jump to navigation

விழியை விற்று… March 30, 2014

Posted by anubaviraja in Uncategorized.
add a comment

உச்சிப் பொழுதின் நெடுஞ்சாலை பயணம் உணர்த்திச் செல்கிறது…
இருபுறமும் வெட்டப்பட்ட மரங்களின் அருமையை..

image

தெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback! March 29, 2014

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , , ,
3 comments

2011 எலெக்சன்ல தெரியாத்தனமா வாய்ஸ் குடுக்க போய் … நம்ம தலைய ஒரு மூணு வருஷம் வீட்ல சும்மா உட்கார வச்சிட்டாங்க.

 

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை மாதிரி.. யாராரோ காமடி பண்ண முயற்சி பண்றாங்க, அதுல பாருங்க நமக்கு சிரிப்பே வர மாட்டேங்குது.. சந்தானம் இப்போ கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சிட்டார் ..  மிக்க ஆவலோட எதிர் பார்த்த ட்ரெய்லர் வந்துரிச்சி..

 

பன்ச் டயலாக் என்னனா …

 

ஒருவன் லட்சியம் நிறைவாகும் வரையிலும் மறைவாக இருப்பது தான் நல்லது.. இது உலகின் அனைத்து போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா 🙂

 

 

தெனாலிராமா உனது வருகையை கோலாகலமாகக் கொண்டாட வேண்டும்!

 

(கொஞ்சம் இந்திரலோகத்தில் அழகப்பன் வாடை அடிக்கிதோ? 😦  … இருக்காதுன்னு நம்புவோம்!)

தமிழனென்று சொல்லடா.. March 18, 2014

Posted by anubaviraja in அரசியல், கவிதை, தமிழ்.
Tags: , , , , ,
add a comment

குடிமகன்

குறிஞ்சியிலே வெடி வெடித்து மலைகளெல்லாம் மாயமாம்..

முல்லையிலே மரமறுத்து சிறு பறவையும் காணோமாம்..

மருதமெங்கும் எரிவாயுக்கு வயலெல்லாம் வேணுமாம்..

உயிரோடு கடலாடி போய்வரல்  நெய்தலெங்கும் தான் அரிதாம்..

காணி நிலம் கிடையாது  பாரதி .. இனி உன் நாடு பாலை நிலம் தான்..

மாண்புமிக்க தமிழினத்தில்..இப்போது வந்து பிறந்ததால்…

மதுபான மணம் தவிர வேறெதுவும் யாமறியோம் பராபரமே…