்களோட பேன் ஆயிட்டேன். இது வரைக்கும் அவங்களூட எல்லா நாவலும் படிச்சிருப்பேன்னு நெனைக்குறேன். அவங்க கதை ஒரு feel good factor . அநேகமா எல்லாருமே தலை சொன்ன மாதிரி “ரொம்ப நல்லவன்களா இருப்பாங்க” .. பினிசிங்கும் நல்லாவே இருக்கும் ( நம்ம வாழ்க்கையே சோகமா தான் போய்கிட்டு இருக்கு கதை முடிவாச்சும் நல்லா சந்தோசமா முடியட்டுமே 🙂 ). எல்லாருக்கும் அவங்க ஹீரோயின் கேரக்டர் தான் ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு ஹீரோ தான் ரொம்ப பிடிக்கும் 🙂 . ஒன்னு அவங்க ரொம்ப நல்லவனா இருப்பாங்க இல்லினா கிளைமாக்ஸ்ல திருந்தி நல்லவன்யிருவாங்க.
அப்புறம் எங்க ஊர் கிளை நூலகத்துல உறுப்பினர் ஆனதும் வாழ்க்கையே மாறிடுச்சி. சிறுகதை இலக்கியம் … அயல் நாடு கதைகள் … என்னுடைய வாசிப்பு உலகம் பெரிசா மாறிச்சி. தினம் ஒரு புத்தகம் படிச்சிட்டு மத்திடுவேன் .
அப்புறம் MBA செமினார் கிளாஸ் போகும் போது ப்ரொபசர் சொல்லி DALE Carnegie, Shiv kera, அப்புறம் நெறைய self improvement books எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன்.
ஆனா இங்க சென்னை வந்து ஒரு ஒன்றரை வருஷம் ஆகிபோச்சி. புத்தகம் படிக்கிற பழக்கம் ரொம்ப கொறைஞ்சி போச்சி 😦 . ஆனா நெறைய தமிழ் ப்ளாக் , அப்புறம் இன்டேர்நெட்ட மேஞ்சி அந்த கொறைய தீத்துகிறேன்