jump to navigation

உன்னை போல் ஒருவன் – என்னை போல் இல்லைங்க – நல்லாருந்திச்சி September 27, 2009

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை.
Tags: , ,
6 comments

ஏற்கெனவே “வெட்னெஸ்டே” படத்தைத் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை.

மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை சதாய்க்கும்போது, அதிகாரிகளை வழிநடத்தும்போது, கலக்கிங்க சாரே… லட்சுமி – தலைமைச் செயலர். முதல்வரிடம் பேசும் போது பம்முகிறார். மோகன்லாலிடம் எகிறுகிறார். இளம் போலீஸ் ஆஃபீசராக வரும் அந்த இருவரும் துடிப்பாக இருக்கிறார்கள். டிவி ரிப்போர்ட்டராக வரும் அந்தப் பெண் யாரையாவது முறைத்துக்கொண்டே இருக்கிறார். கேப் கிடைத்தால் தம்மடிக்கிறார். அவ்வளவுதான்…. கமல் – நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? இது நடிகரின் படமாக இல்லாமல் கதையின் படமாக இருக்கும். அதற்காகவே கமலுக்கு நன்றிகள்.

கிளைமாக்ஸ் – நஸ்ருதீன் ஷா க்கு இந்த charecter சூட் ஆனா மாதிரி தெரியல இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஹிந்தியில் இந்தப் பாத்திரத்தின் வயது. கமலை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கமுடிகிறது. நஸ்ருதீன் ஷா இந்தக் காரியத்தை செய்யக் காரணமாயிருந்தது பயம். உயிரோடு இருக்கவேண்டுமே என்ற சாமானியனின் பயம். தமிழில் அப்படியில்லை. அதனாலும் கமல் ஒரு ஹீரோவாகத்தான் தெரிகிறார். அப்புறம் முதல்வர் குரல் கலைஞர் குரல் போல இல்லை? அவரையும் கலாய்த்திருக்கிறார்கள். உன்னிப்பாகக் கவனியுங்கள்.

படத்துல பாட்டு எப்படி வரும்னு யோசிச்சிகிட்டே தான் போனேன் – பாட்டே இல்லாம எடுத்து இன்னும் சூப்பர். பாட்டெல்லாம் சூப்பர் மேடம் , கலக்கிடிங்க. நடிகர் அரசியலில் குதிப்பதும் பாதுகாப்புக் கேட்டு பந்தா பண்ணுறதுன்னு வரும் ஸ்ரீமன் – ஒரே கல்லில் ரெண்டு மாங்கா ?விஜய் பார்த்தால் கிடைக்கும் இடத்தில் தூக்கில் தொங்கலாம்.. கமல் படத்திலே இதை நான் எதிர்பார்க்கவில்லை.. ஆனா கொடுக்கவேண்டிய நோஸ் கட் தான்.. 😉

இறுதிக் காட்சியில் வரும் கம்பியூட்டர் இளைஞன் – சதிலீலாவதி சின்ன பய்யன் – ஆனந்து — தம்பிய் ஆனந்து ….

வித்யாசம் :

  • ஹீரோயின் இல்ல
  • குத்து பாட்டு இல்ல
  • படம் ரெண்டு மணி நேரத்துக்கும் கம்மியா தான் ஓடுது
  • ஹீரோஇசம் இல்ல

ஆனா நல்ல்ல படம் ! போய் பாருங்க….

உன்னைப்போல் ஒருவன் – கமல் போல் ஒருவன் (சான்ஸ் இல்லிங்கோ 🙂 )