jump to navigation

புன்னகையில் புது உலகம் May 18, 2013

Posted by anubaviraja in Uncategorized.
1 comment so far

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் எனது புதிய Nexus 4 போன் மூலம் பதிவெற்றப் பட்டது. 😉 ஒரு விளம்பரம் 🙂

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போது பேருந்து பயணம் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.. அப்படி ஒரு கொடுமையான அனுபவத்தை பெற பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தேன்.

image

எங்கள் தெரு பிரதான சாலையில் சந்திக்கும் இடம். இரண்டு குட்டி நண்பிகள் பேசி சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். கொளுத்தும் வெயிலில் இப்படி குதித்து குதுகலமாய் இரு அணில்களை போல போவதை பார்ப்பது மிகவும் இனிமையாய் இருந்தது.

வேகமாக சென்ற சைக்கிள் பிரதான சாலையை கடக்கும் போதும் கட்டுப்பாடு இல்லாமல் செல்வதை பார்த்து அதிர்ந்து நிற்ப்பதர்க்குள், அது நடந்து விட்டது.. குறுக்கே வந்த மாருதி ஆம்னி ஒரு சடன் பிரெக் அடித்து நின்றே விட்டது.. நண்பிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்து நிற்க்க, அந்த காருக்குள்ளே இருந்து ஒரு மத்திய வயதுக்காரர் எட்டி பார்த்தார். அவ்வளவு தான், இருவரயும் திட்டி தீர்க்க போகிறார் என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்..

ஆனால் பேரதிசயமாய் அவரிடமிருந்து ஒரு புன்னகை கீற்று.. “பிரேக் பிடிக்கலயா” என்று கேட்டார். இரு தோழியரும் ஆமொதிப்பாய் தலை அசைக்க, “பாத்து போகணும், சரியா?” என சொல்லிய படி காரை நகர்த்தினார். முன்னிருக்கயில் இருந்த ஒரு பெண் , அவர்களை பார்த்து புன்னகைக்க, இந்த சைக்கிள் அழகிகள் தெற்றுப் பல் தெரிய சிரிக்க, ஒரு கணம் உலகம் அவ்வளவு அழகாகிப் போனது… சிரித்துக் கொண்டே நானும் நடையை கட்டினேன். புன்னகை தான் எவ்வளவு அபாயகரமான தொற்று நோய்.:)

Spread Smiles!!