jump to navigation

மற்றும் ஒரு பேருந்து பயணம் September 22, 2019

Posted by anubaviraja in Uncategorized.
1 comment so far

பயணங்கள் மனிதனுக்கு கொடுக்கும் அனுபவங்கள் பெரும்பாலானவை வாழ்க்கை பாடங்கள் தான். காது, கண்களை திறந்து வைத்து கவனித்தால் ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம். கற்றுக்கொள்ள கோடி உண்டு. இன்றைய அரசு பேருந்து பயணம் அவ்வாறான ஒரு அனுபவமே.குடும்பம் சகிதமாக பயணம், உச்சி வெயில், இடை இடையே மழை சாரலில் நனைத்து பேருந்து விரைந்து சென்று கொண்டிருந்த வேலை.எங்கள் இருக்கைக்கு இடது புறம் 45 வயது மதிக்க தக்க ஒருவர் வந்து அமர்ந்தார். பார்த்த உடனே நட்புடன் பேச கூடிய சுபாவம் போன்ற தோற்றம். என் மகனை ஸ்நேகமாக பார்த்து இரண்டு மிட்டாய்களை கையில் திணித்தார். புன்னகையுடன், நன்றி சொல்லி வாங்கிய போதும் மகனை அந்த மிட்டாயை உடனே சாப்பிட சொல்ல மனம் வரவில்லை. Breaking news அடிக்கடி பார்க்கும்போது ஏற்படும் சக மனிதர் மீது ஏற்படும் அவ நம்பிகை தாம். பாதுகாப்பு காரணம் குறித்து பாண்ட் பையில் அடைக்க பட்டது அந்த மிட்டாய்.பின்னர் என் மகன் கையில் விளையட கொடுக்க பட்டு இருந்த ஓர் வெளிநாட்டு நாணயம், தவறி கீழே விழுந்தது போலும். நாங்கள் யாரும் கவனிக்கவில்லை. திடுமென எங்கள் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டு வந்த ஒருவர், நம்மவரை அழைத்து எங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் ஓர் நாணயத்தை எடுத்து தர வேண்டும் என்று சொல்லுகிறார்.அவரும் அதை எடுத்து கொடுக்க, சட்டென திரும்பிய என் கண்னில் பட்டது அந்த நாணயம்.அந்த நபரை ஒரு நோட்டம் விட்டேன். 40 வயதிருக்கும். நரைத்த சிகை, நெற்றி நிறைய குங்குமம்.. பெரிய மனித தோரணை.. ஏதேனும் பிரச்சனை என்றால் அவமானம் தங்கும் தோற்றம் இல்லை. உள்ளூர ஒரு புன்சிரிப்போடு, அந்த தருணத்தை கடந்தேன்..

(இளிச்சவாய்தனமா? தெரியவில்லை 🙂)

அந்த மனிதரின் நாணயத்தை பாரிசோதித்து அவர் சட்டை பையில் அமைதியாக அந்த வெளிநாடு நாணயம். பிறகு சாப்பிடலாம் என்ற நம்பிக்கையில் என் மகன் பையில் அந்த மிட்டாய்!