jump to navigation

Y This கொலவெறி #Kolaveri – ஒரு பின்நவீனத்துவ பார்வை November 25, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
5 comments

அன்பார்ந்த மக்களுக்கு … இப்போ எங்க பார்த்தாலும் ஒரே கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உளமார்ந்த கடுப்புடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் ..

அது ஒன்னும் இல்லங்க .. நம்ம தலிவரோட பொண்ணு டைரக்ட் பண்ணி, அவரோட மருமகன் ஹீரோவா நடிக்க, ஒலக நாயகன் கமலோட கலை வாரிசு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிச்சி 3 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க ..

அந்த படத்தோட ஒரு பாட்டு இன்டர்நெட்ல லீக் ஆயிருச்சி.. சரி மத்தவங்களா இருந்தா லபோதிபோன்னு புலம்பி எல்லா எடத்துலயும் காபிரைட் பிரச்சனைய கெளப்பி பாட்ட தூக்கிருப்பாங்க .. இவங்க கொஞ்சம் வித்யாசமா யோசிச்சி அதையே ஒரு வீடியோவா எடுத்து ஒரு சிங்கிள் ஆல்பமா ரிலீஸ் பண்ணி ஒரு பரபரப்ப உருவாக்கிட்டாங்க.. (ஒரு விளம்பரம் … 😉 ) இதோ அந்த வீடியோ … உங்களுக்காக

(more…)

Advertisements

தமிழ் படம் பாத்தாச்சிங்கோ… January 30, 2010

Posted by anubaviraja in சினிமா, சென்னை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , ,
1 comment so far

அடடடா .. என்ன ஒபெநிங் படத்துக்கு .. திங்கள் கிழமை வரைக்கும் ஆன்லைன் புக்கிங்  எல்லா தியேட்டர்லயும்  புல் …  ( கொஞ்சம் ஓவரா தான் டிவி ல விளம்பரம் பண்ணிட்டாங்களோ ?? )

ஆஹா ரஜினி  படத்து ஒபெநிங் மாதிரி அளப்பறைய குடுக்குராங்கலேன்னு சரி எந்த தியேட்டர்ல டா டிக்கெட் இருக்கும்னு பார்த்துட்டு அபிராமி ல புக் பண்ணினோம் …

பரவயில்லை வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாம காமெடி பண்ணிருக்காங்க 🙂 . சிவா – இவர தவிர இந்த படத்துக்கு வேற யாரையும் ஹீரோவா நெனைச்சி பார்க்க முடியல … அவரோட பாடி லாங்குவேஜ் டயலாக் டெலிவரி … ம்ம்ம் .. பின்னி பெடல் எடுத்துட்டார் …

இந்த படத்துல .. இந்த சீன தான் கலாய்க்க போறங்கன்னு தெரியும் … ஆனா எப்படி கலாய்க்க  போறாங்கன்னு உங்களால யூகிக்க முடியாது .. அது தான் டைரக்டரோட வெற்றி . கொஞ்சம் சொதப்பிருந்தாலும் லொள்ளு சபா மாதிரி ஆயிருக்கும் . டைரக்டர் லியோநியோட மருமகனாம்ல .. மாமா பேர காப்பாத்திட்டார் .. ( சினிமாவ கேலி பண்ணுறதுல தான் ) .. ஆனாலும் ரஜினி – விஜய் மேல உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி 😉

இண்டர்வலுக்கு முன்னாடி படம் சரியான வேகம் .. அப்புறம் கொஞ்சம் மொக்கை தான் … இருந்தாலும் பரவாஇல்லை …. தமிழில் ஒரு SCARY MOVIE பார்த்த எபெக்ட் .. ( ஏற்கனவே நமக்கு அந்த மாதிரி படம் ரொம்ப பிடிக்கும் அப்டிங்கறது வேற விஷயம் 😀 )

படத்தில நான் ரசித்தவை …

  • வெண்ணிறாடை மூர்த்தி , பாஸ்கர் , மனோ பாலா – அவங்களோட பேர் ( பரத் , நகுல், சித்தார்தாம் 🙂
  • ஹட்ச் விளம்பரத்த கூட விட்டு வைக்கலை
  • காபி குடிக்கிற கேப்ல  ஹீரோ முன்னேறுற பாட்டு
  • குறிப்பா அந்த rape சீன் (கண்ணா பின்னான்னு கற்பனைய அலையை விடாதிங்க .. படாத போய் பாருங்க 😉 )
  • சினிமா பட்டி – நாட்டாமை – கள்ளி பால் – கிராமத்து சினிமா  சூப்பர்ப்பு…
  • பாமிலி சாங் பாடி ஒன்னு சேருற இடத்துல .. MLTR –  SOMEDAY பாட்டு போட்டது

இப்பிடி அடுக்கி கிட்டே போகலாம் . படம் கண்டிப்பா ஒருதடவை பார்க்க வேண்டியது தான் .. சிவாவ தவிர வேற யார ஹீரோ வா போட்டிருக்கலாம் ???

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நம்ப அஞ்சாநெஞ்சன் அண்ணனோட பையன்  மட்டும் படத்த தயாரிக்கலைன்னா படம் ரிலீஸ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்ட பட்ட்ருக்கும்கோ …

%d bloggers like this: