jump to navigation

துன்பம் தொலைப்பது எப்படி??? April 30, 2010

Posted by anubaviraja in தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , ,
8 comments

திரும்பவும் ஒரு குட்டி கதை… நீ என்ன பெரிய ரஜினியா ?? இல்லை பாக்யராஜா?? ஒரே குட்டி கதையா சொல்லிக்கிட்டு இருக்கியே ? அப்படின்னு கேக்க ப்ப்டாது .. அவங்கள நிறுத்த சொல்லுங்க .. நானும் நிறுத்துறேன் … (எனக்கு SMS அனுப்புரவங்கள சொன்னேன் 😉 )

சரி கதைக்கு  போவோம் … இது கொஞ்சம் வன்முறையான கதை .. அதனால கொஞ்சம் ரத்த வாடை வீசும் .. பரவல்லையா ??? ( பில்ட் அப் போதும் கதைய சொல்லுடா அப்படின்னு சொல்றிங்களா ?? ரைட் ஓகே … )

ஒரு ஊருல  …. (யோவ் .. அப்படி கதை சொல்ல ஆரம்பிக்கிறது தானய்யா உலக வழக்கம் அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி ??? ) சரி … நான் கண்டினியூ பண்றேன் … ஒரு ஊருல ஒரு பெரிய பேங்க் இருந்திச்சாம் .. அதுல ஏகப்பட்ட பணம் புலன்கிகிட்டு இருந்திச்சாம் .. இத கேள்வி பட்டு அந்த பேங்க் இருக்குல்ல பேங்க் ,… (ஆமாடா .. ஆமா.. அப்ப்டிங்க்ரின்களா ??? .. கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கேனோ?? ) ரைட் … பாக் டு தி ஸ்டோரி ….

அந்த திருடன் பேங்க்க கொள்ளை அடிக்க துப்பாக்கியோட உள்ள புகுந்துட்டான் … கிட்டத்தட்ட ஒரு கோடி தேறும் .. கொள்ளை அடிச்சிட்டு திரும்பி போனான் .. அப்ப ஒரு பய புள்ளை கிடு கிடுன்னு நடுங்கிகிட்டு நின்னுகிட்டு இருந்தான்.. திருடன் அவன் கிட்ட வந்தான் … “டே .. நான் இந்த பங்க்க கொள்ளை அடிச்சத பாத்தியா ?? ” அப்படின்னு கேட்டான்..

இந்த பயலுக்கு தான் நாக்குல சனியாச்சே.. “ஆமா பார்த்தேன்னு” சொன்னான் (பெரிய ஹரிச்சந்திரன் வாரிசு 🙂 ) துப்பாக்கிய எடுத்தான் பொட்டுன்னு அவன போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருந்தான் ..

அப்புறம் முன்னாடி ஒரு புருசனும் பொண்டாட்டியும் நின்னுக்கிட்டுருந்தாங்க , அவன் நேரா புருசன் காரன்கிட்ட போய் … “யோவ் .. நான் பாங்க கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா ?? ” அப்டின்னு கேட்டான் .. புருசன்காரன் கொஞ்ச நேரம் யோசிச்சான் .. அப்புறம் சொன்னான் ..

“திருடன் சார்…  திருடன் சார்… நான் பாக்கல… ஆனா என் பொண்டாட்டி பார்த்தா… ”

பயபுள்ளை எப்புடி கோர்த்து விட்டான் பார்த்திங்களா ?? அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை … கல்யாணம் ஆனவனுக்கு அது ஒன்னு தான் பிரச்சனை ;)… மீண்டும் சந்திப்போமா ???

புத்திசாலி முதலாளியும் .. அப்புராணி வேலைக்காரர்களும்… April 29, 2010

Posted by anubaviraja in குட்டி கதைகள், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , ,
7 comments

ஒரு குட்டி நீதி கதை .. (கதை சொல்ல ஆரம்பிசிட்டநேன்னு மானிட்டர மோதக்கொண்டு தூக்கிட்டு எஸ்கேப் ஆக கூடாது ஆமா… குட்டி கதை தான் …. )

ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம் நல்ல படியாதான் போய்கிட்டு இருந்துச்சி…

ஒரு நாள் அந்த முதலாளி பாக்டரி குள்ள ரௌண்ட்ஸ் வந்தாராம் … அப்போ ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..

அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவன எழுப்பினார் .. “தம்பி நீ மாசம்  எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் ”  அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பர்ச எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் குடுக்க்ரதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு  நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக் 😉 ) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. ”

இது எப்படி இருக்கு … எச்சி கிளாஸ் எடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு தெரியுமா ???

நீகேளேன் … மச்சான் .. நீகேளேன் … அண்ணே .. நீங்க கேளுங்களேன் 🙂 ….

S.M.S. தத்துவங்கள் பாகம் – 1 April 28, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , ,
10 comments

நம்ம பசங்க நெறைய தத்துவ SMS எல்லாம் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. அதுல எனக்கு பிடிச்ச கொஞ்சம் தத்துவங்கள லிஸ்ட் பண்ணிருக்கேன்.. பாருங்க (ஆனா கண்டிப்பா வாழ்கையில பின்பற்றி நடந்டுராதிங்க.. பிரச்சனை ஆயிரும் ஆமா 🙂 )

திருமணம் என்பது ஒரு நல்ல ஏசி ஓட்டலுக்கு போய் அரைமணி நேரம் மெனு கார்ட உருட்டி , ஆடர் பண்ண சாப்பாடு வந்ததும் பக்கத்துக்கு டேபிள்ல பார்த்து “அத ஆர்டர் பண்ணிருக்கலாமோ” அப்படின்னு பீல் பண்றது 😉

ரெண்டாவது நாம குடி மக்களுக்காக…

நம்மை பற்றி நமக்கே தெரியாத பல ரகசியங்களை வெளியே கொண்டுவரும் ஆயுத தான்……………  சரக்கு


அப்புறம் கொஞ்சம் காதல் பத்தின தத்து பித்துவங்கள் 🙂

கவிதை என்பது – வார்த்தை தொகுப்பு …

காதல் என்பது – வயசு கொழுப்பு …..

அப்போ இந்த மாதிரி தத்துவங்கள் எல்லாம் அப்டேட் பண்றேன் .. அதுவரைக்கும்  BYE….

ரோட்ல போற பொண்ண பார்த்தா பொறுக்கின்னு சொல்றாங்க….

விட்டுக்கு போய் பொண்ண பார்த்தா .. மாப்பிள்ளைன்னு சொல்றாங்க ..

என்ன உலகமடா சாமி …

கோர்ட்டில் நித்தியானந்தாவின் வக்கீல் பரபப்பு வாதம் … April 22, 2010

Posted by anubaviraja in சென்னை, நகைச்சுவை, நடந்தவை.
Tags: , ,
15 comments

கைது செய்ய  பட்ட நித்யானந்தா சென்னை ஹை கோர்ட்டில் ஆஜர் செய்ய பட்டார் … அப்பொழுது அவருடைய வழக்கறிஞர் எடுத்துரைத்த வாதம் பின்வருமாறு …

(more…)

நித்யானந்தா இந்த SMS எல்லாம் படிச்சார்ன்னா… April 4, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: ,
2 comments

ஒரு சாமியார் சிக்கினாலும் சிக்கினாரு விஜய விட்டுட்டு இவர பத்தி எல்லாரும் SMS அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க … கொஞ்சம் சாம்பிள் பாருங்களேன் ,

திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணை மட்டும் சந்தோச படுத்தாதீர்கள்
பாச்சிலராக இருந்து பல பெண்களை திருப்தி படுத்துங்கள் – சுவாமி நித்யானந்தா

விளக்கேற்ற நல்ல பெண்ணை தேடி அலைவதை விட ,
கிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைப்பதே நன்று .. – சுவாமி நித்யானந்தா

இன்னும் நெறைய வந்திச்சி .. அதேல்லாம் இப்படி பப்ளிக் place ல வச்சி சொல்ல முடியாது .. அப்புறம் சந்திப்போம்

SMS ல வந்த வில்லங்கமான கதை… April 3, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , ,
add a comment

அப்புறம் இந்த பயபுள்ளைக  சும்மா இருக்காம நமக்கு  SMS ல கதை எல்லாம் அனுப்பி கிட்டு இருக்குறாங்க. என்னோட போன்ல 50 SMS ஸ்டோர் பண்ணுறதுக்கு தான் option  இருக்கு .. என்ன செய்றது இந்த மாதிரி கலக்கலான SMS எல்லாம் வந்தா DELETE பண்ண மனசு இல்லாம இன்பாக்ஸ் நிரம்பி வழியுது 🙂

கதை 1 :
எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் , ரெண்டு பேர் கூட்டத்துல அவங்க பொண்டாடிய காணோம்ன்னு தேடி கிட்டு இருக்காங்க ..  அதுல முதல் நபர் கேக்குறார் “உங்க பொண்டாட்டி எப்படிங்க இருப்பாங்க”??

இன்னொருத்தர் பதில் சொல்லுறார் “சிகப்பா , ஒல்லியா, நல்ல ஸ்டைலா கும்முன்னு இருப்பா … சுருக்கமா சொன்னா அவ ஒரு சூப்பர் பிகர் ( 😉 கடைசி வரி தலைவர் டைலாக் ) ஆமா உங்க பொண்டாட்டி எப்படி இருப்பாங்க ?? ”

அடுக்கு அவர் சொன்னாரு ” அவல பத்தி இப்போ என்ன சார் பேச்சு .. வாங்க முதல்ல உங்க பொண்டாட்டிய தேடுவோம் ”

இது எப்படி இருக்கு ??? .. இன்னொரு கதையோட நாளைக்கு சந்திப்போம் …