jump to navigation

நான் ஏன் Android Phone வாங்கினேன்… May 7, 2011

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை.
Tags: , , ,
6 comments

எல்லாரும்  iPhone பத்தி அதிகமா பேசி பேசி என்னையும் , iPhone பங்காளி கூகிள் Android போன் வாங்க வச்சிட்டாங்க…. அப்படி அந்த போன்ல என்ன தான் இருக்குனா…

  • போற வழியிலேயே ஈமெயில் பார்க்கலாம் (எனக்கு வர ரெண்டு ஈமெயில் க்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்)
  • Map நல்லா வொர்க் ஆகுது – (Map Phone வச்சி தெரு தெரு வா பிச்சை எடுக்க போறியா?? – வாமனன் சந்தானம்)
  • நெறைய கேம்ஸ் இருக்கு (பச்ச கொழந்தை … வீடியோ கேம் வேலாடுது.. )
  • Facebook, Twitter எல்லாம் உடனே update பண்ணலாம் (இப்போ மட்டும் ?? )
  • கேமரா ஜீபீஎஸ்  எல்லாம் இருக்கு (மிக்சி , கிரைண்டர், பேன் எல்லாம் இருக்கா?? – அதான் அம்மா தர்றேன்னு சொல்லிருக்காங்களே பாஸ் ? )
  • ஆபீஸ் டாகுமென்ட்ஸ் எல்லாம் எடிட் பண்ணலாம் (ம்க்கும் .. ஆபீஸ்லையே ஒழுங்கா வேலை பாக்குரதில்ல.. )
  • புல் டச் ஸ்க்ரீன் மா – (ரெண்டாயிரம் ரூவா குடுத்து வாங்கினா கொரியா போன் ல கூட டச் இருக்கு … )
  • 512 ram, 666MHZ processor, 32 GB வரைக்கும் மெமரி இதெல்லாம் இருக்கு – (நான் வாங்குன மொத கம்ப்யூட்டர்ல கூட இவ்வளவு  இல்ல 😦 )
  • மொத்ததுல இது ஒரு ஸ்மார்ட் போன் (அதுக்கு நீ ஸ்மார்ட்டா இருக்கணும் தம்பி )

ப்ராக்கட் குள்ள இருக்குறதேல்லாம் இத படிச்சிட்டு நீங்க என்ன சொல்லுவிங்கன்னு உங்க மைன்ட் வாய்ஸ் நான் ரீட் பண்ணது 😉

அப்படி நான் என்ன போன் வாங்கினேன்னு கேக்குரிங்கள்ள ???

LG Optimus One – இது தான் நான் வாங்கின போன் . இந்த போன் வாங்கின நேரம் – இதுல மட்டும் தான் முங்கி போய் இருக்குறேன்.. இத பத்தின என்னோட அனுபவம் – அதிவிரைவில இன்னொரு பதிவில …

வர்ட்டா… 🙂 🙂

அண்மை செய்திகளும்.. அவற்றை கலாய்த்தலும்… March 21, 2010

Posted by anubaviraja in செய்திகள், நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
add a comment

கொஞ்சம் நாளா நெறைய பரபரப்பு செய்திகளா வந்துகிட்டு இருக்கு .. அதெல்லாம் நம்ப விமர்சனம் பண்ணலேன்னா யாரு பண்ணுறது 🙂 .. (சிங்கம் களம் எறங்கிரிச்சி .. அப்படின்னு என்னைய உசுப்பேத்துற வேலை எல்லாம் வேண்டாம் … ஆமா… ) சரி நம்ம தான் முடிவு பண்ணிட்டா டைனோசர் இருக்குற காட்டுக்குள்ள கூட வான்டடா போய் டரியல் ஆகுறவங்கலாச்சே , ஆரம்பிப்போம் …

முதல்ல நம்ப நித்யானந்தா சுவாமிகள் – நம்பள மாதிரி சின்ன கொழந்தைகளுக்கு எல்லாம் சுவாமிஜி யோட ஆன்மிக பரிசோதனைகள் 😮 புரியாதுங்கறதால

ஒரு வரி பஞ்ச் மட்டும் தான் “கதவை திற காற்று வரட்டும் அப்படின்னு சொன்னார் – இவனுக வீடியோ பிடிசிட்டங்க – ராஸ்கல்ஸ்

அப்புறம் IPL – அடங்கப்பா “என்ன டா நடக்குது இங்க ??” ஒரு டீமோட விலை 1700 கோடியாம்.

டேய் இத வச்சி நம்ம கலைஞர் இந்தியால இருக்குற எல்லாருக்கு இலவச கலர் டிவி வாங்கி குடுத்துருப்பாரே 😦

அப்புறம் நாம அப்படியே உ பி பக்கம் போவோம் …  மாயாவதி மேடம்க்கு ஆயிரம் ருபாய் நோட் வச்சி மாலை போட்டங்கலாம் .. அது ஒரு குற்றமாம் …

நாங்கலாம் கட்டவுட்டுக்கே ஐநூறு ருபாய் மாலை போடுரவணுக .. இதுக்கு போய் வரமான வரி சோதனையா – சத்ய சோதனை 😦

யுவராஜ் சிங் என் தம்பி மாதிரி – பிரீத்தி ஜிந்தா

பயபுள்ள வடை போச்சேன்னு உக்காந்திருப்பானே – (அக்கா தம்பி பாசம் ஜாஸ்தியா இருக்கு – பஞ்சாபுக்கு ஒரு ரெண்டு கிலோ ப்ளீசிங் பவுடர் பார்சல்ல்ல்… )

பங்கேற்றோர் பாராட்டுகளோடு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்தது “ட்விட்டர் கேம்ப்” -மக்கள் அமோக ஆதரவு…

என்னடா இது சம்பந்தம் இல்லாம ஒரு செய்தின்னு பாக்குறிங்களா ?? இது எங்க கம்பெனி நடத்துன Event – (ஒரு விளம்பரம் 😉 )

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது … உங்கள் தோழன் ராஜா… 🙂

மக்கா மதுரைக்கு வந்துட்டோம்ல…. March 18, 2010

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை, மதுரை.
Tags: , , , ,
2 comments

சிங்கார சென்னைல  ஒரு ரெண்டரை வருஷம் வேலை பார்த்து முடிச்சாச்சி. இப்போ மதுரையிலேயே ஒரு கம்பெனியில வேலை கெடைச்சி (சென்னைல என்ன வேலை பார்த்தேனோ அதே வேலை தாங்க – சென்னைல மட்டும் நீ என்ன விழி பார்த்து கிழிச்ச அப்படிங்கற உங்க மைன்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன் ) இங்க வந்து செட்டில் ஆயாச்சி.

இங்க வந்து நான் இன்டர்நெட் connection வாங்குறதுக்கு பட்ட பாட இன்னொரு போஸ்ட் போடணும் 😦 . ஒரு வழியா பாச்சிலருக்கு  மட்டும் வீடு குடுக்குற விட்டுக்காரர மதுரைல தேடி கண்டு பிடிச்சி, வாரநாட்கள்ல மதுரைலயும், சனி ஞாயிறு சாத்துர்லையும் பொழுது நல்ல போகுது. என்ன… சென்னையையும் சென்னை மக்களையும் ரொம்ப மிஸ் பண்ணிறேன். இங்க இது வரைக்கும் தனியா தான் இருக்கேன் , கூடிய சிக்கிரம் ஒரு ரூம் மேட் கண்டுபிடிக்கணும்.

மதுரைல நான் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் “பைக் ஓட்டுறது ” . (ஏற்கனவே எனக்கு அரை கொறையா தான் ஒட்டதெரியும் அப்படிங்கறது வேற விஷயம் 😉 ) உசிர கைல பிடிச்சிகிட்டு தான் ஓட்ட வேண்டியது பாஸ்.. திடீர்  திடிர்ன்னு சைக்கிள் , கை வண்டி , பாத சாரிகள் இப்படின்னு பாரபட்சம் பார்க்காம குறுக்க புகுந்டுட்றாங்க. அப்புறம் இந்த சிக்னல் அப்படின்னு ஒன்னு ரோட்ல இருக்கு அத பல சமயம் யாருமே மதிக்க மாட்டிக்கிறாங்க. ரைட் விடுங்க .. இது ஏற்கனவே நம்ப தலை சொன்ன மாதிரி இது “ரத்த பூமி தான.. ”   .

போக்குறதுக்கு பொழுது நெறையா இருக்குறதுனால இனிமே என்னோட பதிவுகள் அப்படிங்கற இம்சைகல அடிக்கடி சந்திக்க தயாரா இருங்க ..
வர்ட்டா.. 😉