jump to navigation

நித்யானந்தா.. தோனி .. சானியா.. சசி தரூர் .. மற்றும் பலர் May 5, 2010

Posted by anubaviraja in கிரிக்கெட், சினிமா, தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , , , ,
3 comments

என்னடா தலைப்பு ஒரு மாதிரியா இருக்கேன்னு பாக்குரிங்கலா?? ஒண்ணுமில்லை சும்மா நமக்கு ரிசெண்டா பிடிச்ச செய்திகள பத்தி ஒரு Mixed பதிவு …

சென்னை சூப்பர் கிங்க்ஸ் IPL சாம்பியன்:

ஒரு வழியா மூணு செமி பைனல் பார்த்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீம் கோப்பைய வாங்கிட்டாங்க …. (ஒரு வேளை “அதிகமா அடிவாங்குனது நாங்க தான் … அதுனால கோப்பை எங்களுக்கு தான் சொந்தம்” அப்படின்னு தலை பாணில பேசி தோனி கப்ப வாங்கிட்டு வ்ந்துட்டரோ ??? )எனக்கு என்னோமோ ரொம்ப சந்தேகமா தான் இருக்கு … பிரெண்ட் ஒருத்தர் சொன்னாரு …

  • ரைனாவுக்கு  ரெண்டு கேட்ச் மிஸ் பண்ணங்க
  • மும்பை டீமோட பீடிங் படு மட்டம்
  • ஹர்பஜன் மூணாவதா ஏறங்கினது
  • போலார்ட் லேட்டா ஏறங்கினது

இப்படி பல காரணம் …. IPL  பல்லாயிரக்கணக்கான கோடி ருபாய் புழங்குது அப்படிங்கறப்பவே நான் மைல்டா டவுட் ஆனேன் 😉  . வினவோட இந்த பதிவ படிச்சி பாருங்க .. கிரிக்கெட்டே வெறுத்து போகும்.. என்னது நான் இப்போ எனா பண்றேனா ? crickinfo சைட்ல 20-20 ஸ்கோர் பார்த்துகிட்டு இருக்கேன் .. ஹி ஹி ஹி …

20-20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ல் இந்தியா:

ஒரு வழியா இந்த தடவை ரன் ரேட் … கடைசி பால் வரைக்கும் போராடுறது .. இப்படி எதுவுமே இல்லாம அடுத்த ரௌண்டுக்குள்ள போய்ட்டாங்க…. ஹ்ம்ம் … பார்க்கலாம் இந்தத்தடவை எப்படின்னு ..

ரைனா சூப்பர் பார்ம்ல இருக்கார் .. யுவராஜ் மட்டும் கொஞ்சம் கை குடுத்தா போதும் கோப்பை நமக்கு தான் …

சுறா……………….

பாவம் பா அந்த பச்சை புள்ளை .. அவருக்கு என்ன வருமோ அத மட்டும் செஞ்சிட்டு போறாரு .. அதுக்கு அவர குத்தம் சொல்லி என்ன பண்ணுறது … “அந்த கொழந்தையே  நீங்க தான் சார் ” அப்படிங்கற ரேஞ்சில பில்ட் அப்  குடுக்குற டைரக்டர்களை மொதல்ல டிக்கெட் எடுத்து சஹாரா பாய்வனதுக்கு அனுப்பி விடனும் .. ஏன்னா இங்க வெயில் கம்மியா இருக்கு பாருங்க … 😉

இருந்தாலும் எனக்கு இன்னொரு விசயத கேள்விபட்டதுல இருந்து ரெண்டு  வாரமா சரியா தூக்கமே வரலை … என்னன்னா 3 Idiots படத்துல அமீர் கான் நடிச்ச காரெக்டர்ல  விஜய் நடிக்கிராராமே  ?? “என்ன கொடுமை சார் இது … ” விஜய் .. உங்க ஸ்டைல்லேயே நடிச்சிட்டு போங்களேன் …  இதெல்லாம் இந்த விக்ரம் , சூர்யா , இத மாதிரி சின்ன பசங்க நடிச்சிட்டு போகட்டுமே .. ப்ளீஸ்

சானியா பொண்ணுக்கு கல்யாணம் ஆயிரிச்சி:

ரைட் விடும்மா .. இனிமே நீ என் தங்கச்சி மாதிரி …  அப்புறம் எனக்கு ஒரே ஒரு டவுட் … ஷோயப் மாலிக் கிட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்னம்மா ??  இன்னும் கொஞ்சம் பர்சனாலிட்டியா  செலக்ட் பண்ணிருக்கலாம்… எதனை பேரு சிக்ஸ் பாக்ஸ் வச்சிக்கிட்டு கும்முன்னு சுத்திகிட்டு இருக்காங்க ??? சரி சரி காதல் ஹாஸ் நோ ஐஸ் 😉

சசி தரூர் – லலித் மோடி … Twitter:

இது தாங்க செம்ம காமெடி கதை .. நூறு ருபாய் திருடிணவனே தேள் கடிச்சா கத்த முடியாம நிக்கிரப்போ .. மிஸ்டர் மோடி செவனேன்னு இருந்திருக்கலாம்ல ??? எனக்கும் Twitter Account இருக்கு நானும் Twitt பண்ணுவேன்னு சசி தரூர இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கலாம்ன்னு நெனைசார்… இப்போ உன்னால நான் கெட்டேன் … என்னால நீ கெட்ட… அப்படிங்கற கதை ஆயிரிச்சி … ஒருத்தர் மந்திரி பதவி போய் உட்கார்ந்டுருக்குறார் … இன்னொருத்தர் பதவிக்கு தலைக்கு மேல கத்தி தொங்குது … அப்புறம் நமக்கு ஈன இந்த தேவை இல்லாத வேலை ?? ரைட் உங்க பதில் என்ன சொல்ல போறிங்கன்னு தெரியும் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தான” 😉

Social Media அப்படின்னு சொல்ல படும்  Twitter தளத்தோட பவர் என்ன அப்படிங்கறத இந்திய மக்களுக்கு இந்த நிகழ்ச்சி எடுத்து காட்டிருக்கு … FaceBook, Twitter, Orkut.. இப்படி இணையத்துல இருக்குற முக்கியமான தளங்கள் எல்லாம் இந்திய மக்களை எப்படி எல்லாம் ஆட்டிபடைக்குது அப்படின்னு கூடிய சிக்கிரம் ஒரு பதிவுல சந்திப்போம் …

பெண்கள் சிறைக்குள் நித்யானந்தா

அட ராமா .. என்னடா நடக்குது இங்க ….

எனக்கு டெஸ்ட் பண்ணி பாருங்க அப்படின்னு சொன்னார் அதுக்காகவா ??? – இருக்காது அவருதான் ரஞ்சி மேடம் குடுத்த மில்க் டிரிங்க குடிச்சிட்டு துள்ளி  குதிச்சத பார்த்தோமே ..

பூஜை பண்ணுறதுக்கு வசதியா இருக்கும் அதுக்காகவா ???  – ஏங்க அவர ஜெயில்க்கு  அனுப்பிருக்கிங்களா இல்லை கடவுள் சேவை பண்ணுறதுக்கு அனுப்பிருக்கிங்கலா ???

ஆண்கள் சிறையில எடம் இல்லைன்னு சொல்லுறாங்க … ஹ்ம்ம்.. நம்புவோம் .. நம்பி தான ஆகணும் 😉

ராவன் படத்தோட ட்ரைலர்… May 2, 2010

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
1 comment so far

நான் ரொம்ப ஆவலோட எதிர்பாக்குற படங்கள்ல இதுவும் ஒண்ணு. தளபதி படத்துல மகாபாரத கதைய எடுத்து ஒரு நல்ல படத்த குடுத்த மணிரத்னம் இந்த படத்த எப்படி எடுதுருக்கார்ன்னு பார்க்கலாம் :). அப்புறம் நமக்கு ஹிந்தில பிடிச்ச ஹீராகல்ல ஒருத்தரான அபிஷேக் பச்சன் வேற நடிக்கிறார் , விக்ரம் முதல முதல்ல ஹிந்தில நடிக்கிறார் … இப்படி படத்து மேல பல எதிர்பார்ப்புகள் …

அப்புறம் இன்னொரு விஷயம் இந்த மலை மேல இருந்து குதிக்கிற சீன்ல டூப் போடாம அபிஷேக் அவரே குதிச்சாராம்… ம்ம்ம்… அவரே ரொம்ப உயரம் .. அதுனால பயம் இருந்திருக்காதோ?? 😉

விக்ரம் நீங்க என்ன பண்ணிருக்கிங்க?? தமிழ் ட்ரைலர் பார்க்க ஆவலோட இருக்கோம்…