jump to navigation

2016 ல நம்ம ஆட்சி தான் May 12, 2011

Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நடந்தவை.
Tags: , , , , , , ,
9 comments

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தமிழ் நாட்டுல ரெண்டு கட்சி ஆட்சி தான் நடந்துகிட்டு இருக்கு – இப்ப மட்டும் உனக்கு ரொம்ப விவரம் தெரியுமான்னு கேட்க படாது …

அதாகப்பட்டது இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் 😦 (அய்யயோ நான் அந்த கருப்பு துண்டுகாரற சொல்லைங்கோ )

(more…)

Advertisements

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – நல்லா தான் இருக்கு May 8, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , ,
10 comments

வர வர சினிமா படம் எடுக்குரவங்க குறும்படம் எடுக்குரவங்க கலக்குறாங்க … இத பார்த்த உடனே .. நாமல்லாம் எவ்வளவு மக்கு பசங்களா இருக்கோம் அப்படின்னு நல்லா தெரியுதுல்ல??? ஓகே ஓகே என்சாய் 🙂 போய் புள்ளை குட்டிகளையாவது நல்லா படிக்க வைங்க

மன்மதன் அம்பு ட்ரைலர் – வந்தாச்சி November 15, 2010

Posted by anubaviraja in சினிமா, செய்திகள், ரசித்தவை.
Tags: , , , , , ,
4 comments

அன்பு பெரியோர்களே, இனிய தாய்மார்களே, அருமை நண்பர்களே , வந்துருச்சியா வந்துருச்சி… மன்மதன் அம்பு படத்தோட ட்ரைலர் ரிலிஸ் ஆயிரிசி..

 

கமல் பார்க்குறதுக்கு அப்படியே கலைஞன் படத்துல வர மாதிரியே இருக்கார் .. சில்லுன்னு த்ரிஷா , அன்பே சிவம் படத்துக்கப்புரம் கமல் கூட மாதவன் (Welcome Back Maddy 🙂 )

 

படத்துக்கு இப்போவே எதிர் பார்ப்பு ஜிவ்வுன்னு எகிறுது ..

 

டிசம்பர் வரைக்கும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே …

 

குவாட்டர் கட்டிங் .. ட்ரைலர் – இன்னொரு தமிழ் படம் ???? August 22, 2010

Posted by anubaviraja in சினிமா, தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , ,
8 comments

வணக்கம்ங்கோ… இது என்ன ட்ரைலர் சீசன் போல தெரியுது … நம்ம டேஸ்டுக்கு நெறைய படம் ரிலீஸ் ஆக போகுது  பாஸ் ….

தமிழ் படத்துல சென்ட்சுரி அடிச்ச கையோட சிவா “குவாட்டர் கட்டிங்” படத்துல களம் எரங்கிருக்கார்.. என்ன பண்ணுறார்ன்னு பார்க்கலாம்…

அவரோட பாடி லாங்குவேஜ் .. டயலாக் டெலிவரி இதெல்லாம் அடிச்சிக்க ஆளே கெடயாது .. இந்த படத்துல SPB சரண் கூட்டணி அமைசிருக்கார் ..  ட்ரைலர் தான் பாருங்களேன்.

அடடே ஆச்சிரியம் … SS Music Craig நடிச்சிருக்காரா ??? 🙂

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் .. எனக்கு என்னமோ படம் ஒரு மாஸ் ஹிட்டு ஆகும்ன்னு தோணலை .. நெறைய ஓரம்போ படாது சாயல் அடிக்கிது … கண்டிப்பா ரசிக்க வைக்கும் ஆனா ஒடுமான்னு தெரியலை …

பஞ்ச் :  சுந்தர் ராஜன்  (சிவா தான்) தன்னோட பேர சுறான்னு சுருக்கி வச்சி கிட்டேன்ன்னு சொல்லுறார் பா .. ஹ்ம்ம் .. விஜய் ரொம்ப பாவம் 😉 😉

ராவன் படத்தோட ட்ரைலர்… May 2, 2010

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
1 comment so far

நான் ரொம்ப ஆவலோட எதிர்பாக்குற படங்கள்ல இதுவும் ஒண்ணு. தளபதி படத்துல மகாபாரத கதைய எடுத்து ஒரு நல்ல படத்த குடுத்த மணிரத்னம் இந்த படத்த எப்படி எடுதுருக்கார்ன்னு பார்க்கலாம் :). அப்புறம் நமக்கு ஹிந்தில பிடிச்ச ஹீராகல்ல ஒருத்தரான அபிஷேக் பச்சன் வேற நடிக்கிறார் , விக்ரம் முதல முதல்ல ஹிந்தில நடிக்கிறார் … இப்படி படத்து மேல பல எதிர்பார்ப்புகள் …

அப்புறம் இன்னொரு விஷயம் இந்த மலை மேல இருந்து குதிக்கிற சீன்ல டூப் போடாம அபிஷேக் அவரே குதிச்சாராம்… ம்ம்ம்… அவரே ரொம்ப உயரம் .. அதுனால பயம் இருந்திருக்காதோ?? 😉

விக்ரம் நீங்க என்ன பண்ணிருக்கிங்க?? தமிழ் ட்ரைலர் பார்க்க ஆவலோட இருக்கோம்…

புலி உறுமுது … புலி உறுமுது … December 20, 2009

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , ,
4 comments

விஜய் ரொம்ப பாவம்.. ஒரு அருமையான படம் நடிச்சி .. அத எல்லாரும் பாராட்டலைனாலும் பரவால்லை. என்னமா கிண்டல் பண்ணுறாங்க .. இப்பிடி தான் எனக்கு போன வாரம் ஒரு SMS  வந்திச்சி …

“விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட….
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!”.

என்னங்க இது சின்ன புள்ளைதனமா…

அதாவது பரவாஇல்லை… இத வீடியோவ  பாருங்க …

இத பார்த்ததும் கவுண்டமணி எவ்வளவு பீல் பண்ணுவாரு 😉

%d bloggers like this: