jump to navigation

லாப் டாப் களவாணியும்.. அவனோட நேர்மையும்.. November 11, 2010

Posted by anubaviraja in செய்திகள், தமிழ், நடந்தவை.
Tags: , , , ,
3 comments

மக்கா ரொம்ப நாள் ஆச்சி உங்கள எல்லாம் சந்திச்சி .. அதுனால இனிமே அடிக்கடி மீட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இங்க ஊருக்குள்ள எல்லா பயலுகளும் செல் போன் வச்சிருக்குற மாதிரி பாரின்ல எல்லா பக்கிகளும் லாப் டாப் வச்சி கிட்டு தான் அலையுவங்க . இங்க கூட நெறைய ஐ டி கம்பனில எல்லார் தலையிலையும் ஒன்னொன்னு கட்டி விட்டுடுறாங்க . அத போற்றி பாதுகாக்குரதுகுள்ள எல்லாரும் கண்ணு முழி பிதுங்கி அலையிறாங்க 😉 நம்ப ஊருல தான் திருடர்கள் ஜாஸ்தி ஆச்சே ..

ஆனா வெளி நாட்டுலயும் திருட்டு பசங்க இருக்க தான் செயிரங்க. இப்படி தான் ஸ்வீடன் நாட்டுல ஒரு காலேஜ் ப்ரோபாசர் லாப்டாப்பை ஒரு களவாணி பய ஆட்டைய போட்டுட்டான்… ஆனா பாருங்க பயபுள்ள நேர்மைக்கு பொறந்தவன் போல , லேப்டாப் ல இருந்த முக்கியமான டேட்டா எல்லாத்தையும் பேன் டிரைவ்ல காப்பி பண்ணி அனுப்பி வச்சிருக்கான் ப்பா …

அவன யாராவது ரொம்பபபபபப………. நல்லவன்னு சொல்லிருப்பாங்கலோ???

 

பட் அவனோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . விசயத்த முழுசா  படிக்க இங்க கிளிகுங்கோ

துன்பம் தொலைப்பது எப்படி??? April 30, 2010

Posted by anubaviraja in தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , ,
8 comments

திரும்பவும் ஒரு குட்டி கதை… நீ என்ன பெரிய ரஜினியா ?? இல்லை பாக்யராஜா?? ஒரே குட்டி கதையா சொல்லிக்கிட்டு இருக்கியே ? அப்படின்னு கேக்க ப்ப்டாது .. அவங்கள நிறுத்த சொல்லுங்க .. நானும் நிறுத்துறேன் … (எனக்கு SMS அனுப்புரவங்கள சொன்னேன் 😉 )

சரி கதைக்கு  போவோம் … இது கொஞ்சம் வன்முறையான கதை .. அதனால கொஞ்சம் ரத்த வாடை வீசும் .. பரவல்லையா ??? ( பில்ட் அப் போதும் கதைய சொல்லுடா அப்படின்னு சொல்றிங்களா ?? ரைட் ஓகே … )

ஒரு ஊருல  …. (யோவ் .. அப்படி கதை சொல்ல ஆரம்பிக்கிறது தானய்யா உலக வழக்கம் அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி ??? ) சரி … நான் கண்டினியூ பண்றேன் … ஒரு ஊருல ஒரு பெரிய பேங்க் இருந்திச்சாம் .. அதுல ஏகப்பட்ட பணம் புலன்கிகிட்டு இருந்திச்சாம் .. இத கேள்வி பட்டு அந்த பேங்க் இருக்குல்ல பேங்க் ,… (ஆமாடா .. ஆமா.. அப்ப்டிங்க்ரின்களா ??? .. கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கேனோ?? ) ரைட் … பாக் டு தி ஸ்டோரி ….

அந்த திருடன் பேங்க்க கொள்ளை அடிக்க துப்பாக்கியோட உள்ள புகுந்துட்டான் … கிட்டத்தட்ட ஒரு கோடி தேறும் .. கொள்ளை அடிச்சிட்டு திரும்பி போனான் .. அப்ப ஒரு பய புள்ளை கிடு கிடுன்னு நடுங்கிகிட்டு நின்னுகிட்டு இருந்தான்.. திருடன் அவன் கிட்ட வந்தான் … “டே .. நான் இந்த பங்க்க கொள்ளை அடிச்சத பாத்தியா ?? ” அப்படின்னு கேட்டான்..

இந்த பயலுக்கு தான் நாக்குல சனியாச்சே.. “ஆமா பார்த்தேன்னு” சொன்னான் (பெரிய ஹரிச்சந்திரன் வாரிசு 🙂 ) துப்பாக்கிய எடுத்தான் பொட்டுன்னு அவன போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருந்தான் ..

அப்புறம் முன்னாடி ஒரு புருசனும் பொண்டாட்டியும் நின்னுக்கிட்டுருந்தாங்க , அவன் நேரா புருசன் காரன்கிட்ட போய் … “யோவ் .. நான் பாங்க கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா ?? ” அப்டின்னு கேட்டான் .. புருசன்காரன் கொஞ்ச நேரம் யோசிச்சான் .. அப்புறம் சொன்னான் ..

“திருடன் சார்…  திருடன் சார்… நான் பாக்கல… ஆனா என் பொண்டாட்டி பார்த்தா… ”

பயபுள்ளை எப்புடி கோர்த்து விட்டான் பார்த்திங்களா ?? அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை … கல்யாணம் ஆனவனுக்கு அது ஒன்னு தான் பிரச்சனை ;)… மீண்டும் சந்திப்போமா ???