jump to navigation

எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… May 13, 2011

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
11 comments

எலக்சன் ரிசல்ட் ஒரு வழியா முடிஞ்சி அம்மாவோட பசுமை அலை எங்கயும் வீச ஆரம்பிசிரிச்சி … தாத்தாவுக்கு டாட்டான்னு ட்விட்டர் ல HashTag எப்போ ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு இப்படி தான் இருக்கும்ன்னு  நெனச்சேன் …

(more…)

பத்தாயிரம் ரூபாய் கட்டும் – பத்து வயசு பையனும் May 13, 2011

Posted by anubaviraja in குட்டி கதைகள், தமிழ், நகைச்சுவை.
Tags: , , , , ,
2 comments

குட்டி கதை சொல்லி ரொம்ப நாள் ஆகி போச்சி , இன்னிக்கு கண்டிப்பா சொல்லி தான் ஆகணும் … மேல படிங்க … (அட மேலன்னா மேல பார்க்கப்டாது… )

ஒரு ஊருல ஒரு பேங்க் இருந்திச்சாம் .. அந்த பேங்க்ல பணம் கட்ட போன ஒருத்தர் அவரோட பையனையும் கூட கூட்டிட்டு போயிருக்கார்

அந்த பய திடீர்னு – ” இங்க யாரவது செகப்பு ரப்பர் பேண்ட் மாட்டின ருபாய் கட்ட கீழ போட்டிங்களா?? ” அப்படின்னு அபல குரல் எடுத்து கூவினான்….

சரி குழந்த பய தான அப்படின்னு நம்ம்ம்பி… ஒரு நாலு பேரு கைய வேற தூக்கிட்டாங்க ….

அந்த பய அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா ??

“அந்த செகப்பு ரப்பர் பேண்ட் என் கிட்டதான் இருக்குன்னு ”  சொல்லிட்டான்மா… 😦 😦

விஷம் விஷம் ……

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் … இந்த கதைய நமக்கு SMS அனுப்பினது அருமை தம்பி மாதேஷ் தான்…. அதுனால எல்லா புகழும் அவருக்கே ….

2016 ல நம்ம ஆட்சி தான் May 12, 2011

Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நடந்தவை.
Tags: , , , , , , ,
9 comments

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தமிழ் நாட்டுல ரெண்டு கட்சி ஆட்சி தான் நடந்துகிட்டு இருக்கு – இப்ப மட்டும் உனக்கு ரொம்ப விவரம் தெரியுமான்னு கேட்க படாது …

அதாகப்பட்டது இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் 😦 (அய்யயோ நான் அந்த கருப்பு துண்டுகாரற சொல்லைங்கோ )

(more…)

Hang over – பாகம் 2! மறுபடியும் மொதல்ல இருந்தா May 10, 2011

Posted by anubaviraja in கிரிக்கெட், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , ,
2 comments

ஹாங் ஓவர் – அப்படின்னு ஒரு படம் , ரொம்ப நல்லா இருக்குன்னு நம்ப நண்பன் ஒருத்தர் சொன்னாரு – இந்த சம்பவம் நடந்தது சுமார் ஒரு ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி .. படத்த பார்த்து இப்படி எல்லாம் யோசிச்சி படம் எடுக்க முடியுமான்னு நானே ஆடி போயிட்டேன் … அசந்து போயிட்டேன் 😉 ….

கதை எல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, கல்யாணத்துக்கு முந்தின நாள் – பாச்சிலர் பார்ட்டி , காலையில எந்திரிச்சி பார்த்தா …. பாத்ரூம்ல புலி, பீரோல கொழந்த, ஒருத்தனுக்கு பல்ல காணோம் , கடைசில மாப்பிளையவே காணோம் …

இந்த பிரச்சனைய எல்லாம் எப்படி தீக்குறாங்க அப்படிங்கறது தான் மீதி கதை… திரை கதைல பட்டைய கேளப்பிருப்பாங்க …  விமர்சனம் படிக்க இங்க கிளிக்

இப்போ ரெண்டாவது பார்ட் வேற வருதாம் … இன்னும் ரணகளமா இருக்கும்ன்னு ட்ரைலர் பார்த்தா நிங்களே சொல்விங்க ….

சில படங்கள் பார்ட் டூ எடுத்தாலே கொஞ்சம் மொக்கையா தான் இருக்கும்…. இந்த படம் அப்படி இருக்காதுன்னு நம்புவோம் 🙂

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – நல்லா தான் இருக்கு May 8, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , ,
10 comments

வர வர சினிமா படம் எடுக்குரவங்க குறும்படம் எடுக்குரவங்க கலக்குறாங்க … இத பார்த்த உடனே .. நாமல்லாம் எவ்வளவு மக்கு பசங்களா இருக்கோம் அப்படின்னு நல்லா தெரியுதுல்ல??? ஓகே ஓகே என்சாய் 🙂 போய் புள்ளை குட்டிகளையாவது நல்லா படிக்க வைங்க

நான் ஏன் Android Phone வாங்கினேன்… May 7, 2011

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை.
Tags: , , ,
6 comments

எல்லாரும்  iPhone பத்தி அதிகமா பேசி பேசி என்னையும் , iPhone பங்காளி கூகிள் Android போன் வாங்க வச்சிட்டாங்க…. அப்படி அந்த போன்ல என்ன தான் இருக்குனா…

  • போற வழியிலேயே ஈமெயில் பார்க்கலாம் (எனக்கு வர ரெண்டு ஈமெயில் க்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்)
  • Map நல்லா வொர்க் ஆகுது – (Map Phone வச்சி தெரு தெரு வா பிச்சை எடுக்க போறியா?? – வாமனன் சந்தானம்)
  • நெறைய கேம்ஸ் இருக்கு (பச்ச கொழந்தை … வீடியோ கேம் வேலாடுது.. )
  • Facebook, Twitter எல்லாம் உடனே update பண்ணலாம் (இப்போ மட்டும் ?? )
  • கேமரா ஜீபீஎஸ்  எல்லாம் இருக்கு (மிக்சி , கிரைண்டர், பேன் எல்லாம் இருக்கா?? – அதான் அம்மா தர்றேன்னு சொல்லிருக்காங்களே பாஸ் ? )
  • ஆபீஸ் டாகுமென்ட்ஸ் எல்லாம் எடிட் பண்ணலாம் (ம்க்கும் .. ஆபீஸ்லையே ஒழுங்கா வேலை பாக்குரதில்ல.. )
  • புல் டச் ஸ்க்ரீன் மா – (ரெண்டாயிரம் ரூவா குடுத்து வாங்கினா கொரியா போன் ல கூட டச் இருக்கு … )
  • 512 ram, 666MHZ processor, 32 GB வரைக்கும் மெமரி இதெல்லாம் இருக்கு – (நான் வாங்குன மொத கம்ப்யூட்டர்ல கூட இவ்வளவு  இல்ல 😦 )
  • மொத்ததுல இது ஒரு ஸ்மார்ட் போன் (அதுக்கு நீ ஸ்மார்ட்டா இருக்கணும் தம்பி )

ப்ராக்கட் குள்ள இருக்குறதேல்லாம் இத படிச்சிட்டு நீங்க என்ன சொல்லுவிங்கன்னு உங்க மைன்ட் வாய்ஸ் நான் ரீட் பண்ணது 😉

அப்படி நான் என்ன போன் வாங்கினேன்னு கேக்குரிங்கள்ள ???

LG Optimus One – இது தான் நான் வாங்கின போன் . இந்த போன் வாங்கின நேரம் – இதுல மட்டும் தான் முங்கி போய் இருக்குறேன்.. இத பத்தின என்னோட அனுபவம் – அதிவிரைவில இன்னொரு பதிவில …

வர்ட்டா… 🙂 🙂

கோ படமும் – மதுரை ஏன் இப்படி இருக்கு? May 5, 2011

Posted by anubaviraja in நடந்தவை, மதுரை.
Tags: , , , , , , , ,
16 comments

கோ படத்துக்கு மொத நாளே போயிட்டு வந்தாச்சி … ஆனா இப்போ அது மேட்டர் கெடயாது …. இந்த படத்துல ஒரு ஈரோயினி நடிச்சிருகாங்களே அவங்க அம்மா தான் நம்ப பழைய ராதாவாம். அதுக்கென்ன ? அதான் எல்லாருக்கும் தெரியுமே அப்படின்னு சொல்றிங்களா ?? இருங்க … ஏன் இந்த அவசரம் விசயத்துக்கு வரேன் … இப்போ கீழ இருக்குற படத்த நல்லா பாருங்க …

இப்போ சொல்லுங்க – எங்க ஆபீஸ்க்கு எதிர்க்க இருக்குற தியேட்டர் ல இந்த பேனர் வச்சிருக்காங்களே .. இத எப்படி ஒரு மனுஷன் கண் கொண்டு பாக்குறது ?? … என்ன கொடுமை சார் இது 😦 😦

ஸ்பெக்ட்ரம் – முடிவு தான் என்ன? May 4, 2011

Posted by anubaviraja in அரசியல், ரசித்தவை.
Tags: , , , , ,
2 comments

எல்லாருக்கும் வணக்கம், திரும்பவும் வந்தாச்சி 🙂

இப்போ நம்ம ராக்கெட் ராஜா விஜய் டிவி ல ஓடுறார் … கேபிள் ராஜா வானத்துல ஓடுறார் …. ஸ்பெக்ட்ரம் ராசா திஹார்ல இருக்கார் ஆனா ஸ்பெக்ட்ரம் கேஸ் என்ன பா ஆகும்??

நம்ம தினமலர்ல ஒரு கார்ட்டூன் போட்ருக்காங்க … இப்படி தான் இந்த நாடாளுமன்ற கூட்டு குழு முடிவு இருக்கும் போல 😦

நெக்ஸ்ட் மீட் பண்ணலாமா  ??