jump to navigation

மக்கா மதுரைக்கு வந்துட்டோம்ல…. March 18, 2010

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை, மதுரை.
Tags: , , , ,
2 comments

சிங்கார சென்னைல  ஒரு ரெண்டரை வருஷம் வேலை பார்த்து முடிச்சாச்சி. இப்போ மதுரையிலேயே ஒரு கம்பெனியில வேலை கெடைச்சி (சென்னைல என்ன வேலை பார்த்தேனோ அதே வேலை தாங்க – சென்னைல மட்டும் நீ என்ன விழி பார்த்து கிழிச்ச அப்படிங்கற உங்க மைன்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன் ) இங்க வந்து செட்டில் ஆயாச்சி.

இங்க வந்து நான் இன்டர்நெட் connection வாங்குறதுக்கு பட்ட பாட இன்னொரு போஸ்ட் போடணும் 😦 . ஒரு வழியா பாச்சிலருக்கு  மட்டும் வீடு குடுக்குற விட்டுக்காரர மதுரைல தேடி கண்டு பிடிச்சி, வாரநாட்கள்ல மதுரைலயும், சனி ஞாயிறு சாத்துர்லையும் பொழுது நல்ல போகுது. என்ன… சென்னையையும் சென்னை மக்களையும் ரொம்ப மிஸ் பண்ணிறேன். இங்க இது வரைக்கும் தனியா தான் இருக்கேன் , கூடிய சிக்கிரம் ஒரு ரூம் மேட் கண்டுபிடிக்கணும்.

மதுரைல நான் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் “பைக் ஓட்டுறது ” . (ஏற்கனவே எனக்கு அரை கொறையா தான் ஒட்டதெரியும் அப்படிங்கறது வேற விஷயம் 😉 ) உசிர கைல பிடிச்சிகிட்டு தான் ஓட்ட வேண்டியது பாஸ்.. திடீர்  திடிர்ன்னு சைக்கிள் , கை வண்டி , பாத சாரிகள் இப்படின்னு பாரபட்சம் பார்க்காம குறுக்க புகுந்டுட்றாங்க. அப்புறம் இந்த சிக்னல் அப்படின்னு ஒன்னு ரோட்ல இருக்கு அத பல சமயம் யாருமே மதிக்க மாட்டிக்கிறாங்க. ரைட் விடுங்க .. இது ஏற்கனவே நம்ப தலை சொன்ன மாதிரி இது “ரத்த பூமி தான.. ”   .

போக்குறதுக்கு பொழுது நெறையா இருக்குறதுனால இனிமே என்னோட பதிவுகள் அப்படிங்கற இம்சைகல அடிக்கடி சந்திக்க தயாரா இருங்க ..
வர்ட்டா.. 😉

Advertisements

SMS படிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்…. June 28, 2009

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , ,
6 comments

ஷப்பா … இன்னும் நமக்கு SMS விடாம அனுப்பிகிட்டு தான் இருக்காங்க … இந்த வார ஸ்பெசல் ….

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா
பெத்தவங்க  சொல்லுறாங்க
யாருடி அந்த பரதேசி நாயி??

ஒரு பையன்  வாந்தி எடுத்தா
பெத்தவங்க  சொல்லுறாங்க
பரதேசி நாயி குடிச்சிட்டு வந்து
வாந்தி எடுக்குது பாரு ….

அட போங்க யா யாரு வாந்தி எடுத்தாலும்
பசங்கள தன திட்டுறாங்க

நியாயம்  தான பாஸ் ….

———————-

காதல் தோல்விக்கு அப்புறம்
எல்லாரும் சொல்லுற ஒரு அருமையான வரி

…..

…..

…..

மச்சி ஒரு quarter சொல்லேன் …..

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை .. 😉

——————————–

உங்கள பத்தி நினைக்கும் போது
உங்க SMS பார்த்துக்குறேன்
உங்கள பாக்கணும் போல இருக்கும் போது
கண்ணா மூடிக்கிறேன் ..
உங்க குரல கேக்கணும் போல இருக்கும் போது
……

……

ஒரு நாய் மேல கல்ல விட்டு எறியுறேன்

ரைட் … அட்டாக் பாண்ணுரிங்கள்ள … குதிச்சிறு  கை பிள்ள ….

இன்னும்  நல்லா மலாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சி எனக்கு SMS அனுப்புங்க பா ….

சென்னை அனுபவங்கள் பார்ட்-1 June 21, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
Tags: , , , , , ,
3 comments

எல்லாருக்கும் வணக்கம் … நான் சென்னை வந்து ஒரு ரெண்டு வருஷம் ஆக போகுது . சரி பயபுள்ள ஊரு  பூராம்   சுத்திருப்பான்னு நிங்களா கற்பனை பண்ணினிங்கனா அதுக்கு நான் பொறுப்பு கெடயாது ஆமாம். நான் சுத்தி பார்த்த எடங்களும் சிச்சிவேசனும் தான் இந்த போஸ்ட்.

மெரினா பீச்:

ஏற்கனவே எட்டங்க்லாஸ் படிக்கும் போது  அம்பது பைசாக்கு ஐஸ்கிரீம்ன்னு  சொல்லி அஞ்சம்பதுன்னு ஏமாத்தின ஏரியா அதுனால இந்த தடவை எச்சரிக்கையா தான் போனேன் . மொத தடவை தனியா போகலையே … அண்ணா சமாதிக்கு பஸ் ஏற போனதோட சரி , பீச் பக்கம் போகலியே , அப்புறம் அண்ணன் (பாலாஜி) , ரூம் மேட் & நண்பர்களோட முதல் தடவை போனேன்.    அப்புறம் நைட் shift பார்க்கும் போது  பாலாஜிக்கும் எனக்கும் shift ஒரே நேரத்துல முடிஞ்சிரும் அடிக்கடிஅதிகாலை அஞ்சி மணிக்கு பீச் லைட் ஹவுஸ் கிட்ட போய் நல்லா பொழுது விடியிற வரைக்கும் நிப்போம் 🙂 .

சமீபத்துல ஒரு தடவை  weekend ரொம்ப போர் அடிச்சி மதியம் 12 மணிக்கு உச்சி வெயிலில  பீச் போனது ஒரு சுவாரசிய அனுபவம் அடுத்த போஸ்ட்ல அத பத்தி பேசலாம்

ஸ்பென்செர் பிளாசா :

எல்லாரும் இங்க எதுக்காக முதல் தடவை போனங்கன்னு எனக்கு தெரியாது , நான் போனது ஒரு இண்டர்வ்யுகாக. எல்லா ரவுண்டும் clear பண்ணி  கடைசில சொதப்பி வேலை வாய்ப்பு போன எடம் . அதுக்கப்புறம் பையில முப்பத்தஞ்சி ருபாய்  மட்டும் வச்சிக்கிட்டு ரெண்டு தடவை ஸ்பென்செர் போயிட்டு வந்துருக்கேன் .

சிட்டி சென்டெர் :

அட என்னப்பா இது , இங்கயும் முதல் தடவை நான் போனது ஒரு கால் சென்டெர்  இண்டர்வ்யுகாக. அதுவும் புட்டுகிசின்னு வச்சிகொங்களேன். சென்னைக்கு வந்த புதுசு அது , இப்படி ஒரு உலகம் இருக்குமான்னு என்னையே கிள்ளி பார்த்துகிட்டேன் . அதுக்கப்புறம் அந்த பக்கம் தலை வச்சி இன்னும் படுக்கலை.

பெசன்ட் நகர் பீச் :

இங்க என்னோட ரூம் மேட் தான் கூட்டிட்டு போனாரு , ஆனா அப்பிடியே பைக்க விட்டு கேள ஏறக்காம கூட்டிட்டு   வந்துட்டாரு . கேட்டா நீ சின்ன பைய்யன் கண்டது கழுதய பாத்து கண்ணுகல கெடுத்துகாதன்னு சொல்லிட்டாரு . அய்யா சென்னைவாசிகளே  அங்க அப்பிடி என்ன தான் நடக்குது ?

மத்த எடங்கள அடுத்த போஸ்ட் ல பார்ப்போமா ?? இப்போதைக்கு ஜூட் 🙂

%d bloggers like this: